وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُوْلُنَّ اللّٰهُ ۗفَاَنّٰى يُؤْفَكُوْنَ ٦١
- wala-in
- وَلَئِن
- sa-altahum
- سَأَلْتَهُم
- அவர்களிடம் நீர் கேட்டால்
- man khalaqa
- مَّنْ خَلَقَ
- யார் படைத்தான்?
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களையும்
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- பூமியையும்
- wasakhara
- وَسَخَّرَ
- வசப்படுத்தினான்
- l-shamsa
- ٱلشَّمْسَ
- சூரியனையும்
- wal-qamara
- وَٱلْقَمَرَ
- சந்திரனையும்
- layaqūlunna
- لَيَقُولُنَّ
- நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
- l-lahu
- ٱللَّهُۖ
- அல்லாஹ்தான்
- fa-annā
- فَأَنَّىٰ
- ஆக, அவர்கள் எப்படி
- yu'fakūna
- يُؤْفَكُونَ
- திருப்பப்படுகிறார்கள்
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) "வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? சூரியனையும் சந்திரனையும் தன் திட்டப்படியே நடக்கும்படி செய்தவன் யார்?" என்று அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் "அல்லாஹ்தான்" என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், அவர்கள் (நம்மைவிட்டு) எங்கு வெருண்டோடுகின்றனர். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௧)Tafseer
اَللّٰهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ ۗاِنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ٦٢
- al-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- yabsuṭu
- يَبْسُطُ
- விசாலமாக்குகின்றான்
- l-riz'qa
- ٱلرِّزْقَ
- உணவை
- liman yashāu
- لِمَن يَشَآءُ
- தான் நாடியவர்களுக்கு
- min ʿibādihi
- مِنْ عِبَادِهِۦ
- தனது அடியார்களில்
- wayaqdiru
- وَيَقْدِرُ
- இன்னும் சுருக்குகின்றான்
- lahu
- لَهُۥٓۚ
- அவருக்கு
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் நாடியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின் தகுதி) அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௨)Tafseer
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ مِنْۢ بَعْدِ مَوْتِهَا لَيَقُوْلُنَّ اللّٰهُ ۙقُلِ الْحَمْدُ لِلّٰهِ ۗبَلْ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ ࣖ ٦٣
- wala-in
- وَلَئِن
- sa-altahum
- سَأَلْتَهُم
- நீர் அவர்களிடம் கேட்டால்
- man nazzala
- مَّن نَّزَّلَ
- யார்/இறக்கினான்
- mina l-samāi
- مِنَ ٱلسَّمَآءِ
- வானத்திலிருந்து
- māan
- مَآءً
- மழையை
- fa-aḥyā
- فَأَحْيَا
- உயிர்ப்பிப்பவன்
- bihi
- بِهِ
- அதன் மூலம்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- mawtihā
- مَوْتِهَا
- அது இறந்து விட்ட
- layaqūlunna
- لَيَقُولُنَّ
- நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
- l-lahu
- ٱللَّهُۚ
- அல்லாஹ்
- quli
- قُلِ
- நீர் கூறுவீராக!
- l-ḥamdu
- ٱلْحَمْدُ
- புகழ் எல்லாம்
- lillahi
- لِلَّهِۚ
- அல்லாஹ்விற்கே!
