Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௪௧

Qur'an Surah Al-'Ankabut Verse 41

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَثَلُ الَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِيَاۤءَ كَمَثَلِ الْعَنْكَبُوْتِۚ اِتَّخَذَتْ بَيْتًاۗ وَاِنَّ اَوْهَنَ الْبُيُوْتِ لَبَيْتُ الْعَنْكَبُوْتِۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ (العنكبوت : ٢٩)

mathalu
مَثَلُ
(The) example
உதாரணம்
alladhīna
ٱلَّذِينَ
(of) those who
எவர்கள்
ittakhadhū
ٱتَّخَذُوا۟
take
ஆக்கிக் கொண்டனர்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
besides besides Allah
அல்லாஹ்வையன்றி
awliyāa
أَوْلِيَآءَ
protectors
பாதுகாவலர்களாக
kamathali
كَمَثَلِ
(is) like
உதாரணத்தைப் போல
l-ʿankabūti
ٱلْعَنكَبُوتِ
the spider
சிலந்தியின்
ittakhadhat
ٱتَّخَذَتْ
who takes
அது ஆக்கிக் கொண்டது
baytan
بَيْتًاۖ
a house
ஒரு வீட்டை
wa-inna
وَإِنَّ
And indeed
நிச்சயமாக
awhana
أَوْهَنَ
the weakest
மிக பலவீனமானது
l-buyūti
ٱلْبُيُوتِ
(of) houses
வீடுகளில்
labaytu
لَبَيْتُ
(is) surely (the) house
வீடே
l-ʿankabūti
ٱلْعَنكَبُوتِۖ
(of) the spider
சிலந்தியின்
law kānū yaʿlamūna
لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
if (only) they know
அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

Transliteration:

Masalul lazeenat takhazoo min doonil laahi awliyaaa'a kamasalil 'ankaboot, ittakhazat baitaa; wa inna awhanal buyooti la baitul 'ankaboot; law kaanoo ya'lamoon (QS. al-ʿAnkabūt:41)

English Sahih International:

The example of those who take allies other than Allah is like that of the spider who takes [i.e., constructs] a home. And indeed, the weakest of homes is the home of the spider, if they only knew. (QS. Al-'Ankabut, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வையன்றி (மற்றவைகளைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்: நூலாம் பூச்சி கட்டிய வீட்டை(த் தாங்கள் வசிக்க எடுத்துக் கொண்டவர்களின் உதாரணத்தை) ஒத்திருக்கின்றது. வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக நூலாம் பூச்சியின் வீடுதான். (நூலாம் பூச்சியின் வீடு இவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியாதோ அவ்வாறே இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்ட தெய்வங்களாலும் இவர்களை பாதுகாக்க முடியாது. இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௪௧)

Jan Trust Foundation

அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை அன்றி (சிலைகளையும் இறந்தவர்களையும் தங்களுக்கு) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்தியின் உதாரணத்தைப் போல. அது (தனக்கு) ஒரு வீட்டை ஆக்கிக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிக பலவீனமானது சிலந்தியின் வீடே. அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!