Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௩௧

Qur'an Surah Al-'Ankabut Verse 31

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَّا جَاۤءَتْ رُسُلُنَآ اِبْرٰهِيْمَ بِالْبُشْرٰىۙ قَالُوْٓا اِنَّا مُهْلِكُوْٓا اَهْلِ هٰذِهِ الْقَرْيَةِ ۚاِنَّ اَهْلَهَا كَانُوْا ظٰلِمِيْنَ ۚ (العنكبوت : ٢٩)

walammā jāat
وَلَمَّا جَآءَتْ
And when came
வந்த போது
rusulunā
رُسُلُنَآ
Our messengers
நமது தூதர்கள்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
(to) Ibrahim
இப்ராஹீமிடம்
bil-bush'rā
بِٱلْبُشْرَىٰ
with the glad tidings
நற்செய்தியுடன்
qālū
قَالُوٓا۟
they said
அவர்கள் கூறினார்கள்
innā
إِنَّا
"Indeed we
நிச்சயமாக நாங்கள்
muh'likū
مُهْلِكُوٓا۟
(are) going to destroy
அழிக்கப் போகிறோம்
ahli
أَهْلِ
(the) people
வசிப்பவர்
hādhihi
هَٰذِهِ
(of) this
இந்த
l-qaryati
ٱلْقَرْيَةِۖ
town
ஊரில்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
ahlahā
أَهْلَهَا
its people
இதில் வசிப்பவர்கள்
kānū
كَانُوا۟
are
இருக்கின்றனர்
ẓālimīna
ظَٰلِمِينَ
wrongdoers"
தீயவர்களாக

Transliteration:

Wa lammaa jaaa'at Rusulunaaa Ibraaheema bil bushraa qaalooo innaa muhlikoo ahli haazihil qaryati inna ahlahaa kaanoo zaalimeen (QS. al-ʿAnkabūt:31)

English Sahih International:

And when Our messengers [i.e., angels] came to Abraham with the good tidings, they said, "Indeed, we will destroy the people of that [i.e., Lot's] city. Indeed, its people have been wrongdoers." (QS. Al-'Ankabut, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

(மலக்குகளாகிய) நம்முடைய தூதர்கள், இப்ராஹீமுக்கு நற்செய்தி கூற அவரிடம் வந்த சமயத்தில் (அவரை நோக்கி "லூத்துடைய) ஊராரை நிச்சயமாக நாங்கள் அழித்து விடுவோம். ஏனென்றால், நிச்சயமாக அவ்வூரார் (பாவம் செய்வதில் எல்லை கடந்து) அநியாயக் காரர்களாக ஆகிவிட்டார்கள்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௩௧)

Jan Trust Foundation

நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள் இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நமது (வானவத்) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியுடன் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் இந்த ஊரில் வசிப்பவர்களை அழிக்கப் போகிறோம். நிச்சயமாக இதில் வசிப்பவர்கள் தீயவர்களாக இருக்கின்றனர்.”