Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்கபூத் - Page: 4

Al-'Ankabut

(al-ʿAnkabūt)

௩௧

وَلَمَّا جَاۤءَتْ رُسُلُنَآ اِبْرٰهِيْمَ بِالْبُشْرٰىۙ قَالُوْٓا اِنَّا مُهْلِكُوْٓا اَهْلِ هٰذِهِ الْقَرْيَةِ ۚاِنَّ اَهْلَهَا كَانُوْا ظٰلِمِيْنَ ۚ ٣١

walammā jāat
وَلَمَّا جَآءَتْ
வந்த போது
rusulunā
رُسُلُنَآ
நமது தூதர்கள்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்ராஹீமிடம்
bil-bush'rā
بِٱلْبُشْرَىٰ
நற்செய்தியுடன்
qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
muh'likū
مُهْلِكُوٓا۟
அழிக்கப் போகிறோம்
ahli
أَهْلِ
வசிப்பவர்
hādhihi
هَٰذِهِ
இந்த
l-qaryati
ٱلْقَرْيَةِۖ
ஊரில்
inna
إِنَّ
நிச்சயமாக
ahlahā
أَهْلَهَا
இதில் வசிப்பவர்கள்
kānū
كَانُوا۟
இருக்கின்றனர்
ẓālimīna
ظَٰلِمِينَ
தீயவர்களாக
(மலக்குகளாகிய) நம்முடைய தூதர்கள், இப்ராஹீமுக்கு நற்செய்தி கூற அவரிடம் வந்த சமயத்தில் (அவரை நோக்கி "லூத்துடைய) ஊராரை நிச்சயமாக நாங்கள் அழித்து விடுவோம். ஏனென்றால், நிச்சயமாக அவ்வூரார் (பாவம் செய்வதில் எல்லை கடந்து) அநியாயக் காரர்களாக ஆகிவிட்டார்கள்" என்று கூறினார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௩௧)
Tafseer
௩௨

قَالَ اِنَّ فِيْهَا لُوْطًا ۗقَالُوْا نَحْنُ اَعْلَمُ بِمَنْ فِيْهَا ۖ لَنُنَجِّيَنَّهٗ وَاَهْلَهٗٓ اِلَّا امْرَاَتَهٗ كَانَتْ مِنَ الْغٰبِرِيْنَ ٣٢

qāla
قَالَ
அவர் கூறினார்
inna
إِنَّ
நிச்சயமாக
fīhā
فِيهَا
அதில் இருக்கிறார்
lūṭan
لُوطًاۚ
லூத்
qālū
قَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
naḥnu
نَحْنُ
நாங்கள்
aʿlamu
أَعْلَمُ
நன்கறிந்தவர்கள்
biman fīhā
بِمَن فِيهَاۖ
அதில்உள்ளவர்களை
lanunajjiyannahu
لَنُنَجِّيَنَّهُۥ
நிச்சயமாக அவரையும் நாம் பாதுகாப்போம்
wa-ahlahu
وَأَهْلَهُۥٓ
அவருடைய குடும்பத்தாரையும்
illā im'ra-atahu
إِلَّا ٱمْرَأَتَهُۥ
தவிர/அவருடைய மனைவியை
kānat
كَانَتْ
அவள்ஆகிவிடுவாள்
mina l-ghābirīna
مِنَ ٱلْغَٰبِرِينَ
மீதம் இருப்பவர்களில்
அதற்கவர் (அம்மலக்குகளை நோக்கி) "நிச்சயமாக அதில் லூத்தும் இருக்கின்றாரே!" என்று கூறினார். அதற்கவர்கள் "அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நிச்சயமாக நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம். அவருடைய மனைவி (அவருடன் செல்லாது அழிந்து போகக் கூடிய அவ்வூராருடன்) தங்கி (அவர்களுடன் அவளும் அழிந்து) விடுவாள்" என்று கூறினார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௩௨)
Tafseer
௩௩

