Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்கபூத் - Page: 3

Al-'Ankabut

(al-ʿAnkabūt)

௨௧

يُعَذِّبُ مَنْ يَّشَاۤءُ وَيَرْحَمُ مَنْ يَّشَاۤءُ ۚوَاِلَيْهِ تُقْلَبُوْنَ ٢١

yuʿadhibu
يُعَذِّبُ
வேதனை செய்வான்
man yashāu
مَن يَشَآءُ
தான் நாடியவரை
wayarḥamu
وَيَرْحَمُ
இன்னும் கருணை காட்டுவான்
man yashāu
مَن يَشَآءُۖ
அவன் நாடியவருக்கு
wa-ilayhi
وَإِلَيْهِ
அவனிடமே
tuq'labūna
تُقْلَبُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
அவன் நாடியவர்களை வேதனை செய்வான்; அவன் நாடியவர்களுக்கு அருள் புரிவான். அவனளவிலேயே நீங்கள் திருப்பப்படுவீர்கள்." ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௨௧)
Tafseer
௨௨

وَمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَاۤءِ ۖوَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِيٍّ وَّلَا نَصِيْرٍ ࣖ ٢٢

wamā antum bimuʿ'jizīna
وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ
நீங்கள் பலவீனப்படுத்திவிட முடியாது
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
walā fī l-samāi
وَلَا فِى ٱلسَّمَآءِۖ
இன்னும் வானத்தில்
wamā lakum
وَمَا لَكُم
இன்னும் உங்களுக்கு இல்லை
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
min waliyyin
مِن وَلِىٍّ
ஒரு பாதுகாவலரும்
walā naṣīrin
وَلَا نَصِيرٍ
உதவியாளரும்
(அவன் உங்களை வேதனை செய்ய விரும்பினால்) வானத்திலோ பூமியிலோ (ஒளிந்து கொண்டு) நீங்கள் அவனைத் தோற்கடித்துவிட முடியாது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு யாதொரு பாதுகாவலனுமில்லை; உதவி செய்பவனுமில்லை. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௨௨)
Tafseer
௨௩

وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ وَلِقَاۤىِٕهٖٓ اُولٰۤىِٕكَ يَىِٕسُوْا مِنْ رَّحْمَتِيْ وَاُولٰۤىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٢٣

wa-alladhīna kafarū
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிக்கின்றவர்கள்
biāyāti
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளையும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
waliqāihi
وَلِقَآئِهِۦٓ
அவனது சந்திப்பையும்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ya-isū
يَئِسُوا۟
நிராசை அடைந்து விட்டனர்
min raḥmatī
مِن رَّحْمَتِى
எனது கருணையிலிருந்து
wa-ulāika
وَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
lahum
لَهُمْ
அவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
தண்டனை
alīmun
أَلِيمٌ
வேதனை தரும்
எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரித்து அவனைச் சந்திப்பதையும் மறுக்கின்றனரோ, அவர்கள் நம் கிருபையைப் பற்றி நம்பிக்கை இழந்துவிடுவார்கள். அவர்களுக்கு நிச்சயமாகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௨௩)
Tafseer
௨௪

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖٓ اِلَّآ اَنْ قَالُوا اقْتُلُوْهُ اَوْ حَرِّقُوْهُ فَاَنْجٰىهُ اللّٰهُ مِنَ النَّارِۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ٢٤

famā kāna
فَمَا كَانَ
இல்லை
jawāba
جَوَابَ
பதில்
qawmihi
قَوْمِهِۦٓ
அவருடைய மக்களின்
illā
إِلَّآ
தவிர
an qālū
أَن قَالُوا۟
என்று கூறியே
uq'tulūhu
ٱقْتُلُوهُ
அவரைகொள்ளுங்கள்
aw
أَوْ
அல்லது
ḥarriqūhu
حَرِّقُوهُ
அவரை எரித்து விடுங்கள்
fa-anjāhu
فَأَنجَىٰهُ
ஆக, அவரை பாதுகாத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mina l-nāri
مِنَ ٱلنَّارِۚ
நெருப்பிலிருந்து
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில் உள்ளன
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்கின்ற
(இவ்வாறெல்லாம் இப்ராஹீம் நபி தன்னுடைய மக்களுக்குக் கூறியதற்கு) அவர்கள் "இவரை வெட்டிவிடுங்கள்; அல்லது நெருப்பில் எரித்துவிடுங்கள்" என்று கூறியதைத் தவிர (வேறு விதத்தில்) பதில் கூற அவருடைய மக்களால் முடியாது போயிற்று. (பின்னர் இப்ராஹீமை நெருப்பில் எறிந்தார்கள்.) ஆகவே, (அந்) நெருப்பிலிருந்து அல்லாஹ் அவரை காப்பாற்றினான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௨௪)
Tafseer
௨௫

وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًاۙ مَّوَدَّةَ بَيْنِكُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۚ ثُمَّ يَوْمَ الْقِيٰمَةِ يَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّيَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا ۖوَّمَأْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِيْنَۖ ٢٥

waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்
innamā ittakhadhtum
إِنَّمَا ٱتَّخَذْتُم
நீங்கள் எடுத்துக் கொண்டதெல்லாம்
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
awthānan
أَوْثَٰنًا
சிலைகளை
mawaddata
مَّوَدَّةَ
அன்பினால்தான்
baynikum
بَيْنِكُمْ
உங்களுக்கு மத்தியில்
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்வில்
l-dun'yā
ٱلدُّنْيَاۖ
இவ்வுலக
thumma
ثُمَّ
பிறகு
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
yakfuru
يَكْفُرُ
மறுத்து விடுவார்கள்
baʿḍukum
بَعْضُكُم
உங்களில் சிலர்
bibaʿḍin
بِبَعْضٍ
சிலரை
wayalʿanu
وَيَلْعَنُ
சபிப்பார்கள்
baʿḍukum
بَعْضُكُم
உங்களில் சிலர்
baʿḍan
بَعْضًا
சிலரை
wamawākumu
وَمَأْوَىٰكُمُ
உங்கள் தங்குமிடம்
l-nāru
ٱلنَّارُ
நரகம்தான்
wamā lakum
وَمَا لَكُم
உங்களுக்கு யாரும் இல்லை
min nāṣirīna
مِّن نَّٰصِرِينَ
உதவியாளர்கள்
(பின்னும் இப்ராஹீம் அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ்வை அன்றி இந்த சிலைகளைத் தெய்வமாக எடுத்துக் கொண்டதற்கெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையில் (ஒருவருக்கு மற்றவருடன்) உள்ள சிநேக மனப்பான்மைதான் காரணமாகும். பின்னர், மறுமையிலோ உங்களில் ஒருவர் மற்றவரை நிராகரித்து விட்டு உங்களில் ஒருவர் மற்றவரை (நிந்தித்துச்) சபிப்பார். (முடிவில்) நீங்கள் அனைவரும் செல்லும் இடம் (நரகத்தின்) நெருப்புத்தான். அங்கு உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமிரார்" என்று கூறினார். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௨௫)
Tafseer
௨௬

۞ فَاٰمَنَ لَهٗ لُوْطٌۘ وَقَالَ اِنِّيْ مُهَاجِرٌ اِلٰى رَبِّيْ ۗاِنَّهٗ هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ٢٦

faāmana
فَـَٔامَنَ
ஆக, நம்பிக்கைகொண்டார்
lahu
لَهُۥ
அவரை
lūṭun
لُوطٌۘ
லூத்
waqāla
وَقَالَ
இன்னும் அவர் கூறினார்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
muhājirun
مُهَاجِرٌ
வெளியேறிசெல்கிறேன்
ilā rabbī
إِلَىٰ رَبِّىٓۖ
என் இறைவனின் பக்கம்
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
(இப்ராஹீம் இவ்வளவு கூறியும்) லூத் (நபி) ஒருவர் மட்டுமே அவரை நம்பிக்கை கொண்டார். (ஆகவே, இப்ராஹீம் அவரை நோக்கி) "நிச்சயமாக நான் என் இறைவனை நாடி (என்னுடைய இந்த ஊரை விட்டுச்) செல்கிறேன். நிச்சயமாக அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௨௬)
Tafseer
௨௭

وَوَهَبْنَا لَهٗٓ اِسْحٰقَ وَيَعْقُوْبَ وَجَعَلْنَا فِيْ ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتٰبَ وَاٰتَيْنٰهُ اَجْرَهٗ فِى الدُّنْيَا ۚوَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ ٢٧

wawahabnā
وَوَهَبْنَا
நாம் வழங்கினோம்
lahu
لَهُۥٓ
அவருக்கு
is'ḥāqa
إِسْحَٰقَ
இஸ்ஹாக்கையும்
wayaʿqūba
وَيَعْقُوبَ
யஃகூபையும்
wajaʿalnā
وَجَعَلْنَا
இன்னும் ஆக்கினோம்
fī dhurriyyatihi
فِى ذُرِّيَّتِهِ
அவரது சந்ததிகளில்
l-nubuwata
ٱلنُّبُوَّةَ
நபித்துவத்தையும்
wal-kitāba
وَٱلْكِتَٰبَ
வேதங்களையும்
waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்கு நாம் கொடுத்தோம்
ajrahu
أَجْرَهُۥ
அவருடைய கூலியை
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَاۖ
இம்மையில்
wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
lamina l-ṣāliḥīna
لَمِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில் இருப்பார்
ஆகவே, அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததிகளாகக்) கொடுத்து அவர்களுடைய சந்ததிகளுக்கே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் சொந்தமாக்கி, அவருக்கு அவருடைய கூலியை இம்மையிலும் கொடுத்தோம். மறுமையிலோ நிச்சயமாக அவர் நல்லோரில்தான் இருப்பார். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௨௭)
Tafseer
௨௮

