مَثَلُ الَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اَوْلِيَاۤءَ كَمَثَلِ الْعَنْكَبُوْتِۚ اِتَّخَذَتْ بَيْتًاۗ وَاِنَّ اَوْهَنَ الْبُيُوْتِ لَبَيْتُ الْعَنْكَبُوْتِۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ ٤١
- mathalu
- مَثَلُ
- உதாரணம்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ittakhadhū
- ٱتَّخَذُوا۟
- ஆக்கிக் கொண்டனர்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- awliyāa
- أَوْلِيَآءَ
- பாதுகாவலர்களாக
- kamathali
- كَمَثَلِ
- உதாரணத்தைப் போல
- l-ʿankabūti
- ٱلْعَنكَبُوتِ
- சிலந்தியின்
- ittakhadhat
- ٱتَّخَذَتْ
- அது ஆக்கிக் கொண்டது
- baytan
- بَيْتًاۖ
- ஒரு வீட்டை
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- awhana
- أَوْهَنَ
- மிக பலவீனமானது
- l-buyūti
- ٱلْبُيُوتِ
- வீடுகளில்
- labaytu
- لَبَيْتُ
- வீடே
- l-ʿankabūti
- ٱلْعَنكَبُوتِۖ
- சிலந்தியின்
- law kānū yaʿlamūna
- لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
- அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
அல்லாஹ்வையன்றி (மற்றவைகளைத் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்களின் உதாரணம்: நூலாம் பூச்சி கட்டிய வீட்டை(த் தாங்கள் வசிக்க எடுத்துக் கொண்டவர்களின் உதாரணத்தை) ஒத்திருக்கின்றது. வீடுகளில் எல்லாம் மிக்க பலவீனமானது நிச்சயமாக நூலாம் பூச்சியின் வீடுதான். (நூலாம் பூச்சியின் வீடு இவர்களை எவ்வாறு பாதுகாக்க முடியாதோ அவ்வாறே இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்ட தெய்வங்களாலும் இவர்களை பாதுகாக்க முடியாது. இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௧)Tafseer
اِنَّ اللّٰهَ يَعْلَمُ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مِنْ شَيْءٍۗ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٤٢
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- அறிகின்றான்
- mā yadʿūna
- مَا يَدْعُونَ
- அவர்கள் அழைக்கின்றவற்றை
- min dūnihi
- مِن دُونِهِۦ
- அவனையன்றி
- min shayin
- مِن شَىْءٍۚ
- எதுவாக இருந்தாலும்
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- மகா ஞானவான்
அல்லாஹ்வையன்றி அவர்கள் எவைகளை (இறைவனென) அழைக்கின்றார்களோ, அவைகளை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அவைகளுக்கு யாதொரு சக்தியுமில்லை; அறிவும் இல்லை.) அவன்தான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௨)Tafseer
وَتِلْكَ الْاَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِۚ وَمَا يَعْقِلُهَآ اِلَّا الْعَالِمُوْنَ ٤٣
- watil'ka
- وَتِلْكَ
- இந்த
- l-amthālu
- ٱلْأَمْثَٰلُ
- உதாரணங்கள்
- naḍribuhā
- نَضْرِبُهَا
- அவற்றை நாம் விவரிக்கிறோம்
- lilnnāsi
- لِلنَّاسِۖ
- மக்களுக்கு
- wamā yaʿqiluhā
- وَمَا يَعْقِلُهَآ
- இவற்றை சிந்தித்து புரியமாட்டார்கள்
- illā
- إِلَّا
- தவிர
- l-ʿālimūna
- ٱلْعَٰلِمُونَ
- அறிஞர்களை
மனிதர்களுக்காகவே இவ்வுதாரணங்களை நாம் கூறுகிறோம். (சிந்தித்து அறியக்கூடிய) ஞானமுடையவர்களைத் தவிர (மற்றெவரும்) இதனை உணர்ந்து கொள்ள மாட்டார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௩)Tafseer
خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّلْمُؤْمِنِيْنَ ࣖ ۔ ٤٤
- khalaqa
- خَلَقَ
- படைத்தான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களையும்
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- பூமியையும்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّۚ
- உண்மையான காரணத்திற்கே
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- fī dhālika
- فِى ذَٰلِكَ
- இதில்
- laāyatan
- لَءَايَةً
- ஓர் அத்தாட்சி இருக்கிறது
- lil'mu'minīna
- لِّلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களுக்கு
வானங்களையும் பூமியையும் படைத்தவன் மெய்யாகவே அல்லாஹ்தான். (வேறொருவருமன்று.) நம்பிக்கை கொண்டவர் களுக்கு நிச்சயமாக இவைகளிலும் (பல) அத்தாட்சி(கள்) இருக்கின்றன. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௪)Tafseer
اُتْلُ مَآ اُوْحِيَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَۗ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَاۤءِ وَالْمُنْكَرِ ۗوَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ۗوَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ ٤٥
- ut'lu
- ٱتْلُ
- ஓதுவீராக!
