Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௩௬

Qur'an Surah Al-'Ankabut Verse 36

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًاۙ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ وَارْجُوا الْيَوْمَ الْاٰخِرَ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ ۖ (العنكبوت : ٢٩)

wa-ilā madyana
وَإِلَىٰ مَدْيَنَ
And to Madyan
இன்னும் ‘மத்யன்’க்கு
akhāhum
أَخَاهُمْ
their brother
சகோதரர் அவர்களுடைய
shuʿayban
شُعَيْبًا
Shuaib
ஷுஐபை
faqāla
فَقَالَ
And he said
அவர் கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
"O my people!
என் மக்களே!
uʿ'budū
ٱعْبُدُوا۟
Worship
வணங்குங்கள்!
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wa-ir'jū
وَٱرْجُوا۟
and expect
இன்னும் ஆதரவு வையுங்கள்!
l-yawma
ٱلْيَوْمَ
the Day
நாளை
l-ākhira
ٱلْءَاخِرَ
the Last
மறுமை
walā taʿthaw
وَلَا تَعْثَوْا۟
and (do) not commit evil
வரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
muf'sidīna
مُفْسِدِينَ
(as) corrupters"
தீயவர்களாக இருந்து

Transliteration:

Wa ilaa Madyana akhaahum Shu'ayban faqaala yaa qawmi'-budul laaha warjul yawmal aakhira wa laa ta'saw fil ardi mufsideen (QS. al-ʿAnkabūt:36)

English Sahih International:

And to Madyan [We sent] their brother Shuaib, and he said, "O my people, worship Allah and expect the Last Day and do not commit abuse on the earth, spreading corruption." (QS. Al-'Ankabut, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

மத்யன்வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். இறுதி நாளை எதிர்பார்த்திருங்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்" என்று கூறினார். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௩௬)

Jan Trust Foundation

மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்| “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் ‘மத்யன்’(ஊர் வாசிகளு)க்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் அனுப்பினோம்). அவர் கூறினார்: என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்! மறுமை நாளை ஆதரவு வையுங்கள்! பூமியில் தீயவர்களாக இருந்து வரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்.