الۤمّۤ ۗ ١
- alif-lam-meem
- الٓمٓ
- அலிஃப், லாம், மீம்
அலிஃப்; லாம்; மீம். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧)Tafseer
اَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْٓا اَنْ يَّقُوْلُوْٓا اٰمَنَّا وَهُمْ لَا يُفْتَنُوْنَ ٢
- aḥasiba
- أَحَسِبَ
- நினைத்துக் கொண்டனரா
- l-nāsu
- ٱلنَّاسُ
- மக்கள்
- an yut'rakū
- أَن يُتْرَكُوٓا۟
- அவர்கள் விடப்படுவார்கள்
- an yaqūlū
- أَن يَقُولُوٓا۟
- என்று அவர்கள் கூறுவதால்
- āmannā
- ءَامَنَّا
- நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- lā yuf'tanūna
- لَا يُفْتَنُونَ
- சோதிக்கப்படாமல்
மனிதர்கள் "நாங்கள் நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதனைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௨)Tafseer
وَلَقَدْ فَتَنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللّٰهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكٰذِبِيْنَ ٣
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- fatannā
- فَتَنَّا
- நாம் சோதித்தோம்
- alladhīna min qablihim
- ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۖ
- இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களை
- falayaʿlamanna
- فَلَيَعْلَمَنَّ
- ஆகவே, நிச்சயமாக அறிவான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- alladhīna ṣadaqū
- ٱلَّذِينَ صَدَقُوا۟
- உண்மையாளர்களை(யும்)
- walayaʿlamanna
- وَلَيَعْلَمَنَّ
- இன்னும் நிச்சயமாக அறிவான்
- l-kādhibīna
- ٱلْكَٰذِبِينَ
- பொய்யர்களை(யும்)
இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கின்றோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறும்) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்துகொள்வான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௩)Tafseer
اَمْ حَسِبَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ اَنْ يَّسْبِقُوْنَا ۗسَاۤءَ مَا يَحْكُمُوْنَ ٤
- am ḥasiba
- أَمْ حَسِبَ
- அல்லது எண்ணிக் கொண்டார்களா?
- alladhīna yaʿmalūna
- ٱلَّذِينَ يَعْمَلُونَ
- செய்பவர்கள்
- l-sayiāti
- ٱلسَّيِّـَٔاتِ
- தீமைகளை
- an yasbiqūnā
- أَن يَسْبِقُونَاۚ
- நம்மை முந்தி விடுவார்கள் என்று
- sāa
- سَآءَ
- மிகக் கெட்டது
- mā yaḥkumūna
- مَا يَحْكُمُونَ
- அவர்கள் தீர்ப்பளிப்பது
அல்லது பாவங்களைச் செய்பவர்கள் (தண்டனையடையாது) நம்மை விட்டுத் தப்பித்துக் கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் இதைப் பற்றிய) அவர்களுடைய தீர்மானம் மகா கெட்டது. ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௪)Tafseer
مَنْ كَانَ يَرْجُوْا لِقَاۤءَ اللّٰهِ فَاِنَّ اَجَلَ اللّٰهِ لَاٰتٍ ۗوَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٥
- man
- مَن
- யார்
- kāna
- كَانَ
- இருப்பாரோ
- yarjū
- يَرْجُوا۟
- ஆதரவு வைக்கின்றார்
- liqāa
- لِقَآءَ
- சந்திப்பை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- fa-inna
- فَإِنَّ
- நிச்சயமாக
- ajala
- أَجَلَ
- தவணை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- laātin
- لَءَاتٍۚ
- வரக்கூடியதுதான்
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- l-samīʿu
- ٱلسَّمِيعُ
- நன்கு செவியுறுபவன்
- l-ʿalīmu
- ٱلْعَلِيمُ
- நன்கறிந்தவன்
எவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்போம் என நம்புகிறார்களோ அவர்கள் (அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால்) அதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய தவணை நிச்சயமாக வந்தே தீரும். அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௫)Tafseer
وَمَنْ جَاهَدَ فَاِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهٖ ۗاِنَّ اللّٰهَ لَغَنِيٌّ عَنِ الْعٰلَمِيْنَ ٦
- waman
- وَمَن
- யார்
- jāhada
- جَٰهَدَ
- போரிடுவாரோ
- fa-innamā yujāhidu
- فَإِنَّمَا يُجَٰهِدُ
- அவர் போரிடுவதெல்லாம்
- linafsihi
- لِنَفْسِهِۦٓۚ
- தனக்காகத்தான்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- laghaniyyun
- لَغَنِىٌّ
- முற்றிலும் தேவையற்றவன்
- ʿani l-ʿālamīna
- عَنِ ٱلْعَٰلَمِينَ
- அகிலத்தார்களை விட்டு
(அல்லாஹ்வுடைய வழியில்) எவரேனும் முயற்சி மேற்கொண்டால், நிச்சயமாக அவர் தன் சொந்த நலனுக்காகவே முயன்றவனாகிறார். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் (உதவி) தேவையற்றவனாக இருக்கின்றான். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௬)Tafseer
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ اَحْسَنَ الَّذِيْ كَانُوْا يَعْمَلُوْنَ ٧
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- lanukaffiranna
- لَنُكَفِّرَنَّ
- நாம் நீக்கி விடுவோம்
- ʿanhum
- عَنْهُمْ
- அவர்களை விட்டும்
- sayyiātihim
- سَيِّـَٔاتِهِمْ
- அவர்களின் பாவங்களை
- walanajziyannahum
- وَلَنَجْزِيَنَّهُمْ
- நாம் அவர்களுக்கு கூலியாகத் தருவோம்
- aḥsana
- أَحْسَنَ
- மிகச் சிறந்ததை
- alladhī kānū yaʿmalūna
- ٱلَّذِى كَانُوا۟ يَعْمَلُونَ
- அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுடைய பாவத்திற்கு (அவைகளைப்) பரிகாரமாக்கி வைத்து அவர்கள் செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௭)Tafseer
وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا ۗوَاِنْ جَاهَدٰكَ لِتُشْرِكَ بِيْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ۗاِلَيَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٨
- wawaṣṣaynā
- وَوَصَّيْنَا
- நாம் உபதேசித்தோம்
- l-insāna
- ٱلْإِنسَٰنَ
- மனிதனுக்கு
- biwālidayhi
- بِوَٰلِدَيْهِ
- அவன் தனது பெற்றோரிடம்
- ḥus'nan
- حُسْنًاۖ
- அழகிய முறையில்
- wa-in jāhadāka
- وَإِن جَٰهَدَاكَ
- அவர்கள் உன்னை வற்புறுத்தினால்
- litush'rika
- لِتُشْرِكَ
- நீ இணைஆக்கும்படி
- bī
- بِى
- எனக்கு
- mā laysa
- مَا لَيْسَ
- எதை/இல்லை
- laka
- لَكَ
- உனக்கு
- bihi
- بِهِۦ
- அதைப் பற்றி
- ʿil'mun
- عِلْمٌ
- அறிவு
- falā tuṭiʿ'humā
- فَلَا تُطِعْهُمَآۚ
- அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே!
