Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்கபூத் - Page: 6

Al-'Ankabut

(al-ʿAnkabūt)

௫௧

اَوَلَمْ يَكْفِهِمْ اَنَّآ اَنْزَلْنَا عَلَيْكَ الْكِتٰبَ يُتْلٰى عَلَيْهِمْ ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَرَحْمَةً وَّذِكْرٰى لِقَوْمٍ يُّؤْمِنُوْنَ ࣖ ٥١

awalam yakfihim
أَوَلَمْ يَكْفِهِمْ
அவர்களுக்கு போதுமாகாதா?
annā
أَنَّآ
நிச்சயமாக நாம்
anzalnā
أَنزَلْنَا
இறக்கியது
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
இந்த வேதத்தை
yut'lā
يُتْلَىٰ
ஓதப்படுகின்ற
ʿalayhim
عَلَيْهِمْۚ
அவர்கள் மீது
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் இருக்கின்றன
laraḥmatan
لَرَحْمَةً
அருளும்
wadhik'rā
وَذِكْرَىٰ
அறிவுரையும்
liqawmin
لِقَوْمٍ
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்ற
(நபியே!) இவ்வேதத்தை மெய்யாகவே நாம் உங்கள் மீது இறக்கி வைத்திருக்கிறோம் என்பதற்கு அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படும் இவ்வேதமே போதுமான அத்தாட்சியல்லவா? ஏனென்றால், இதில் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக (இறைவனுடைய) அருளும் இருக்கின்றது; (பல) நல்லுபதேசங்களும் இருக்கின்றன. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫௧)
Tafseer
௫௨

قُلْ كَفٰى بِاللّٰهِ بَيْنِيْ وَبَيْنَكُمْ شَهِيْدًاۚ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَالَّذِيْنَ اٰمَنُوْا بِالْبَاطِلِ وَكَفَرُوْا بِاللّٰهِ اُولٰۤىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ٥٢

qul
قُلْ
கூறுவீராக!
kafā
كَفَىٰ
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வே
baynī
بَيْنِى
எனக்கிடையில்
wabaynakum
وَبَيْنَكُمْ
உங்களுக்குஇடையில்
shahīdan
شَهِيدًاۖ
சாட்சியால்
yaʿlamu
يَعْلَمُ
அவன் நன்கறிவான்
مَا
உள்ளவற்றை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமியில்
wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
bil-bāṭili
بِٱلْبَٰطِلِ
பொய்யை
wakafarū
وَكَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-khāsirūna
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். ஏனென்றால், அவன்தான் வானங்கள் பூமியிலுள்ள அனைத்தையும் நன்கறிந்தவன். ஆகவே, எவர்கள் பொய்யான விஷயங்களை நம்பி அல்லாஹ்வை நிராகரித்து விடுகின்றார்களோ இத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள்தாம்." ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫௨)
Tafseer
௫௩

وَيَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِۗ وَلَوْلَآ اَجَلٌ مُّسَمًّى لَّجَاۤءَهُمُ الْعَذَابُۗ وَلَيَأْتِيَنَّهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ٥٣

wayastaʿjilūnaka
وَيَسْتَعْجِلُونَكَ
அவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர்
bil-ʿadhābi
بِٱلْعَذَابِۚ
தண்டனையை
walawlā ajalun
وَلَوْلَآ أَجَلٌ
ஒரு தவணை இல்லை என்றால்
musamman
مُّسَمًّى
குறிப்பிடப்பட்ட
lajāahumu
لَّجَآءَهُمُ
வந்தே இருக்கும் அவர்களுக்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
தண்டனை
walayatiyannahum
وَلَيَأْتِيَنَّهُم
அவர்களிடம் வரும்
baghtatan
بَغْتَةً
திடீரென
wahum
وَهُمْ
நிச்சயமாக அவர்கள்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
உணராதவர்களாக இருக்க
(மறுமையின்) வேதனையைப் பற்றி (அது எப்பொழுது வரும்? என்று) அவர்கள் உங்களிடம் அவசரப்படுகின்றனர். அதற்குறிய ஒரு குறிப்பிட்ட தவணை இல்லாதிருந்தால் (இதுவரையில்) அவ்வேதனை அவர்களை வந்தடைந்தே இருக்கும். எனினும், அவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் திடீரென நிச்சயமாக அவர்களிடம் (அது) வந்தே தீரும். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫௩)
Tafseer
௫௪

يَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِۗ وَاِنَّ جَهَنَّمَ لَمُحِيْطَةٌ ۢ بِالْكٰفِرِيْنَۙ ٥٤

yastaʿjilūnaka
يَسْتَعْجِلُونَكَ
அவர்கள் உம்மிடம் அவசரமாகக் கேட்கின்றனர்
bil-ʿadhābi
بِٱلْعَذَابِ
தண்டனையை
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
jahannama
جَهَنَّمَ
நரகம்
lamuḥīṭatun
لَمُحِيطَةٌۢ
சூழ்ந்தே உள்ளது
bil-kāfirīna
بِٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
நிராகரிப்பவர்களை நிச்சயமாக நரகம் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் வேதனையைப் பற்றி அவர்கள் அவசரப்படுகின்றார்கள். (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.) ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫௪)
Tafseer
௫௫