وَلَمَّآ اَنْ جَاۤءَتْ رُسُلُنَا لُوْطًا سِيْۤءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالُوْا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۗاِنَّا مُنَجُّوْكَ وَاَهْلَكَ اِلَّا امْرَاَتَكَ كَانَتْ مِنَ الْغٰبِرِيْنَ ٣٣

walammā an jāat
وَلَمَّآ أَن جَآءَتْ
வந்த போது
rusulunā
رُسُلُنَا
நமது தூதர்கள்
lūṭan
لُوطًا
லூத்திடம்
sīa
سِىٓءَ
அவர் மனம் புண்பட்டார்
bihim
بِهِمْ
அவர்களால்
waḍāqa
وَضَاقَ
இன்னும் அவர் நெருக்கடிக்கு உள்ளானார்
bihim
بِهِمْ
அவர்களால்
dharʿan
ذَرْعًا
மன
waqālū
وَقَالُوا۟
அவர்கள் கூறினார்கள்
lā takhaf
لَا تَخَفْ
பயப்படாதீர்
walā taḥzan
وَلَا تَحْزَنْۖ
இன்னும் கவலைப்படாதீர்!
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
munajjūka
مُنَجُّوكَ
உம்மைபாதுகாப்போம்
wa-ahlaka
وَأَهْلَكَ
உமது குடும்பத்தையும்
illā
إِلَّا
தவிர
im'ra-ataka
ٱمْرَأَتَكَ
உமது மனைவியை
kānat
كَانَتْ
அவள்ஆகிவிடுவாள்
mina l-ghābirīna
مِنَ ٱلْغَٰبِرِينَ
மீதம் இருப்பவர்களில்
பின்னர் நம்முடைய (அத்)தூதர்கள் லூத் (நபி) இடம் வந்தபொழுது, (அவ்வூரார் தீய எண்ணத்துடன் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். அப்போது) அவர், (அந்த மலக்குகளை பாதுகாத்துகொள்ள) தன் கையால் ஒன்றும் செய்ய முடியாமல், அவர்களுக்காகத் துக்கித்தார். அதற்கவர்கள், (அவரை நோக்கி) "நீங்கள் அஞ்ச வேண்டாம்; துக்கிக்கவும் வேண்டாம். (நாம் இவ்வூராரை அழித்துவிட உங்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மலக்குகளாவோம்.) நிச்சயமாக நாம் உங்களையும், உங்களுடைய மனைவியைத் தவிர, உங்களது குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்வோம். அவள் (உங்களுடன் வராது, இவ்வூராருடன்) தங்கி (அழிந்து) விடுவாள்" என்று கூறினார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௩௩)
Tafseer
௩௪

اِنَّا مُنْزِلُوْنَ عَلٰٓى اَهْلِ هٰذِهِ الْقَرْيَةِ رِجْزًا مِّنَ السَّمَاۤءِ بِمَا كَانُوْا يَفْسُقُوْنَ ٣٤

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
munzilūna
مُنزِلُونَ
இறக்குவோம்
ʿalā
عَلَىٰٓ
மீது
ahli
أَهْلِ
வசிப்பவர்
hādhihi
هَٰذِهِ
இந்த
l-qaryati
ٱلْقَرْيَةِ
ஊரில்
rij'zan
رِجْزًا
தண்டனையை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
bimā kānū yafsuqūna
بِمَا كَانُوا۟ يَفْسُقُونَ
அவர்கள் பாவம் செய்துகொண்டு இருந்ததால்
"அன்றி, இவ்வூரார் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் காரணமாக நிச்சயமாக நாம் இவர்கள்மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைப்போம்" என்று கூறினார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௩௪)
Tafseer
௩௫

وَلَقَدْ تَّرَكْنَا مِنْهَآ اٰيَةً ۢ بَيِّنَةً لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ ٣٥

walaqad
وَلَقَد
திட்டவட்டமாக
taraknā
تَّرَكْنَا
நாம் விட்டுள்ளோம்
min'hā
مِنْهَآ
அதில்
āyatan
ءَايَةًۢ
அத்தாட்சியை
bayyinatan
بَيِّنَةً
தெளிவான
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yaʿqilūna
يَعْقِلُونَ
சிந்தித்து புரிகின்ற
(பின்னர், மலக்குகள் கூறியவாறே அவர்கள் மீது வேதனை இறங்கி அவர்கள் அனைவரும் அழிந்துவிட்டனர்.) நிச்சயமாக நாம் அறிவுடைய மக்களுக்குத் தெளிவான அத்தாட்சியை (இன்றளவும்) அவர்களிருந்த ஊரில் விட்டு வைத்திருக்கின்றோம். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௩௫)
Tafseer
௩௬

وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًاۙ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ وَارْجُوا الْيَوْمَ الْاٰخِرَ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ ۖ ٣٦

wa-ilā madyana
وَإِلَىٰ مَدْيَنَ
இன்னும் ‘மத்யன்’க்கு
akhāhum
أَخَاهُمْ
சகோதரர் அவர்களுடைய
shuʿayban
شُعَيْبًا
ஷுஐபை
faqāla
فَقَالَ
அவர் கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே!
uʿ'budū
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்!
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-ir'jū
وَٱرْجُوا۟
இன்னும் ஆதரவு வையுங்கள்!
l-yawma
ٱلْيَوْمَ
நாளை
l-ākhira
ٱلْءَاخِرَ
மறுமை
walā taʿthaw
وَلَا تَعْثَوْا۟
வரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
muf'sidīna
مُفْسِدِينَ
தீயவர்களாக இருந்து
மத்யன்வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். இறுதி நாளை எதிர்பார்த்திருங்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்" என்று கூறினார். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௩௬)
Tafseer
௩௭

فَكَذَّبُوْهُ فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِيْ دَارِهِمْ جٰثِمِيْنَ ۙ ٣٧

fakadhabūhu
فَكَذَّبُوهُ
அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்
fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
ஆகவே, அவர்களைப் பிடித்தது
l-rajfatu
ٱلرَّجْفَةُ
நிலநடுக்கம்
fa-aṣbaḥū
فَأَصْبَحُوا۟
அவர்கள் காலையில் ஆகிவிட்டனர்
fī dārihim
فِى دَارِهِمْ
தங்கள் இல்லத்தில்
jāthimīna
جَٰثِمِينَ
இறந்தவர்களாக
எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அவர்களைப் பூகம்பம் பிடித்துக்கொண்டது. எனவே, அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இறந்துவிட்டனர். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௩௭)
Tafseer
௩௮

وَعَادًا وَّثَمُوْدَا۟ وَقَدْ تَّبَيَّنَ لَكُمْ مِّنْ مَّسٰكِنِهِمْۗ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِيْلِ وَكَانُوْا مُسْتَبْصِرِيْنَ ۙ ٣٨

waʿādan
وَعَادًا
இன்னும் ஆதை
wathamūdā
وَثَمُودَا۟
இன்னும் சமூதை
waqad tabayyana
وَقَد تَّبَيَّنَ
தெளிவாக இருக்கின்றது
lakum
لَكُم
உங்களுக்கு
min masākinihim
مِّن مَّسَٰكِنِهِمْۖ
அவர்களின் தங்குமிடங்களில் இருந்து
wazayyana
وَزَيَّنَ
அலங்கரித்தான்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
faṣaddahum
فَصَدَّهُمْ
தடுத்தான் அவர்களை
ʿani l-sabīli
عَنِ ٱلسَّبِيلِ
பாதையிலிருந்து
wakānū
وَكَانُوا۟
அவர்கள் இருந்தனர்
mus'tabṣirīna
مُسْتَبْصِرِينَ
தெளிவானவர்களாக
அன்றி, இவ்வாறே ஆது, ஸமூது கூட்டத்தினரையும் (அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்து விட்டோம். (நீங்கள் போக வர உள்ள வழியில்) அவர்கள் இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய (பாவச்) செயலையே ஷைத்தான் அழகாகக் காண்பித்து, நேரான வழியில் செல்லாது அவர்களைத் தடுத்துக் கொண்டான். அவர்கள் நல்லறிவுடையவர் களாகத்தான் இருந்தார்கள். (ஷைத்தானுடைய வலையில் சிக்கி இக்கதிக்கு ஆளானார்கள்.) ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௩௮)
Tafseer
௩௯