- ilayya
- إِلَىَّ
- என் பக்கமே
- marjiʿukum
- مَرْجِعُكُمْ
- உங்கள் மீட்சி இருக்கிறது
- fa-unabbi-ukum
- فَأُنَبِّئُكُم
- நான் உங்களுக்கு அறிவிப்பேன்
- bimā kuntum taʿmalūna
- بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
- நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை
தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாக நாம் மனிதனுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். (எனினும், இறைவன் என்பதற்கு) எவ்வித ஆதாரமும் இல்லாதவைகளை எனக்கு இணையாக்கும்படி (மனிதனே!) அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு வழிப்படாதே! என்னிடமே நீ திரும்ப வேண்டிய லிதிருக்கின்றது. நீ செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி (நன்மையா தீமையா என்பதை) அச்சமயம் நான் உனக்கு அறிவித்துவிடுவேன். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௮)Tafseer
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِى الصّٰلِحِيْنَ ٩
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- lanud'khilannahum
- لَنُدْخِلَنَّهُمْ
- அவர்களை நாம் நிச்சயமாக நுழைவிப்போம்
- fī l-ṣāliḥīna
- فِى ٱلصَّٰلِحِينَ
- நல்லோரில்
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நல்லோர்களுடன் சேர்த்துவிடுவோம். ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௯)Tafseer
وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَآ اُوْذِيَ فِى اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِ ۗوَلَىِٕنْ جَاۤءَ نَصْرٌ مِّنْ رَّبِّكَ لَيَقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْۗ اَوَلَيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِيْ صُدُوْرِ الْعٰلَمِيْنَ ١٠
- wamina l-nāsi
- وَمِنَ ٱلنَّاسِ
- மக்களில் இருக்கின்றனர்
- man yaqūlu
- مَن يَقُولُ
- எவர்/கூறுகின்றார்
- āmannā
- ءَامَنَّا
- நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- fa-idhā ūdhiya
- فَإِذَآ أُوذِىَ
- அவர்கள் துன்புறுத்தப்பட்டால்
- fī l-lahi
- فِى ٱللَّهِ
- அல்லாஹ்வின் விஷயத்தில்
- jaʿala
- جَعَلَ
- ஆக்கிவிடுகிறார்
- fit'nata
- فِتْنَةَ
- சோதனையை
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களுடைய
- kaʿadhābi
- كَعَذَابِ
- தண்டனையைப் போன்று
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- wala-in jāa
- وَلَئِن جَآءَ
- வந்தால்
- naṣrun
- نَصْرٌ
- ஓர் உதவி
- min rabbika
- مِّن رَّبِّكَ
- உமது இறைவனிடமிருந்து
- layaqūlunna
- لَيَقُولُنَّ
- நிச்சயமாக கூறுகின்றனர்
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- kunnā
- كُنَّا
- இருக்கின்றோம்
- maʿakum
- مَعَكُمْۚ
- உங்களுடன்
- awalaysa
- أَوَلَيْسَ
- இல்லையா?
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- bi-aʿlama
- بِأَعْلَمَ
- மிக அறிந்தவனாக
- bimā fī ṣudūri
- بِمَا فِى صُدُورِ
- நெஞ்சங்களில் உள்ளவற்றை
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- அகிலத்தாரின்
மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்: அவர்கள் "நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றோம்" என்று கூறுகின்றனர். எனினும், அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வழியில் ஏதும் துன்பம் ஏற்பட்டால், மக்களால் ஏற்படும் அத்துன்பத்தை அல்லாஹ்வுடைய வேதனையைப் போல் (மிகப் பெரிதாக) ஆக்கி (உங்களிடமிருந்து விலகி)க் கொள்(ள விரும்பு)கின்றனர். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு யாதொரு உதவி கிடைக்கும் பட்சத்தில் "நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருந்தோம்" என்று கூறுகின்றனர். உலகத்தாரின் உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இல்லையா? ([௨௯] ஸூரத்துல் அன்கபூத்: ௧௦)Tafseer