குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௨௨
Qur'an Surah Al-'Ankabut Verse 22
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَاۤءِ ۖوَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ ࣖ (العنكبوت : ٢٩)
- wamā antum bimuʿ'jizīna
- وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ
- And not you can escape
- நீங்கள் பலவீனப்படுத்திவிட முடியாது
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- walā fī l-samāi
- وَلَا فِى ٱلسَّمَآءِۖ
- and not in the heaven
- இன்னும் வானத்தில்
- wamā lakum
- وَمَا لَكُم
- And not for you
- இன்னும் உங்களுக்கு இல்லை
- min dūni l-lahi
- مِّن دُونِ ٱللَّهِ
- besides besides Allah
- அல்லாஹ்வையன்றி
- min waliyyin
- مِن وَلِىٍّ
- any protector
- ஒரு பாதுகாவலரும்
- walā naṣīrin
- وَلَا نَصِيرٍ
- and not a helper
- உதவியாளரும்
Transliteration:
Wa maaa antum bimu'jizeena fil ardi wa laa fissamaaa'i wa maa lakum min doonil laahi minw waliyyinw wa laa naseer(QS. al-ʿAnkabūt:22)
English Sahih International:
And you will not cause failure [to Allah] upon the earth or in the heaven. And you have not other than Allah any protector or any helper. (QS. Al-'Ankabut, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
(அவன் உங்களை வேதனை செய்ய விரும்பினால்) வானத்திலோ பூமியிலோ (ஒளிந்து கொண்டு) நீங்கள் அவனைத் தோற்கடித்துவிட முடியாது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு யாதொரு பாதுகாவலனுமில்லை; உதவி செய்பவனுமில்லை. (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௨௨)
Jan Trust Foundation
பூமியிலோ, வானத்திலோ நீங்கள் (அவனை) இயலாமல் ஆக்குபவர்களல்லர். மேலும், உங்களுக்கு அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் பூமியில் இன்னும் வானத்தில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்தி விட முடியாது. (அவனை விட்டும் நீங்கள் தப்பித்துவிட முடியாது.) இன்னும் அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு ஒரு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை.