குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௩௩
Qur'an Surah Al-'Ankabut Verse 33
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَمَّآ اَنْ جَاۤءَتْ رُسُلُنَا لُوْطًا سِيْۤءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالُوْا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۗاِنَّا مُنَجُّوْكَ وَاَهْلَكَ اِلَّا امْرَاَتَكَ كَانَتْ مِنَ الْغٰبِرِيْنَ (العنكبوت : ٢٩)
- walammā an jāat
- وَلَمَّآ أَن جَآءَتْ
- And when [that] came
- வந்த போது
- rusulunā
- رُسُلُنَا
- Our messengers
- நமது தூதர்கள்
- lūṭan
- لُوطًا
- (to) Lut
- லூத்திடம்
- sīa
- سِىٓءَ
- he was distressed
- அவர் மனம் புண்பட்டார்
- bihim
- بِهِمْ
- for them
- அவர்களால்
- waḍāqa
- وَضَاقَ
- and felt straitened
- இன்னும் அவர் நெருக்கடிக்கு உள்ளானார்
- bihim
- بِهِمْ
- for them
- அவர்களால்
- dharʿan
- ذَرْعًا
- (and) uneasy
- மன
- waqālū
- وَقَالُوا۟
- And they said
- அவர்கள் கூறினார்கள்
- lā takhaf
- لَا تَخَفْ
- "(Do) not fear
- பயப்படாதீர்
- walā taḥzan
- وَلَا تَحْزَنْۖ
- and (do) not grieve
- இன்னும் கவலைப்படாதீர்!
- innā
- إِنَّا
- Indeed we
- நிச்சயமாக நாம்
- munajjūka
- مُنَجُّوكَ
- (will) save you
- உம்மைபாதுகாப்போம்
- wa-ahlaka
- وَأَهْلَكَ
- and your family
- உமது குடும்பத்தையும்
- illā
- إِلَّا
- except
- தவிர
- im'ra-ataka
- ٱمْرَأَتَكَ
- your wife
- உமது மனைவியை
- kānat
- كَانَتْ
- She
- அவள்ஆகிவிடுவாள்
- mina l-ghābirīna
- مِنَ ٱلْغَٰبِرِينَ
- (is) of those who remain behind
- மீதம் இருப்பவர்களில்
Transliteration:
Wa lammaaa an jaaa'at Rusulunaa Lootan seee'a bihim wa daaqa bihim zar'anw wa qaaloo laa takhaf wa laa tahzan innaa munajjooka wa ahlaka illam ra ataka kaanat minal ghaabireen(QS. al-ʿAnkabūt:33)
English Sahih International:
And when Our messengers [i.e., angels] came to Lot, he was distressed for them and felt for them great discomfort. They said, "Fear not, nor grieve. Indeed, we will save you and your family, except your wife; she is to be of those who remain behind. (QS. Al-'Ankabut, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
பின்னர் நம்முடைய (அத்)தூதர்கள் லூத் (நபி) இடம் வந்தபொழுது, (அவ்வூரார் தீய எண்ணத்துடன் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அப்போது) அவர், (அந்த மலக்குகளை பாதுகாத்துகொள்ள) தன் கையால் ஒன்றும் செய்ய முடியாமல், அவர்களுக்காகத் துக்கித்தார். அதற்கவர்கள், (அவரை நோக்கி) "நீங்கள் அஞ்ச வேண்டாம்; துக்கிக்கவும் வேண்டாம். (நாம் இவ்வூராரை அழித்துவிட உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மலக்குகளாவோம்.) நிச்சயமாக நாம் உங்களையும், உங்களுடைய மனைவியைத் தவிர, உங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வோம். அவள் (உங்களுடன் வராது, இவ்வூராருடன்) தங்கி (அழிந்து) விடுவாள்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௩௩)
Jan Trust Foundation
இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நமது (வானவத்) தூதர்கள் (நபி) லூத்திடம் வந்த போது அவர்களால் அவர் மனம் புண்பட்டார். இன்னும் அவர்களால் அவர் மன நெருக்கடிக்கு உள்ளானார். (சிரமத்திற்கு உள்ளானார்.) அவர்கள் (வானவர்கள்) கூறினார்கள்: பயப்படாதீர்! இன்னும் கவலைப்படாதீர்! நிச்சயமாக நாம் உம்மையும் உமது குடும்பத்தையும் பாதுகாப்போம் உமது மனைவியைத் தவிர. அவள் மீதம் இருப்பவர்களில் ஆகிவிடுவாள். (பின்னர் தண்டனையில் சிக்கி அழிந்து விடுவாள்.)