- mā ūḥiya
- مَآ أُوحِىَ
- வஹீ அறிவிக்கப்பட்டதை
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- mina l-kitābi
- مِنَ ٱلْكِتَٰبِ
- வேதத்தில்
- wa-aqimi
- وَأَقِمِ
- இன்னும் நிலைநிறுத்துவீராக
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَۖ
- தொழுகையை
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- l-ṣalata
- ٱلصَّلَوٰةَ
- தொழுகை
- tanhā
- تَنْهَىٰ
- தடுக்கிறது
- ʿani l-faḥshāi
- عَنِ ٱلْفَحْشَآءِ
- மானக்கேடானவற்றை விட்டும்
- wal-munkari
- وَٱلْمُنكَرِۗ
- தீயகாரியங்களை விட்டும்
- waladhik'ru
- وَلَذِكْرُ
- நினைவு கூர்வது
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- akbaru
- أَكْبَرُۗ
- மிகப் பெரியது
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- நன்கறிகின்றான்
- mā taṣnaʿūna
- مَا تَصْنَعُونَ
- நீங்கள் செய்பவற்றை
(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீங்கள் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவைகளுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்). ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௫)Tafseer
۞ وَلَا تُجَادِلُوْٓا اَهْلَ الْكِتٰبِ اِلَّا بِالَّتِيْ هِيَ اَحْسَنُۖ اِلَّا الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ وَقُوْلُوْٓا اٰمَنَّا بِالَّذِيْٓ اُنْزِلَ اِلَيْنَا وَاُنْزِلَ اِلَيْكُمْ وَاِلٰهُنَا وَاِلٰهُكُمْ وَاحِدٌ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ٤٦
- walā tujādilū
- وَلَا تُجَٰدِلُوٓا۟
- தர்க்கம் செய்யாதீர்கள்
- ahla l-kitābi
- أَهْلَ ٱلْكِتَٰبِ
- வேதமுடையவர்களிடம்
- illā
- إِلَّا
- அன்றி
- bi-allatī hiya
- بِٱلَّتِى هِىَ
- முறையில்/அது
- aḥsanu
- أَحْسَنُ
- மிக அழகியது
- illā
- إِلَّا
- தவிர
- alladhīna ẓalamū
- ٱلَّذِينَ ظَلَمُوا۟
- அநியாயக்காரர்களை
- min'hum
- مِنْهُمْۖ
- அவர்களில் இருக்கின்ற
- waqūlū
- وَقُولُوٓا۟
- இன்னும் நீங்கள் கூறுங்கள்
- āmannā
- ءَامَنَّا
- நம்பிக்கை கொண்டோம்
- bi-alladhī unzila
- بِٱلَّذِىٓ أُنزِلَ
- இறக்கப்பட்டதையும்
- ilaynā
- إِلَيْنَا
- எங்களுக்கு
- wa-unzila
- وَأُنزِلَ
- இறக்கப்பட்டதையும்
- ilaykum
- إِلَيْكُمْ
- உங்களுக்கு
- wa-ilāhunā
- وَإِلَٰهُنَا
- எங்கள் கடவுளும்
- wa-ilāhukum
- وَإِلَٰهُكُمْ
- உங்கள் கடவுளும்
- wāḥidun
- وَٰحِدٌ
- ஒருவன்தான்
- wanaḥnu
- وَنَحْنُ
- நாங்கள்
- lahu
- لَهُۥ
- அவனுக்குத்தான்
- mus'limūna
- مُسْلِمُونَ
- கீழ்ப்பணிந்தவர்கள்
