Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்கபூத் - Page: 2

Al-'Ankabut

(al-ʿAnkabūt)

௧௧

وَلَيَعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَلَيَعْلَمَنَّ الْمُنٰفِقِيْنَ ١١

walayaʿlamanna
وَلَيَعْلَمَنَّ
நிச்சயமாக நன்கறிவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
walayaʿlamanna
وَلَيَعْلَمَنَّ
இன்னும் நிச்சயமாக நன்கறிவான்
l-munāfiqīna
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களை
ஆகவே, இவர்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் எவர்கள் என்பதையும் அவன் நன்கறிவான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧௧)
Tafseer
௧௨

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوا اتَّبِعُوْا سَبِيْلَنَا وَلْنَحْمِلْ خَطٰيٰكُمْۗ وَمَا هُمْ بِحَامِلِيْنَ مِنْ خَطٰيٰهُمْ مِّنْ شَيْءٍۗ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ١٢

waqāla
وَقَالَ
கூறினர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களை நோக்கி
ittabiʿū
ٱتَّبِعُوا۟
நீங்கள் பின்பற்றுங்கள்!
sabīlanā
سَبِيلَنَا
எங்கள் பாதையை
walnaḥmil
وَلْنَحْمِلْ
நாங்கள் சுமந்து கொள்கிறோம்
khaṭāyākum
خَطَٰيَٰكُمْ
உங்கள் தவறுகளை
wamā hum
وَمَا هُم
அவர்கள் அல்லர்
biḥāmilīna
بِحَٰمِلِينَ
சுமப்பவர்கள்
min khaṭāyāhum
مِنْ خَطَٰيَٰهُم
அவர்களுடைய தவறுகளில்
min shayin
مِّن شَىْءٍۖ
எதையும்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lakādhibūna
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்
நிராகரிப்பவர்கள், நம்பிக்கையாளர்களை நோக்கி "நீங்கள் எங்களுடைய வழியைப் பின்பற்றுங்கள். (அதனால் ஏதும் குற்றங் குறைகள் ஏற்பட்டால்) உங்களுடைய குற்றங்களை நாங்கள் சுமந்து கொள்கின்றோம்" என்று கூறுகின்றனர். எனினும், உங்களுடைய குற்றங்களிலிருந்து எதனையுமே அவர்கள் சுமந்து கொள்ள மாட்டார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே! ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧௨)
Tafseer
௧௩

وَلَيَحْمِلُنَّ اَثْقَالَهُمْ وَاَثْقَالًا مَّعَ اَثْقَالِهِمْ وَلَيُسْـَٔلُنَّ يَوْمَ الْقِيٰمَةِ عَمَّا كَانُوْا يَفْتَرُوْنَ ࣖ ١٣

walayaḥmilunna
وَلَيَحْمِلُنَّ
நிச்சயம் அவர்கள் சுமப்பார்கள்
athqālahum
أَثْقَالَهُمْ
தங்கள்சுமைகளையும்
wa-athqālan
وَأَثْقَالًا
இன்னும் பல சுமைகளையும்
maʿa athqālihim
مَّعَ أَثْقَالِهِمْۖ
தங்களது சுமைகளுடன்
walayus'alunna
وَلَيُسْـَٔلُنَّ
நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
ʿammā
عَمَّا
பற்றி
kānū yaftarūna
كَانُوا۟ يَفْتَرُونَ
இன்னும் அவர்கள் பொய்யை இட்டுக்கட்டிக் கொண்டிருந்தார்கள்
ஆயினும், அவர்கள் தங்கள் பாவச்சுமைகளுடன் (மனிதர்களை வழி கெடுத்த) பாவச்சுமையையும் நிச்சயமாக சுமப்பார்கள். அன்றி, அவர்கள் இவ்வாறு பொய்யாகக் கற்பனை செய்து கூறிக்கொண்டிருந்ததைப் பற்றியும் நிச்சயமாக அவர்கள் மறுமை நாளில் கேட்கப்படுவார்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧௩)
Tafseer
௧௪

وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَلَبِثَ فِيْهِمْ اَلْفَ سَنَةٍ اِلَّا خَمْسِيْنَ عَامًا ۗفَاَخَذَهُمُ الطُّوْفَانُ وَهُمْ ظٰلِمُوْنَ ١٤

