Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௯

Qur'an Surah Al-Qasas Verse 9

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَتِ امْرَاَتُ فِرْعَوْنَ قُرَّتُ عَيْنٍ لِّيْ وَلَكَۗ لَا تَقْتُلُوْهُ ۖعَسٰٓى اَنْ يَّنْفَعَنَآ اَوْ نَتَّخِذَهٗ وَلَدًا وَّهُمْ لَا يَشْعُرُوْنَ (القصص : ٢٨)

waqālati
وَقَالَتِ
And said
கூறினாள்
im'ra-atu
ٱمْرَأَتُ
(the) wife
மனைவி
fir'ʿawna
فِرْعَوْنَ
(of) Firaun
ஃபிர்அவ்னின்
qurratu
قُرَّتُ
"A comfort
குளிர்ச்சியாகும்
ʿaynin
عَيْنٍ
(of the) eye
கண்
lī walaka
لِّى وَلَكَۖ
for me and for you;
எனக்கும் உனக்கும்
lā taqtulūhu
لَا تَقْتُلُوهُ
(Do) not kill him;
அதைக் கொல்லாதீர்கள்!
ʿasā an yanfaʿanā
عَسَىٰٓ أَن يَنفَعَنَآ
perhaps (that) he may benefit us
அது நமக்கு நன்மை தரலாம்
aw nattakhidhahu
أَوْ نَتَّخِذَهُۥ
or we may take him
அல்லது அதை நாம் வைத்துக்கொள்ளலாம்
waladan
وَلَدًا
(as) a son"
பிள்ளையாக
wahum
وَهُمْ
And they
இன்னும் அவர்கள்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
(did) not perceive
உணரவில்லை

Transliteration:

Wa qaalatim ra atu Fir'awna qurratu 'aynil lee wa lak; laa taqtuloohu 'asaaa aiyanfa'anaa aw nattakhizahoo waladanw wa hum laa yash'uroon (QS. al-Q̈aṣaṣ:9)

English Sahih International:

And the wife of Pharaoh said, "[He will be] a comfort of the eye [i.e., pleasure] for me and for you. Do not kill him; perhaps he may benefit us, or we may adopt him as a son." And they perceived not. (QS. Al-Qasas, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

(அக்குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னுடைய மனைவி (தன் கணவனை நோக்கி) "நீ இதனை கொலை செய்துவிடாதே! எனக்கும், உனக்கும் இது ஒரு கண் குளிர்ச்சியாக இருக்கின்றது. இதனால் நாம் நன்மை அடையலாம் அல்லது இதனை நாம் நம்முடைய குழந்தையாக தத்தெடுத்துக் கொள்ளலாம்" என்று கூறினாள். எனினும், (இவராலேயே தங்களுக்கும் அழிவு ஏற்படும் என்பதை) அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௯)

Jan Trust Foundation

இன்னும்| (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்னின் மனைவி கூறினாள்: “(இந்தக் குழந்தை) எனக்கும் உனக்கும் கண்குளிர்ச்சியாகும். அதைக் கொல்லாதீர்கள்! அது நமக்கு நன்மை தரலாம். அல்லது அதை நாம் (நமக்கு) பிள்ளையாக வைத்துக் கொள்ளலாம்.” இன்னும் (இவரின் கரத்தினால்தான் தங்களுக்கு அழிவு ஏற்படும் என்பதை அப்போது) அவர்கள் உணரவில்லை.