Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௨௯

Qur'an Surah Al-'Ankabut Verse 29

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَىِٕنَّكُمْ لَتَأْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِيْلَ ەۙ وَتَأْتُوْنَ فِيْ نَادِيْكُمُ الْمُنْكَرَ ۗفَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖٓ اِلَّآ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللّٰهِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ (العنكبوت : ٢٩)

a-innakum
أَئِنَّكُمْ
Indeed you
latatūna
لَتَأْتُونَ
approach
நீங்கள் உறவு கொள்கிறீர்களா?
l-rijāla
ٱلرِّجَالَ
the men
ஆண்களிடம்
wataqṭaʿūna
وَتَقْطَعُونَ
and you cut off
தடுக்கிறீர்கள்
l-sabīla
ٱلسَّبِيلَ
the road
பாதைகளை
watatūna
وَتَأْتُونَ
and commit
செய்கிறீர்கள்
fī nādīkumu
فِى نَادِيكُمُ
in your meetings
உங்கள் சபைகளில்
l-munkara
ٱلْمُنكَرَۖ
evil?"
கெட்டசெயலை
famā kāna
فَمَا كَانَ
And not was
இருக்கவில்லை
jawāba
جَوَابَ
(the) answer
பதில்
qawmihi
قَوْمِهِۦٓ
(of) his people
அவருடைய மக்களின்
illā
إِلَّآ
except
தவிர
an qālū
أَن قَالُوا۟
that they said
என்று கூறியதை
i'tinā
ٱئْتِنَا
"Bring upon us
எங்களிடம் கொண்டு வருவீராக
biʿadhābi
بِعَذَابِ
(the) punishment
தண்டனையை
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
in kunta
إِن كُنتَ
if you are
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
of the truthful"
உண்மையாளர்களில்

Transliteration:

A'innakum lataatoonar rijaala wa taqta'oonas sabeela wa taatoona fee naadekumul munkara famaa kaana jawaaba qawmiheee illaaa an qaalu' tinaaa bi'azaabil laahi in kunta minas saadiqeen (QS. al-ʿAnkabūt:29)

English Sahih International:

Indeed, you approach men and obstruct the road and commit in your meetings [every] evil." And the answer of his people was not but that they said, "Bring us the punishment of Allah, if you should be of the truthful." (QS. Al-'Ankabut, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(பெண்களைவிட்டு) ஆண்களிடம் (மோகம் கொண்டு) செல்கின்றீர்கள்; (பயணிகளை) வழிமறித்துக் கொள்ளை அடிக்கின்றீர்கள். (மக்கள் நிறைந்த) உங்கள் சபைகளிலும் (பகிரங்கமாகவே) மிக்க வெறுக்கத்தக்க இக்காரியத்தைச் செய்கின்றீர்களே!" என்று கூறினார். அதற்கவர்கள் "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவருடைய மக்கள் கூறவில்லை. (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௨௯)

Jan Trust Foundation

நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்” என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்| “நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக” என்பது தவிர வேறு எதுவுமில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் ஆண்களிடம் (உடல்) உறவு கொள்கிறீர்களா? பாதைகளை தடுக்கிறீர்கள்; உங்கள் சபைகளில் கெட்டசெயலை செய்கிறீர்கள்.” அவருடைய மக்களின் பதில் இருக்கவில்லை நீர் உண்மையாளர்களில் இருந்தால் அல்லாஹ்வின் தண்டனையை எங்களிடம் கொண்டு வருவீராக” என்று கூறியதை தவிர (அவர்கள் வேறு பதில் சொல்லவில்லை).