Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௮௪

Qur'an Surah Al-Qasas Verse 84

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௮௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَنْ جَاۤءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَيْرٌ مِّنْهَاۚ وَمَنْ جَاۤءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى الَّذِيْنَ عَمِلُوا السَّيِّاٰتِ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ (القصص : ٢٨)

man
مَن
Whoever
எவர்
jāa
جَآءَ
comes
வருவாரோ
bil-ḥasanati
بِٱلْحَسَنَةِ
with a good (deed)
நன்மையைக்கொண்டு
falahu
فَلَهُۥ
then for him
அவருக்கு
khayrun
خَيْرٌ
(will be) better
நற்கூலி கிடைக்கும்
min'hā
مِّنْهَاۖ
than it;
அதனால்
waman
وَمَن
and whoever
எவர்கள்
jāa
جَآءَ
comes
வருவார்களோ
bil-sayi-ati
بِٱلسَّيِّئَةِ
with an evil (deed)
தீமையைக் கொண்டு
falā yuj'zā
فَلَا يُجْزَى
then not will be recompensed
கூலி கொடுக்கப்பட மாட்டார்(கள்)
alladhīna ʿamilū
ٱلَّذِينَ عَمِلُوا۟
those who do
செய்தவர்கள்
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
the evil (deeds)
தீமைகளை
illā
إِلَّا
except
தவிர
mā kānū yaʿmalūna
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
what they used (to) do
அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கே

Transliteration:

Man jaaa'a bilhasanati falahoo khairum minhaa wa man jaaa'a bissaiyi'ati falaa yujzal lazeena 'amilus saiyiaati illaa maa kaanoo ya'maloon (QS. al-Q̈aṣaṣ:84)

English Sahih International:

Whoever comes [on the Day of Judgement] with a good deed will have better than it; and whoever comes with an evil deed – then those who did evil deeds will not be recompensed except [as much as] what they used to do. (QS. Al-Qasas, Ayah ௮௪)

Abdul Hameed Baqavi:

(உங்களில்) எவரேனும் யாதொரு நன்மையை(ச் செய்து) கொண்டு வந்தால், அவருக்கு அதைவிட மேலான கூலியே கிடைக்கும். உங்களில் எவரேனும் யாதொரு பாவத்தைக் கொண்டு வந்தாலோ, அவர் செய்த பாவங்களின் அளவேயன்றி (அதிகமாகத்) தண்டிக்கப்பட மாட்டார். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௮௪)

Jan Trust Foundation

எவரேனும் நன்மையைக் கொண்டு வந்தால் அவருக்கு அதைவிட மேலானது உண்டு; எவன் தீமையை செய்கிறானோ தீமை செய்வோர் அவர்கள் செய்ததற்குச் சமமான கூலியைப் பெறுவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் நன்மையை (-லா இலாஹ இல்லல்லாஹ்வை)க் கொண்டு வருவாரோ அவருக்கு அதனால் நற்கூலி கிடைக்கும். எவர்கள் தீமையைக் கொண்டு வருவார்களோ, தீமைகளைச் செய்தவர்கள் அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார்கள்.