يَوْمَ يَغْشٰىهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ وَيَقُوْلُ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٥٥

yawma
يَوْمَ
நாளில்
yaghshāhumu
يَغْشَىٰهُمُ
அவர்களை மூடிக்கொள்கின்ற
l-ʿadhābu
ٱلْعَذَابُ
தண்டனை
min fawqihim
مِن فَوْقِهِمْ
அவர்களுக்கு மேலிருந்தும்
wamin taḥti
وَمِن تَحْتِ
கீழே இருந்தும்
arjulihim
أَرْجُلِهِمْ
அவர்களின் கால்களுக்கு
wayaqūlu
وَيَقُولُ
கூறுவான்
dhūqū
ذُوقُوا۟
நீங்கள் சுவையுங்கள்
mā kuntum taʿmalūna
مَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்ததை
அவர்களு(டைய தலைகளு)க்கு மேலிருந்தும், அவர்களு(டைய பாதங்களு)க்குக் கீழிருந்தும் வேதனை அவர்களை மூடிக் கொள்ளும் நாளில் அவர்களை நோக்கி "நீங்கள் செய்து கொண்டிருந்த செயலின் பயனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" என்று (இறைவன்) கூறுவான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫௫)
Tafseer
௫௬

يٰعِبَادِيَ الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنَّ اَرْضِيْ وَاسِعَةٌ فَاِيَّايَ فَاعْبُدُوْنِ ٥٦

yāʿibādiya
يَٰعِبَادِىَ
என் அடியார்களே!
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
arḍī
أَرْضِى
எனது பூமி
wāsiʿatun
وَٰسِعَةٌ
விசாலமானது
fa-iyyāya
فَإِيَّٰىَ
ஆகவே, என்னையே
fa-uʿ'budūni
فَٱعْبُدُونِ
நீங்கள் வணங்குங்கள்!
நம்பிக்கை கொண்ட என்னுடைய அடியார்களே! நிச்சயமாக என்னுடைய பூமி மிக்க விசாலமானது. அதில் நீங்கள் (எங்குச் சென்ற போதிலும்) என்னையே வணங்குங்கள். (மற்றெவரையும் வணங்காதீர்கள்.) ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫௬)
Tafseer
௫௭

كُلُّ نَفْسٍ ذَاۤىِٕقَةُ الْمَوْتِۗ ثُمَّ اِلَيْنَا تُرْجَعُوْنَ ٥٧

kullu
كُلُّ
எல்லா
nafsin
نَفْسٍ
ஆன்மாவும்
dhāiqatu
ذَآئِقَةُ
சுவைக்கக் கூடியதே
l-mawti
ٱلْمَوْتِۖ
மரணத்தை
thumma
ثُمَّ
பிறகு
ilaynā
إِلَيْنَا
நம்மிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
(உங்களில் உள்ள) ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை அனுபவிக்க வேண்டியதுதான். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக) நம்மிடமே கொண்டு வரப்படுவீர்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫௭)
Tafseer
௫௮

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُبَوِّئَنَّهُمْ مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۗ نِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَۖ ٥٨

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
lanubawwi-annahum
لَنُبَوِّئَنَّهُم
அவர்களுக்கு நாம் தயார்படுத்திக் கொடுப்போம்
mina l-janati
مِّنَ ٱلْجَنَّةِ
சொர்க்கத்தில்
ghurafan
غُرَفًا
பல அறைகளை
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமானவர்கள்
fīhā
فِيهَاۚ
அதில்
niʿ'ma
نِعْمَ
மிகச் சிறப்பானதே
ajru
أَجْرُ
கூலி
l-ʿāmilīna
ٱلْعَٰمِلِينَ
அமல் செய்தவர்களின்
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் சுவனபதிகளிலுள்ள மேல் மாடிகளில் அமர்த்துவோம். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். நற்செயல்கள் செய்தவர்களின் கூலியும் நன்றே. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫௮)
Tafseer
௫௯

الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ٥٩

alladhīna ṣabarū
ٱلَّذِينَ صَبَرُوا۟
அவர்கள் பொறுமையாக இருந்தனர்
waʿalā
وَعَلَىٰ
இன்னும் மீதே
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவன்
yatawakkalūna
يَتَوَكَّلُونَ
சார்ந்து இருந்தனர்
உண்மை நம்பிக்கையாளர்கள் (தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக்கொண்டு தங்கள் இறைவனையே நம்பியிருப்பார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫௯)
Tafseer
௬௦

وَكَاَيِّنْ مِّنْ دَاۤبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَاۖ اللّٰهُ يَرْزُقُهَا وَاِيَّاكُمْ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٦٠

waka-ayyin
وَكَأَيِّن
எத்தனையோ
min dābbatin
مِّن دَآبَّةٍ
கால்நடைகள்
lā taḥmilu
لَّا تَحْمِلُ
சுமப்பதில்லை
riz'qahā
رِزْقَهَا
தனது உணவை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
yarzuquhā
يَرْزُقُهَا
அவற்றுக்கும் உணவளிக்கிறான்
wa-iyyākum
وَإِيَّاكُمْۚ
உங்களுக்கும்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
உயிர்வாழும் பிராணிகளில் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச் சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ்தான் உணவளிக்கிறான். (இவ்வாறிருக்க அதற்காக நீங்கள் ஏன் அதிகக் கவலைப்பட வேண்டும்.) அவனோ (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬௦)
Tafseer