Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௪௩

Qur'an Surah Al-'Ankabut Verse 43

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِۚ وَمَا يَعْقِلُهَآ اِلَّا الْعَالِمُوْنَ (العنكبوت : ٢٩)

watil'ka
وَتِلْكَ
And these
இந்த
l-amthālu
ٱلْأَمْثَٰلُ
examples
உதாரணங்கள்
naḍribuhā
نَضْرِبُهَا
We set forth
அவற்றை நாம் விவரிக்கிறோம்
lilnnāsi
لِلنَّاسِۖ
to mankind
மக்களுக்கு
wamā yaʿqiluhā
وَمَا يَعْقِلُهَآ
but not will understand them
இவற்றை சிந்தித்து புரியமாட்டார்கள்
illā
إِلَّا
except
தவிர
l-ʿālimūna
ٱلْعَٰلِمُونَ
those of knowledge
அறிஞர்களை

Transliteration:

Wa tilkal amsaalu nadribuhaa linnaasi wa maa ya'qiluhaaa illal 'aalimoon (QS. al-ʿAnkabūt:43)

English Sahih International:

And these examples We present to the people, but none will understand them except those of knowledge. (QS. Al-'Ankabut, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

மனிதர்களுக்காகவே இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம். (சிந்தித்து அறியக்கூடிய) ஞானமுடையவர்களைத் தவிர (மற்றெவரும்) இதனை உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௪௩)

Jan Trust Foundation

இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இந்த உதாரணங்கள் -அவற்றை நாம் மக்களுக்கு விவரிக்கின்றோம். அறிஞர்களைத் தவிர (மற்றவர்கள்) இவற்றை சிந்தித்து புரியமாட்டார்கள்.