குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௮௭
Qur'an Surah Al-Qasas Verse 87
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௮௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا يَصُدُّنَّكَ عَنْ اٰيٰتِ اللّٰهِ بَعْدَ اِذْ اُنْزِلَتْ اِلَيْكَ وَادْعُ اِلٰى رَبِّكَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ ۚ (القصص : ٢٨)
- walā yaṣuddunnaka
- وَلَا يَصُدُّنَّكَ
- And (let) not avert you
- உம்மை அவர்கள் திருப்பி விடவேண்டாம்
- ʿan āyāti
- عَنْ ءَايَٰتِ
- from (the) Verses
- வசனங்களை விட்டு
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- baʿda
- بَعْدَ
- after
- பின்னர்
- idh unzilat
- إِذْ أُنزِلَتْ
- [when] they have been revealed
- அவை இறக்கப்பட்டதன்
- ilayka
- إِلَيْكَۖ
- to you
- உமக்கு
- wa-ud'ʿu
- وَٱدْعُ
- And invite (people)
- அழைப்பீராக
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- rabbika
- رَبِّكَۖ
- your Lord
- உமது இறைவன்
- walā takūnanna
- وَلَا تَكُونَنَّ
- And (do) not be
- இன்னும் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்
- mina l-mush'rikīna
- مِنَ ٱلْمُشْرِكِينَ
- of the polytheists
- இணைவைப்பவர்களில்
Transliteration:
Wa laa yasuddunnaka 'an Aayaatil laahi ba'da iz unzilat ilaika wad'u ilaa Rabbika wa laa takonanna minal mushrikeen(QS. al-Q̈aṣaṣ:87)
English Sahih International:
And never let them avert you from the verses of Allah after they have been revealed to you. And invite [people] to your Lord. And never be of those who associate others with Allah. (QS. Al-Qasas, Ayah ௮௭)
Abdul Hameed Baqavi:
இவ்வேதம் உங்களுக்கு அருளப்பட்ட பின் (இதிலுள்ள) அல்லாஹ்வுடைய வசனங்களி(ன் பக்கம் நீங்கள் மக்களை அழைப்பதி)லிருந்து அவர்கள் உங்களைத் தடுத்து விட வேண்டாம். ஆகவே, உங்கள் இறைவன் பக்கம் (நீங்கள் அவர்களை) அழைத்துக் கொண்டேயிருங்கள். நிச்சயமாக இணைவைத்து வணங்குபவர்களுடன் சேர்ந்து விட வேண்டாம். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௮௭)
Jan Trust Foundation
இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின், எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சயமாகத் திருப்பி விடாதிருக்கட்டும்; மேலும் நீர் உம்முடைய இறைவன் பால் (அவர்களை) அழைத்தே வருவீராக; நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஒருவராகி விடவேண்டாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வின் வசனங்களை (பின்பற்றுவதையும் அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதையும்) விட்டு -அவை உமக்கு இறக்கப்பட்டதன் பின்னர் உம்மை அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள்) திருப்பி விடவேண்டாம். உமது இறைவன் பக்கம் (உலக மக்களை) அழைப்பீராக! இணைவைப்பவர்களில் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்.