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
nūḥan
نُوحًا
நூஹை
ilā qawmihi
إِلَىٰ قَوْمِهِۦ
அவரது மக்களிடம்
falabitha
فَلَبِثَ
அவர் தங்கி இருந்தார்
fīhim
فِيهِمْ
அவர்களுடன்
alfa
أَلْفَ
ஆயிரம்
sanatin
سَنَةٍ
ஆண்டுகள்
illā
إِلَّا
தவிர
khamsīna
خَمْسِينَ
ஐம்பது
ʿāman
عَامًا
ஆண்டுகள்
fa-akhadhahumu
فَأَخَذَهُمُ
இறுதியில் பிடித்தது அவர்களை
l-ṭūfānu
ٱلطُّوفَانُ
வெள்ளப் பிரளயம்
wahum
وَهُمْ
அவர்கள் இருக்க
ẓālimūna
ظَٰلِمُونَ
அநியாயக்காரர்களாக
நூஹ் நபியை நம்முடைய தூதராக அவருடைய மக்களிடம் நாம் அனுப்பி வைத்தோம். அவர் ஐம்பது குறைய ஓராயிரம் வருடங்கள் அவர்களிடையே இருந்தார். (இவ்வளவு காலமிருந்தும் அவரை அவருடைய மக்களில் சிலரைத் தவிர பெரும் பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறு) அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்ததனால் வெள்ளப்பிரளயம் அவர்களைப் பிடித்துக்கொண்டது. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧௪)
Tafseer
௧௫

فَاَنْجَيْنٰهُ وَاَصْحٰبَ السَّفِيْنَةِ وَجَعَلْنٰهَآ اٰيَةً لِّلْعٰلَمِيْنَ ١٥

fa-anjaynāhu
فَأَنجَيْنَٰهُ
அவரை(யும்) நாம் பாதுகாத்தோம்
wa-aṣḥāba l-safīnati
وَأَصْحَٰبَ ٱلسَّفِينَةِ
இன்னும் கப்பலுடையவர்களை(யும்)
wajaʿalnāhā
وَجَعَلْنَٰهَآ
இன்னும் அதை ஆக்கினோம்
āyatan
ءَايَةً
ஓர் அத்தாட்சியாக
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தாருக்கு
எனினும், அவரையும் அவருடைய கப்பலில் இருந்தவர்களையும் நாம் பாதுகாத்துக் கொண்டு இச்சம்பவத்தை உலகத்தாருக்கு நாம் ஒரு படிப்பினை ஆக்கினோம். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧௫)
Tafseer
௧௬

وَاِبْرٰهِيْمَ اِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ ۗذٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ١٦

wa-ib'rāhīma
وَإِبْرَٰهِيمَ
இன்னும் இப்ராஹீம்
idh qāla
إِذْ قَالَ
அவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்
liqawmihi
لِقَوْمِهِ
தனது மக்களுக்கு
uʿ'budū
ٱعْبُدُوا۟
வணங்குங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
wa-ittaqūhu
وَٱتَّقُوهُۖ
இன்னும் அவனை அஞ்சுங்கள்
dhālikum
ذَٰلِكُمْ
இதுதான்
khayrun
خَيْرٌ
சிறந்ததாகும்
lakum
لَّكُمْ
உங்களுக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
taʿlamūna
تَعْلَمُونَ
அறிகின்றவர்களாக
இப்ராஹீமை (நம்முடைய தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்த சமயத்தில்) அவர் தன்னுடைய மக்களை நோக்கி "நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்கி அவனையே நீங்கள் அஞ்சி நடங்கள். (நீங்கள் சிந்தித்துப் பார்த்தால்) இதுவே உங்களுக்கு மிக்க நல்லதாகும்" என்பதை அறிந்து கொள்வீர்கள். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧௬)
Tafseer
௧௭

اِنَّمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا وَّتَخْلُقُوْنَ اِفْكًا ۗاِنَّ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَمْلِكُوْنَ لَكُمْ رِزْقًا فَابْتَغُوْا عِنْدَ اللّٰهِ الرِّزْقَ وَاعْبُدُوْهُ وَاشْكُرُوْا لَهٗ ۗاِلَيْهِ تُرْجَعُوْنَ ١٧

innamā taʿbudūna
إِنَّمَا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குவதெல்லாம்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
awthānan
أَوْثَٰنًا
சிலைகளைத்தான்
watakhluqūna
وَتَخْلُقُونَ
இன்னும் இட்டுக்கட்டுகிறீர்கள்
if'kan
إِفْكًاۚ
பொய்யை
inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்களை
taʿbudūna
تَعْبُدُونَ
நீங்கள் வணங்குகிறீர்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
lā yamlikūna
لَا يَمْلِكُونَ
உரிமை பெறமாட்டார்கள்
lakum
لَكُمْ
உங்களுக்கு
riz'qan
رِزْقًا
உணவளிக்க
fa-ib'taghū
فَٱبْتَغُوا۟
ஆகவே, தேடுங்கள்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
l-riz'qa
ٱلرِّزْقَ
உணவை
wa-uʿ'budūhu
وَٱعْبُدُوهُ
இன்னும் அவனை வணங்குங்கள்
wa-ush'kurū
وَٱشْكُرُوا۟
இன்னும் நன்றி செலுத்துங்கள்
lahu
لَهُۥٓۖ
அவனுக்கு
ilayhi
إِلَيْهِ
அவன் பக்கமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்
தவிர, அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கும் சிலைகளெல்லாம் நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டவைதாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கும் இவை உங்களுக்கு உணவளிக்க சிறிதும் சக்தியற்றவை. ஆகவே, (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடமே கோரி, அவ(ன் ஒருவ)னையே வணங்கி, அவனுக்கு நன்றி செலுத்தியும் வாருங்கள். அவனிடமே நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள்" என்றும் கூறினார். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧௭)
Tafseer
௧௮

