Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௧௭

Qur'an Surah Al-'Ankabut Verse 17

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا ۗاِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ ۗاِلَيْهِ تُرْجَعُوْنَ (العنكبوت : ٢٩)

innamā taʿbudūna
إِنَّمَا تَعْبُدُونَ
Only you worship
நீங்கள் வணங்குவதெல்லாம்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
besides besides Allah
அல்லாஹ்வையன்றி
awthānan
أَوْثَٰنًا
idols
சிலைகளைத்தான்
watakhluqūna
وَتَخْلُقُونَ
and you create
இன்னும் இட்டுக்கட்டுகிறீர்கள்
if'kan
إِفْكًاۚ
falsehood
பொய்யை
inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
Indeed those whom
நிச்சயமாக எவர்களை
taʿbudūna
تَعْبُدُونَ
you worship
நீங்கள் வணங்குகிறீர்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
besides besides Allah
அல்லாஹ்வையன்றி
lā yamlikūna
لَا يَمْلِكُونَ
(do) not possess
உரிமை பெறமாட்டார்கள்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
riz'qan
رِزْقًا
provision
உணவளிக்க
fa-ib'taghū
فَٱبْتَغُوا۟
So seek any
ஆகவே, தேடுங்கள்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்விடம்
l-riz'qa
ٱلرِّزْقَ
the provision
உணவை
wa-uʿ'budūhu
وَٱعْبُدُوهُ
and worship Him
இன்னும் அவனை வணங்குங்கள்
wa-ush'kurū
وَٱشْكُرُوا۟
and be grateful
இன்னும் நன்றி செலுத்துங்கள்
lahu
لَهُۥٓۖ
to Him
அவனுக்கு
ilayhi
إِلَيْهِ
To Him
அவன் பக்கமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be returned
திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்

Transliteration:

Innamaa ta'ubdoona min doonil laahi awsaananw-wa takhluqoona ifkaa; innal lazeena ta'budoona min doonil laahi laa yamlikoona lakum rizqan fabtaghoo 'indal laahir rizqa fabtaghoo 'indal laahir rizqa wa'budoohu washkuroo lahooo ilaihi turja'oon (QS. al-ʿAnkabūt:17)

English Sahih International:

You only worship, besides Allah, idols, and you produce a falsehood. Indeed, those you worship besides Allah do not possess for you [the power of] provision. So seek from Allah provision and worship Him and be grateful to Him. To Him you will be returned." (QS. Al-'Ankabut, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

தவிர, அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கும் சிலைகளெல்லாம் நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டவைதாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் இவை உங்களுக்கு உணவளிக்க சிறிதும் சக்தியற்றவை. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே கோரி, அவ(ன் ஒருவ)னையே வணங்கி, அவனுக்கு நன்றி செலுத்தியும் வாருங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்" என்றும் கூறினார். (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௧௭)

Jan Trust Foundation

அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை; ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் சிலைகளைத்தான். இன்னும் பொய்யை இட்டுக்கட்டுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் எவர்களை வணங்குகின்றீர்களோ அவர்கள் உங்களுக்கு உணவளிக்க உரிமை பெறமாட்டார்கள். ஆகவே, அல்லாஹ்விடம் உணவைத் தேடுங்கள். அவனை வணங்குங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.