Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௮௮

Qur'an Surah Al-Qasas Verse 88

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۘ لَآ اِلٰهَ اِلَّا هُوَۗ كُلُّ شَيْءٍ هَالِكٌ اِلَّا وَجْهَهٗ ۗ لَهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ ࣖ (القصص : ٢٨)

walā tadʿu
وَلَا تَدْعُ
And (do) not invoke
இன்னும் அழைத்துவிடாதீர் !
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
with Allah
அல்லாஹ்வுடன்
ilāhan
إِلَٰهًا
god
ஒரு கடவுளை
ākhara
ءَاخَرَۘ
other
வேறு
لَآ
(There is) no
இல்லவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரிய கடவுள்
illā
إِلَّا
except
தவிர
huwa
هُوَۚ
Him
அவனை
kullu
كُلُّ
Every
எல்லா
shayin
شَىْءٍ
thing
பொருள்களும்
hālikun
هَالِكٌ
(will be) destroyed
அழியக்கூடியவையே
illā
إِلَّا
except
தவிர
wajhahu
وَجْهَهُۥۚ
His Face
அவனது முகத்தை
lahu
لَهُ
To Him
அவனுக்கே உரியது
l-ḥuk'mu
ٱلْحُكْمُ
(is) the Decision
அதிகாரம்
wa-ilayhi
وَإِلَيْهِ
and to Him
அவனிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be returned
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Transliteration:

Wa laa tad'u ma'al laahi ilaahan aakhar; laaa ilaaha illaa Hoo; kullu shai'in haalikun illaa Wajhah; lahul hukkmu wa ilaihi turja'oon (QS. al-Q̈aṣaṣ:88)

English Sahih International:

And do not invoke with Allah another deity. There is no deity except Him. Everything will be destroyed except His Face. His is the judgement, and to Him you will be returned. (QS. Al-Qasas, Ayah ௮௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவனை நீங்கள் அழைக்க வேண்டாம். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனைத் தவிர எல்லா பொருள்களும் அழிந்துவிடக் கூடியனவே. எல்லா அதிகாரங்களும் அவனுக்குரியனவே. அவனிடமே நீங்கள் அனைவரும் கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௮௮)

Jan Trust Foundation

அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் அழைக்காதீர்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது; இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைத்து விடாதீர்! (வணங்கி விடாதீர்!) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஒரு கடவுள் இல்லவே இல்லை. எல்லாப் பொருள்களும் அழியக்கூடியவையே அவனது முகத்தைத் தவிர (-அவனைத் தவிர). அதிகாரம் அவனுக்கே உரியது. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.