குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௨௬
Qur'an Surah Al-'Ankabut Verse 26
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ فَاٰمَنَ لَهٗ لُوْطٌۘ وَقَالَ اِنِّيْ مُهَاجِرٌ اِلٰى رَبِّيْ ۗاِنَّهٗ هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ (العنكبوت : ٢٩)
- faāmana
- فَـَٔامَنَ
- And believed
- ஆக, நம்பிக்கைகொண்டார்
- lahu
- لَهُۥ
- [in] him
- அவரை
- lūṭun
- لُوطٌۘ
- Lut
- லூத்
- waqāla
- وَقَالَ
- and he said
- இன்னும் அவர் கூறினார்
- innī
- إِنِّى
- "Indeed I (am)
- நிச்சயமாக நான்
- muhājirun
- مُهَاجِرٌ
- emigrating
- வெளியேறிசெல்கிறேன்
- ilā rabbī
- إِلَىٰ رَبِّىٓۖ
- to my Lord
- என் இறைவனின் பக்கம்
- innahu huwa
- إِنَّهُۥ هُوَ
- Indeed He [He] (is)
- நிச்சயமாக அவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- the All-Mighty
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- the All-Wise"
- மகா ஞானவான்
Transliteration:
Fa aamana lahoo Loot; wa qaala innee mauhajirun ilaa Rabbee innahoo Huwal 'Azeezul Hakeem(QS. al-ʿAnkabūt:26)
English Sahih International:
And Lot believed him. [Abraham] said, "Indeed, I will emigrate to [the service of] my Lord. Indeed, He is the Exalted in Might, the Wise." (QS. Al-'Ankabut, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
(இப்ராஹீம் இவ்வளவு கூறியும்) லூத் (நபி) ஒருவர் மட்டுமே அவரை நம்பிக்கை கொண்டார். (ஆகவே, இப்ராஹீம் அவரை நோக்கி) "நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (என்னுடைய இந்த ஊரை விட்டுச்) செல்கிறேன். நிச்சயமாக அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௨௬)
Jan Trust Foundation
(இதன் பின்னரும்) லூத் (மட்டுமே) அவர் மீது ஈமான் கொண்டார்; (அவரிடம் இப்ராஹீம்)| “நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (இவ்வூரை விட்டு) ஹிஜ்ரத் செய்கிறேன்; நிச்சயமாக அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, அவரை லூத் நம்பிக்கை கொண்டார். இன்னும் அவர் (-இப்ராஹீம்) கூறினார்: “நிச்சயமாக நான் (என் ஊரை விட்டு) வெளியேறி என் இறைவனின் பக்கம் (ஷாம்) செல்கிறேன். நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்.