وَقَارُوْنَ وَفِرْعَوْنَ وَهَامٰنَۗ وَلَقَدْ جَاۤءَهُمْ مُّوْسٰى بِالْبَيِّنٰتِ فَاسْتَكْبَرُوْا فِى الْاَرْضِ وَمَا كَانُوْا سَابِقِيْنَ ۚ ٣٩

waqārūna
وَقَٰرُونَ
இன்னும் காரூனையும்
wafir'ʿawna
وَفِرْعَوْنَ
ஃபிர்அவ்னையும்
wahāmāna
وَهَٰمَٰنَۖ
ஹாமானையும்
walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
jāahum
جَآءَهُم
அவர்களிடம் வந்தார்
mūsā
مُّوسَىٰ
மூசா
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
fa-is'takbarū
فَٱسْتَكْبَرُوا۟
அவர்கள் பெருமையடித்தனர்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wamā kānū
وَمَا كَانُوا۟
அவர்கள் இல்லை
sābiqīna
سَٰبِقِينَ
தப்பி விடுபவர்களாக
காரூனையும், ஃபிர்அவ்னையும், ஹாமானையும் (நாம் இவ்வாறே அழித்துவிட்டோம்.) நிச்சயமாக மூஸா இவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். எனினும், இவர்கள் (அவைகளை நிராகரித்து விட்டுப்) பூமியில் பெருமை கொண்டு நடந்ததினால் (நம் வேதனைக்கு உள்ளானார்கள். அதில் இருந்து) அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியவில்லை. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௩௯)
Tafseer
௪௦

فَكُلًّا اَخَذْنَا بِذَنْۢبِهٖۙ فَمِنْهُمْ مَّنْ اَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا ۚوَمِنْهُمْ مَّنْ اَخَذَتْهُ الصَّيْحَةُ ۚوَمِنْهُمْ مَّنْ خَسَفْنَا بِهِ الْاَرْضَۚ وَمِنْهُمْ مَّنْ اَغْرَقْنَاۚ وَمَا كَانَ اللّٰهُ لِيَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْٓا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ ٤٠

fakullan
فَكُلًّا
ஒவ்வொருவரையும்
akhadhnā
أَخَذْنَا
நாம் தண்டித்தோம்
bidhanbihi
بِذَنۢبِهِۦۖ
அவர்களின் பாவத்தினால்
famin'hum
فَمِنْهُم
இவர்களில்
man arsalnā
مَّنْ أَرْسَلْنَا
எவர்கள்/நாம் அனுப்பினோம்
ʿalayhi
عَلَيْهِ
அவர்கள் மீது
ḥāṣiban
حَاصِبًا
கல் மழையை
wamin'hum
وَمِنْهُم
இன்னும் இவர்களில்
man akhadhathu
مَّنْ أَخَذَتْهُ
எவர்கள்/பிடித்தோம்/அவர்கள்
l-ṣayḥatu
ٱلصَّيْحَةُ
இடி முழக்கம்
wamin'hum
وَمِنْهُم
இன்னும் , இவர்களில்
man khasafnā
مَّنْ خَسَفْنَا
எவர்கள்/நாம் சொருகினோம்
bihi
بِهِ
அவர்களை
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியில்
wamin'hum
وَمِنْهُم
இன்னும் இவர்களில்
man aghraqnā
مَّنْ أَغْرَقْنَاۚ
எவர்கள்/நாம் மூழ்கடித்தோம்
wamā kāna
وَمَا كَانَ
இல்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
liyaẓlimahum
لِيَظْلِمَهُمْ
அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக
walākin
وَلَٰكِن
எனினும்
kānū
كَانُوٓا۟
அவர்கள் இருந்தனர்
anfusahum
أَنفُسَهُمْ
தங்களுக்கே
yaẓlimūna
يَظْلِمُونَ
அநியாயம் செய்பவர்களாக
அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். அவர்களில் (ஆது மக்களைப் போன்ற) சிலர் மீது நாம் கல்மழை பொழிந்தோம். அவர்களில் (ஸமூது மக்களைப் போன்ற) சிலரை இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்களில் (காரூன் போன்ற) சிலரை நாம் பூமியில் ஆழ்த்திவிட்டோம். அவர்களில் (ஃபிர்அவ்ன், ஹாமான் போன்ற) சிலரை (கடலில்) மூழ்கடித்தோம். அல்லாஹ் இவர்களுக்கு அநீதி செய்யவில்லை. எனினும், அவர்கள் (அனைவரும்) தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪௦)
Tafseer