- bal
- بَلْ
- மாறாக
- aktharuhum
- أَكْثَرُهُمْ
- அதிகமானவர்கள் அவர்களில்
- lā yaʿqilūna
- لَا يَعْقِلُونَ
- சிந்தித்து புரிய மாட்டார்கள்
(நபியே! நீங்கள் அவர்களை நோக்கி) மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்பவன் யார்? அதனைக் கொண்டு இறந்த பூமியை உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீராயின் அதற்கவர்கள் "நிச்சயமாக அல்லாஹ்தான்" என்று கூறுவார்கள். அதற்கு நீங்கள் "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே!" என்று கூறுங்கள். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) உணர்ந்து கொள்வதில்லை. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௩)Tafseer
وَمَا هٰذِهِ الْحَيٰوةُ الدُّنْيَآ اِلَّا لَهْوٌ وَّلَعِبٌۗ وَاِنَّ الدَّارَ الْاٰخِرَةَ لَهِيَ الْحَيَوَانُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ ٦٤
- wamā hādhihi
- وَمَا هَٰذِهِ
- இல்லை
- l-ḥayatu
- ٱلْحَيَوٰةُ
- வாழ்க்கை
- l-dun'yā
- ٱلدُّنْيَآ
- இவ்வுலக
- illā
- إِلَّا
- தவிர
- lahwun
- لَهْوٌ
- வேடிக்கையாகவும்
- walaʿibun
- وَلَعِبٌۚ
- விளையாட்டாகவும்
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- l-dāra
- ٱلدَّارَ
- வீடு
- l-ākhirata lahiya
- ٱلْءَاخِرَةَ لَهِىَ
- மறுமை/அதுதான்
- l-ḥayawānu
- ٱلْحَيَوَانُۚ
- நிரந்தரமானது
- law kānū yaʿlamūna
- لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
- அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே!
இவ்வுலக வாழ்க்கை வீண் விளையாட்டும், வேடிக்கையுமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும்மறுமையின் வாழ்க்கைதான் நிச்சயமாக நிலையான வாழ்க்கை ஆகும். இதை அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே! ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௪)Tafseer
فَاِذَا رَكِبُوْا فِى الْفُلْكِ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۚ فَلَمَّا نَجّٰىهُمْ اِلَى الْبَرِّ اِذَا هُمْ يُشْرِكُوْنَۙ ٦٥
- fa-idhā rakibū
- فَإِذَا رَكِبُوا۟
- அவர்கள் பயணித்தால்
- fī l-ful'ki
- فِى ٱلْفُلْكِ
- கப்பலில்
- daʿawū
- دَعَوُا۟
- அழைக்கின்றனர்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- mukh'liṣīna
- مُخْلِصِينَ
- தூய்மைப்படுத்தியவர்களாக
- lahu
- لَهُ
- அவனுக்கு மட்டும்
- l-dīna
- ٱلدِّينَ
- வணக்க வழிபாட்டை
- falammā najjāhum
- فَلَمَّا نَجَّىٰهُمْ
- அவன் அவர்களை காப்பாற்றிக் கொண்டு வந்தால்
- ilā l-bari
- إِلَى ٱلْبَرِّ
- கரைக்கு
- idhā hum
- إِذَا هُمْ
- அப்போது அவர்கள்
- yush'rikūna
- يُشْرِكُونَ
- இணைவைக்கின்றனர்
(மனிதர்கள்) கப்பலில் ஏறி (ஆபத்தில் சிக்கி)க் கொண்டால், அவர்கள் முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டுக் கலப்பற்ற (பரிசுத்த) மனதோடு அவனை அழைத்துப் பிரார்த்தனை செய்கின்றனர். அவன், அவர்களை கரையில் (இறக்கி) பாதுகாத்துக் கொண்ட பின்னர் அவனுக்கு அவர்கள் (பலரை) இணை ஆக்குகின்றனர். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௫)Tafseer
لِيَكْفُرُوْا بِمَآ اٰتَيْنٰهُمْۙ وَلِيَتَمَتَّعُوْاۗ فَسَوْفَ يَعْلَمُوْنَ ٦٦
- liyakfurū
- لِيَكْفُرُوا۟
- இறுதியாக, நிராகரிப்பதற்காகவும்
- bimā ātaynāhum
- بِمَآ ءَاتَيْنَٰهُمْ
- நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை
- waliyatamattaʿū
- وَلِيَتَمَتَّعُوا۟ۖ
- அவர்கள் இன்புறுவதற்காகவும்
- fasawfa yaʿlamūna
- فَسَوْفَ يَعْلَمُونَ
- அவர்கள் அறிவார்கள்
நாம் அவர்களுக்குச் செய்யும் நன்றியை (இவ்வாறு) அவர்கள் மறுத்துக்கொண்டே இருக்கட்டும். (தங்கள் விருப்பப்படியும்) அவர்கள் சுகமனுபவித்துக் கொண்டே இருக்கட்டும். தங்கள் (செயலின்) பயனை(ப் பின்னர்) நிச்சயமாக தெரிந்து கொள்வார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௬)Tafseer
اَوَلَمْ يَرَوْا اَنَّا جَعَلْنَا حَرَمًا اٰمِنًا وَّيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْۗ اَفَبِالْبَاطِلِ يُؤْمِنُوْنَ وَبِنِعْمَةِ اللّٰهِ يَكْفُرُوْنَ ٦٧
- awalam yaraw
- أَوَلَمْ يَرَوْا۟
- அவர்கள் பார்க்கவில்லையா?
