குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௧௨
Qur'an Surah Al-'Ankabut Verse 12
ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوا اتَّبِعُوْا سَبِيْلَنَا وَلْنَحْمِلْ خَطٰيٰكُمْۗ وَمَا هُمْ بِحَامِلِيْنَ مِنْ خَطٰيٰهُمْ مِّنْ شَيْءٍۗ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ (العنكبوت : ٢٩)
- waqāla
- وَقَالَ
- And said
- கூறினர்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- those who disbelieve
- நிராகரித்தவர்கள்
- lilladhīna āmanū
- لِلَّذِينَ ءَامَنُوا۟
- to those who believe
- நம்பிக்கையாளர்களை நோக்கி
- ittabiʿū
- ٱتَّبِعُوا۟
- "Follow
- நீங்கள் பின்பற்றுங்கள்!
- sabīlanā
- سَبِيلَنَا
- our way
- எங்கள் பாதையை
- walnaḥmil
- وَلْنَحْمِلْ
- and we will carry
- நாங்கள் சுமந்து கொள்கிறோம்
- khaṭāyākum
- خَطَٰيَٰكُمْ
- your sins"
- உங்கள் தவறுகளை
- wamā hum
- وَمَا هُم
- But not they
- அவர்கள் அல்லர்
- biḥāmilīna
- بِحَٰمِلِينَ
- (are) going to carry
- சுமப்பவர்கள்
- min khaṭāyāhum
- مِنْ خَطَٰيَٰهُم
- of their sins
- அவர்களுடைய தவறுகளில்
- min shayin
- مِّن شَىْءٍۖ
- any thing
- எதையும்
- innahum
- إِنَّهُمْ
- Indeed they
- நிச்சயமாக அவர்கள்
- lakādhibūna
- لَكَٰذِبُونَ
- (are) surely liars
- பொய்யர்கள்தான்
Transliteration:
Wa qaalal lazaeena kafaroo lillazeena aamanut tabi'oo sabeelanaa walnahmil khataayaakum wa maa hum bihaamileena min khataa yaahum min shai'in innahum lakaaziboon(QS. al-ʿAnkabūt:12)
English Sahih International:
And those who disbelieve say to those who believe, "Follow our way, and we will carry your sins." But they will not carry anything of their sins. Indeed, they are liars. (QS. Al-'Ankabut, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
நிராகரிப்பவர்கள், நம்பிக்கையாளர்களை நோக்கி "நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றுங்கள். (அதனால் ஏதும் குற்றங் குறைகள் ஏற்பட்டால்) உங்களுடைய குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கின்றோம்" என்று கூறுகின்றனர். எனினும், உங்களுடைய குற்றங்களிலிருந்து எதனையுமே அவர்கள் சுமந்து கொள்ள மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே! (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௧௨)
Jan Trust Foundation
நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம்| “நீங்கள் எங்கள் வழியை (மார்க்கத்தைப்) பின்பற்றுங்கள்; உங்கள் குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கிறோம்” என்று கூறுகிறார்கள்; ஆனால், அவர்கள் தம் குற்றங்களிலிருந்தும் எதையும் சுமப்பவர்களாக (தாங்குபவர்களாக) இல்லையே! எனவே (உங்கள் குற்றங்களை சுமப்பதற்காகச் சொல்லும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களை நோக்கி நிராகரித்தவர்கள் கூறினர்: “நீங்கள் எங்கள் பாதையை (மார்க்கத்தை) பின்பற்றுங்கள்! நாங்கள் உங்கள் தவறுகளை சுமந்து கொள்கிறோம்.” அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) அவர்களுடைய (நம்பிக்கையாளர்களுடைய) தவறுகளில் எதையும் சுமப்பவர்கள் அல்லர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.