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் வேதத்தை உடையவர் களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) அழகான முறையிலன்றி அவர்களுடன் தர்க்கிக்க வேண்டாம். ஆயினும், அவர்களில் எவரேனும் வரம்பு மீறிவிட்டால் (அதற்குத் தக்கவாறு நீங்கள் பதில் கூறுவது உங்கள் மீது குற்றமாகாது. அவர்களுடன் தர்க்கித்தால்) "எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தை நம்பிக்கை கொள்கின்ற படியே உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும் நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஒருவனே. நாங்கள் அவனுக்குத்தான் முற்றிலும் வழிப்பட்டு நடக்கின்றோம்" என்றும் கூறுங்கள்! ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௬)Tafseer
وَكَذٰلِكَ اَنْزَلْنَآ اِلَيْكَ الْكِتٰبَۗ فَالَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْكِتٰبَ يُؤْمِنُوْنَ بِهٖۚ وَمِنْ هٰٓؤُلَاۤءِ مَنْ يُّؤْمِنُ بِهٖۗ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَآ اِلَّا الْكٰفِرُوْنَ ٤٧
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- இவ்வாறுதான்
- anzalnā
- أَنزَلْنَآ
- நாம் இறக்கினோம்
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَۚ
- இவ்வேதத்தை
- fa-alladhīna ātaynāhumu
- فَٱلَّذِينَ ءَاتَيْنَٰهُمُ
- எவர்கள்/கொடுத்தோம்/அவர்களுக்கு
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- வேதத்தை
- yu'minūna
- يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்வார்கள்
- bihi
- بِهِۦۖ
- இதை
- wamin hāulāi
- وَمِنْ هَٰٓؤُلَآءِ
- இன்னும் இவர்களில்
- man yu'minu bihi
- مَن يُؤْمِنُ بِهِۦۚ
- நம்பிக்கை கொள்கின்றவர்களும்/இதை
- wamā yajḥadu
- وَمَا يَجْحَدُ
- மறுக்க மாட்டார்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَآ
- நமது வசனங்களை
- illā
- إِلَّا
- தவிர
- l-kāfirūna
- ٱلْكَٰفِرُونَ
- நிராகரிப்பாளர்களை
(நபியே! அவர்களுக்கு வேதத்தை இறக்கிய) அவ்வாறே நாம் உங்களுக்கு இவ்வேதத்தை அருளியிருக்கின்றோம். ஆகவே, நாம் எவர்களுக்கு (முன்னர்) வேதம் கொடுத்திருக்கின்றோமோ அவர்க(ளில் உள்ள சத்தியவான்க) ள் இ(வ்வேதத்)தையும் (அவசியம்) நம்பிக்கை கொள்வார்கள். அன்றி, (அரபிகளாகிய) இவர்களில் உள்ள (நியாயவாதிகளில்) பலரும் இதனை நம்பிக்கை கொள்கின்றனர். (மனமுரண்டாக நிராகரிக்கும்) காஃபிர்களைத் தவிர (மற்ற எவரும்) நம்முடைய வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௭)Tafseer
وَمَا كُنْتَ تَتْلُوْا مِنْ قَبْلِهٖ مِنْ كِتٰبٍ وَّلَا تَخُطُّهٗ بِيَمِيْنِكَ اِذًا لَّارْتَابَ الْمُبْطِلُوْنَ ٤٨
- wamā kunta
- وَمَا كُنتَ
- நீர் இல்லை
- tatlū
- تَتْلُوا۟
- ஓதுபவராக
- min qablihi
- مِن قَبْلِهِۦ
- இதற்கு முன்
- min kitābin
- مِن كِتَٰبٍ
- ஒரு வேதத்தை
- walā takhuṭṭuhu
- وَلَا تَخُطُّهُۥ
- இன்னும் அதை எழுதுபவராகவும் இல்லை
