Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்கபூத் வசனம் ௧௦

Qur'an Surah Al-'Ankabut Verse 10

ஸூரத்துல் அன்கபூத் [௨௯]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَآ اُوْذِيَ فِى اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِ ۗوَلَىِٕنْ جَاۤءَ نَصْرٌ مِّنْ رَّبِّكَ لَيَقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْۗ اَوَلَيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِيْ صُدُوْرِ الْعٰلَمِيْنَ (العنكبوت : ٢٩)

wamina l-nāsi
وَمِنَ ٱلنَّاسِ
And of the people
மக்களில் இருக்கின்றனர்
man yaqūlu
مَن يَقُولُ
(is he) who says
எவர்/கூறுகின்றார்
āmannā
ءَامَنَّا
"We believe
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
bil-lahi
بِٱللَّهِ
in Allah"
அல்லாஹ்வை
fa-idhā ūdhiya
فَإِذَآ أُوذِىَ
But when he is harmed
அவர்கள் துன்புறுத்தப்பட்டால்
fī l-lahi
فِى ٱللَّهِ
in (the Way of) Allah
அல்லாஹ்வின் விஷயத்தில்
jaʿala
جَعَلَ
he considers
ஆக்கிவிடுகிறார்
fit'nata
فِتْنَةَ
(the) trial
சோதனையை
l-nāsi
ٱلنَّاسِ
(of) the people
மக்களுடைய
kaʿadhābi
كَعَذَابِ
as (the) punishment
தண்டனையைப் போன்று
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
wala-in jāa
وَلَئِن جَآءَ
But if comes
வந்தால்
naṣrun
نَصْرٌ
victory
ஓர் உதவி
min rabbika
مِّن رَّبِّكَ
from your Lord
உமது இறைவனிடமிருந்து
layaqūlunna
لَيَقُولُنَّ
surely they say
நிச்சயமாக கூறுகின்றனர்
innā
إِنَّا
"Indeed, we
நிச்சயமாக நாம்
kunnā
كُنَّا
were
இருக்கின்றோம்
maʿakum
مَعَكُمْۚ
with you"
உங்களுடன்
awalaysa
أَوَلَيْسَ
Is not
இல்லையா?
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
bi-aʿlama
بِأَعْلَمَ
most knowing
மிக அறிந்தவனாக
bimā fī ṣudūri
بِمَا فِى صُدُورِ
of what (is) in (the) breasts
நெஞ்சங்களில் உள்ளவற்றை
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds?
அகிலத்தாரின்

Transliteration:

Wa minan naasi many yaqoolu aamannaa billaahi faizaaa ooziya fil laahi ja'ala fitnatan naasi ka'azaabil laahi wa la'in jaaa'a nasrum mir Rabbika la yaqoolunna innaa kunnaa ma'akum; awa laisal laahu bi a'lama bimaa fee surdooril 'aalameen (QS. al-ʿAnkabūt:10)

English Sahih International:

And of the people are some who say, "We believe in Allah," but when one [of them] is harmed for [the cause of] Allah, he considers the trial [i.e., harm] of the people as [if it were] the punishment of Allah. But if victory comes from your Lord, they say, "Indeed, We were with you." Is not Allah most knowing of what is within the breasts of the worlds [i.e., all creatures]? (QS. Al-'Ankabut, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் "நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றோம்" என்று கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வழியில் ஏதும் துன்பம் ஏற்பட்டால், மக்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வுடைய வேதனையைப் போல் (மிகப் பெரிதாக) ஆக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்(ள விரும்பு)கின்றனர். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு யாதொரு உதவி கிடைக்கும் பட்சத்தில் "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருந்தோம்" என்று கூறுகின்றனர். உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா? (ஸூரத்துல் அன்கபூத், வசனம் ௧௦)

Jan Trust Foundation

மேலும், மனிதர்களில் சிலர் “நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” என்று சொல்கிறார்கள்; எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வின் பாதையில் துன்பம் உண்டானால், மனிதர்களால் ஏற்படும் அந்த இம்சையை அல்லாஹ்வின் வேதனைபோல் கருதி (உம்மை விட்டும் நீங்க முனைந்து) விடுகிறார்கள்; ஆனால் உம் இறைவனிடத்திலிருந்து உதவி வரும்போது| “நிச்சயமாக நாங்கள் உங்களுடனே தான் இருந்தோம்” என்று கூறுகிறார்கள். அல்லாஹ் அகிலத்தாரின் இதயங்களில் இருப்பவற்றை நன்கறிந்தவனாக இல்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்றவர் மக்களில் இருக்கின்றனர். அவர் அல்லாஹ்வின் விஷயத்தில் (-அவனை ஏற்றுக்கொண்டதற்காக) துன்புறுத்தப்பட்டால் மக்களுடைய சோதனையை அல்லாஹ்வின் தண்டனையைப் போன்று ஆக்கிவிடுகிறார். உமது இறைவனிடமிருந்து ஓர் உதவி வந்தால் நிச்சயமாக நாம் உங்களுடன் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர். அகிலத்தாரின் நெஞ்சங்களில் உள்ளவற்றை மிக அறிந்தவனாக அல்லாஹ் இல்லையா?