- annā
- أَنَّا
- நிச்சயமாக நாம்
- jaʿalnā
- جَعَلْنَا
- ஏற்படுத்தினோம்
- ḥaraman
- حَرَمًا
- புனித தலத்தை
- āminan
- ءَامِنًا
- பாதுகாப்புஅளிக்கின்ற
- wayutakhaṭṭafu
- وَيُتَخَطَّفُ
- சூறையாடப்படுகின்றனர்
- l-nāsu
- ٱلنَّاسُ
- மக்கள்
- min ḥawlihim
- مِنْ حَوْلِهِمْۚ
- அவர்களைச் சுற்றி
- afabil-bāṭili
- أَفَبِٱلْبَٰطِلِ
- பொய்யை
- yu'minūna
- يُؤْمِنُونَ
- அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனரா?
- wabiniʿ'mati
- وَبِنِعْمَةِ
- அருளை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- yakfurūna
- يَكْفُرُونَ
- நிராகரிக்கின்றனரா?
(இந்த மக்காவை) அபயமளிக்கும் இடமாக நாம் ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்களைச் சூழவுள்ள மனிதர்கள் இறாஞ்சி(த் தூக்கி)ச் செல்லப்படுகின்றனர். இவர்கள் அல்லாஹ்வின் (இவ்வருட்) கொடையை நிராகரித்துவிட்டு பொய்யான தெய்வங்களை நம்பிக்கை கொள்கின்றனரா? ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௭)Tafseer
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِالْحَقِّ لَمَّا جَاۤءَهٗ ۗ اَلَيْسَ فِيْ جَهَنَّمَ مَثْوًى لِّلْكٰفِرِيْنَ ٦٨
- waman
- وَمَنْ
- யார்?
- aẓlamu
- أَظْلَمُ
- மகா அநியாயக்காரன்
- mimmani if'tarā
- مِمَّنِ ٱفْتَرَىٰ
- இட்டுக்கட்டியவனை விட
- ʿalā
- عَلَى
- மீது
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- kadhiban
- كَذِبًا
- பொய்யை
- aw
- أَوْ
- அல்லது
- kadhaba
- كَذَّبَ
- பொய்ப்பித்தான்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- உண்மையை
- lammā jāahu
- لَمَّا جَآءَهُۥٓۚ
- அது தன்னிடம் வந்த போது
- alaysa
- أَلَيْسَ
- இல்லையா?
- fī jahannama
- فِى جَهَنَّمَ
- நரகத்தில்
- mathwan
- مَثْوًى
- தங்குமிடம்
- lil'kāfirīna
- لِّلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களுக்கு
அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவனைவிட அல்லது தன்னிடம் வந்த உண்மையைப் பொய்யாக்குபவனைவிட அநியாயக்காரன் யார்? இத்தகைய நிராகரிப்பவர்களின் தங்குமிடம் நரகத்தில் அல்லவா இருக்கின்றது. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௮)Tafseer
وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَاۗ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ ࣖ ٦٩
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- jāhadū
- جَٰهَدُوا۟
- போரிட்டனர்
- fīnā
- فِينَا
- நமக்காக
- lanahdiyannahum
- لَنَهْدِيَنَّهُمْ
- அவர்களுக்கு நாம் நிச்சயமாக வழிகாட்டுவோம்
- subulanā
- سُبُلَنَاۚ
- நமது பாதைகளை
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lamaʿa l-muḥ'sinīna
- لَمَعَ ٱلْمُحْسِنِينَ
- நல்லோருடன் இருக்கின்றான்
எவர்கள் நம்முடைய வழியில் (செல்ல) முயற்சிக் கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம்முடைய (நல்) வழிகளில் செலுத்துகின்றோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௯)Tafseer