- biyamīnika
- بِيَمِينِكَۖ
- உமது வலக்கரத்தால்
- idhan
- إِذًا
- அப்படி இருந்திருந்தால்
- la-ir'tāba
- لَّٱرْتَابَ
- நிச்சயமாக சந்தேகம் கொண்டிருப்பார்கள்
- l-mub'ṭilūna
- ٱلْمُبْطِلُونَ
- வீணர்கள்
(நபியே!) நீங்கள் இதற்கு முன்னர் யாதொரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உங்களுடைய கையால் நீங்கள் அதனை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (இதனை நீங்கள் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௮)Tafseer
بَلْ هُوَ اٰيٰتٌۢ بَيِّنٰتٌ فِيْ صُدُوْرِ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَۗ وَمَا يَجْحَدُ بِاٰيٰتِنَآ اِلَّا الظّٰلِمُوْنَ ٤٩
- bal
- بَلْ
- மாறாக,
- huwa
- هُوَ
- இது
- āyātun
- ءَايَٰتٌۢ
- அத்தாட்சிகளாகும்
- bayyinātun
- بَيِّنَٰتٌ
- தெளிவான
- fī ṣudūri
- فِى صُدُورِ
- நெஞ்சங்களில்
- alladhīna ūtū
- ٱلَّذِينَ أُوتُوا۟
- கொடுக்கப்பட்டவர்களின்
- l-ʿil'ma
- ٱلْعِلْمَۚ
- கல்வி
- wamā yajḥadu
- وَمَا يَجْحَدُ
- மறுக்க மாட்டார்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَآ
- நமது வசனங்களை
- illā
- إِلَّا
- தவிர
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- அநியாயக்காரர்களை
அவ்வாறன்று. இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இது பதிந்துவிடும். ஆகவே, அநியாயக்காரர்களைத் தவிர (மற்றெவரும்) நம்முடைய இவ்வசனங்களை நிராகரிக்க மாட்டார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௯)Tafseer
وَقَالُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ اٰيٰتٌ مِّنْ رَّبِّهٖ ۗ قُلْ اِنَّمَا الْاٰيٰتُ عِنْدَ اللّٰهِ ۗوَاِنَّمَآ اَنَا۠ نَذِيْرٌ مُّبِيْنٌ ٥٠
- waqālū
- وَقَالُوا۟
- அவர்கள் கூறினர்
- lawlā unzila
- لَوْلَآ أُنزِلَ
- இறக்கப்பட வேண்டாமா?
- ʿalayhi
- عَلَيْهِ
- இவர் மீது
- āyātun
- ءَايَٰتٌ
- அத்தாட்சிகள்
- min rabbihi
- مِّن رَّبِّهِۦۖ
- அவரது இறைவனிடமிருந்து
- qul
- قُلْ
- கூறுவீராக!
- innamā
- إِنَّمَا
- எல்லாம்
- l-āyātu
- ٱلْءَايَٰتُ
- அத்தாட்சிகள்
- ʿinda l-lahi
- عِندَ ٱللَّهِ
- அல்லாஹ்விடம்
- wa-innamā
- وَإِنَّمَآ
- எல்லாம்
- anā
- أَنَا۠
- நான்
- nadhīrun
- نَذِيرٌ
- எச்சரிப்பாளர்தான்
- mubīnun
- مُّبِينٌ
- தெளிவான
அன்றி ("தாங்கள் விரும்புகிறபடி) சில அத்தாட்சிகள் அவருடைய இறைவனால் அவருக்கு அளிக்கப்பட வேண்டாமா?" என்று இவ்வக்கிரமக்காரர்கள் கூறுகின்றனர். அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றன. (என்னிடமில்லை.) நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவன் மட்டும்தான்." ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫௦)Tafseer