وَاِنْ تُكَذِّبُوْا فَقَدْ كَذَّبَ اُمَمٌ مِّنْ قَبْلِكُمْ ۗوَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ ١٨

wa-in tukadhibū
وَإِن تُكَذِّبُوا۟
நீங்கள் பொய்ப்பித்தால்
faqad
فَقَدْ
திட்டமாக
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்துள்ளனர்
umamun
أُمَمٌ
பல சமுதாயத்தினர்
min qablikum
مِّن قَبْلِكُمْۖ
உங்களுக்கு முன்னர்
wamā
وَمَا
வேறில்லை
ʿalā
عَلَى
மீது
l-rasūli
ٱلرَّسُولِ
தூதர்
illā
إِلَّا
தவிர
l-balāghu
ٱلْبَلَٰغُ
எடுத்துரைத்தலே
l-mubīnu
ٱلْمُبِينُ
தெளிவான
(இப்ராஹீமே! மக்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "நீங்கள் (என்னைப்) பொய்யாக்கினால் (அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) உங்களுக்கு முன்னுள்ள மக்களும் (தங்களிடம் வந்த தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கி இருக்கின்றனர். அவர் நம்முடைய தூதை (மக்களுக்கு)ப் பகிரங்கமாக எடுத்துரைப்பதை தவிர அவர்(களை நிர்ப்பந்திப்பது அத்தூதர்) மீது கடமையில்லை. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧௮)
Tafseer
௧௯

اَوَلَمْ يَرَوْا كَيْفَ يُبْدِئُ اللّٰهُ الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ۗاِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ ١٩

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
kayfa
كَيْفَ
எப்படி
yub'di-u
يُبْدِئُ
ஆரம்பமாக படைத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
l-khalqa thumma
ٱلْخَلْقَ ثُمَّ
படைப்புகளை/பிறகு
yuʿīduhu
يُعِيدُهُۥٓۚ
அவற்றை அவன் மீண்டும் உருவாக்குகிறான்
inna
إِنَّ
நிச்சயமாக
dhālika
ذَٰلِكَ
இது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
yasīrun
يَسِيرٌ
இலகுவானதாகும்
(ஒன்றுமில்லாதிருந்த) படைப்புகளை அல்லாஹ் எவ்வாறு ஆரம்பத்தில் வெளியாக்கினான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? (அவ்வாறே மரணித்த) பின்னரும் அவைகளை மீள வைப்பான். நிச்சயமாக இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!" (என்றும் கூறினார்). ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧௯)
Tafseer
௨௦

قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ بَدَاَ الْخَلْقَ ثُمَّ اللّٰهُ يُنْشِئُ النَّشْاَةَ الْاٰخِرَةَ ۗاِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ۚ ٢٠

qul
قُلْ
கூறுவீராக!
sīrū
سِيرُوا۟
சுற்றுங்கள்!
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fa-unẓurū
فَٱنظُرُوا۟
பாருங்கள்!
kayfa
كَيْفَ
எப்படி
bada-a
بَدَأَ
அவன்ஆரம்பித்தான்
l-khalqa
ٱلْخَلْقَۚ
படைப்புகளை
thumma
ثُمَّ
பிறகு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yunshi-u
يُنشِئُ
உருவாக்குவான்
l-nashata
ٱلنَّشْأَةَ
உருவாக்குதல்
l-ākhirata
ٱلْءَاخِرَةَۚ
மற்றொரு முறை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(பின்னும் மனிதர்களை நோக்கிக் கூறும்படி இப்ராஹீமுக்கு கட்டளையிட்டோம்.) பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து பாருங்கள். ஆரம்பத்தில் படைப்புகளை எவ்வாறு உற்பத்தி செய்கிறான். (அவ்வாறே மரணித்த) பின்னரும் அல்லாஹ் (மறுமையில்) மறுமுறையும் உற்பத்தி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவன். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௨௦)
Tafseer