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖٓ اِنَّكُمْ لَتَأْتُوْنَ الْفَاحِشَةَ ۖمَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِيْنَ ٢٨

walūṭan
وَلُوطًا
இன்னும் லூத்தை
idh qāla
إِذْ قَالَ
அவர் கூறிய சமயத்தை நினைவு கூறுவீராக!
liqawmihi
لِقَوْمِهِۦٓ
தனது மக்களுக்கு
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
latatūna
لَتَأْتُونَ
செய்கிறீர்கள்
l-fāḥishata
ٱلْفَٰحِشَةَ
மானக்கேடான செயலை
mā sabaqakum
مَا سَبَقَكُم
உங்களுக்கு முன் செய்ததில்லை
bihā min aḥadin
بِهَا مِنْ أَحَدٍ
இதை/ஒருவரும்
mina l-ʿālamīna
مِّنَ ٱلْعَٰلَمِينَ
அகிலத்தாரில்
லூத்தையும் (நம்முடைய தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம்.) அவர் தன் மக்களை நோக்கி "உங்களுக்கு முன்னர் உலகில் (மனிதர்களில்) ஒருவருமே செய்திராத மானக்கேடான ஒரு காரியத்தை நிச்சயமாக நீங்கள் செய்கின்றீர்கள் ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௨௮)
Tafseer
௨௯

اَىِٕنَّكُمْ لَتَأْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِيْلَ ەۙ وَتَأْتُوْنَ فِيْ نَادِيْكُمُ الْمُنْكَرَ ۗفَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖٓ اِلَّآ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللّٰهِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ ٢٩

a-innakum
أَئِنَّكُمْ
latatūna
لَتَأْتُونَ
நீங்கள் உறவு கொள்கிறீர்களா?
l-rijāla
ٱلرِّجَالَ
ஆண்களிடம்
wataqṭaʿūna
وَتَقْطَعُونَ
தடுக்கிறீர்கள்
l-sabīla
ٱلسَّبِيلَ
பாதைகளை
watatūna
وَتَأْتُونَ
செய்கிறீர்கள்
fī nādīkumu
فِى نَادِيكُمُ
உங்கள் சபைகளில்
l-munkara
ٱلْمُنكَرَۖ
கெட்டசெயலை
famā kāna
فَمَا كَانَ
இருக்கவில்லை
jawāba
جَوَابَ
பதில்
qawmihi
قَوْمِهِۦٓ
அவருடைய மக்களின்
illā
إِلَّآ
தவிர
an qālū
أَن قَالُوا۟
என்று கூறியதை
i'tinā
ٱئْتِنَا
எங்களிடம் கொண்டு வருவீராக
biʿadhābi
بِعَذَابِ
தண்டனையை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
in kunta
إِن كُنتَ
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்
(பெண்களைவிட்டு) ஆண்களிடம் (மோகம் கொண்டு) செல்கின்றீர்கள்; (பயணிகளை) வழிமறித்துக் கொள்ளை அடிக்கின்றீர்கள். (மக்கள் நிறைந்த) உங்கள் சபைகளிலும் (பகிரங்கமாகவே) மிக்க வெறுக்கத்தக்க இக்காரியத்தைச் செய்கின்றீர்களே!" என்று கூறினார். அதற்கவர்கள் "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் அல்லாஹ்வுடைய வேதனையை எங்களிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவருடைய மக்கள் கூறவில்லை. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௨௯)
Tafseer
௩௦

قَالَ رَبِّ انْصُرْنِيْ عَلَى الْقَوْمِ الْمُفْسِدِيْنَ ࣖ ٣٠

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா!
unṣur'nī
ٱنصُرْنِى
எனக்கு நீ உதவுவாயாக
ʿalā
عَلَى
எதிராக
l-qawmi
ٱلْقَوْمِ
மக்களுக்கு
l-muf'sidīna
ٱلْمُفْسِدِينَ
கெடுதி செய்கின்ற(வர்கள்)
அதற்கவர் "என் இறைவனே! விஷமம் செய்யும் இந்த மக்களுக்கு விரோதமாக நீ எனக்கு உதவிபுரிவாயாக!" என்று பிரார்த்தித்தார். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௩௦)
Tafseer