குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௮௩
Qur'an Surah Al-Qasas Verse 83
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا ۗوَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ (القصص : ٢٨)
- til'ka
- تِلْكَ
- That
- அந்த
- l-dāru
- ٱلدَّارُ
- the Home
- இல்லமானது
- l-ākhiratu
- ٱلْءَاخِرَةُ
- (of) the Hereafter
- மறுமை
- najʿaluhā
- نَجْعَلُهَا
- We assign it
- அதை ஆக்குவோம்
- lilladhīna lā yurīdūna
- لِلَّذِينَ لَا يُرِيدُونَ
- to those who (do) not desire
- விரும்பாதவர்களுக்கு
- ʿuluwwan
- عُلُوًّا
- exaltedness
- அநியாயத்தையோ
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- walā fasādan
- وَلَا فَسَادًاۚ
- and not corruption
- குழப்பத்தையோ
- wal-ʿāqibatu
- وَٱلْعَٰقِبَةُ
- And the good end
- முடிவான நற்பாக்கியம்
- lil'muttaqīna
- لِلْمُتَّقِينَ
- (is) for the righteous
- இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு
Transliteration:
Tilkad Daarul Aakhiratu naj'aluhaa lillazeena laa yureedoona 'uluwwan fil ardi wa laa fasaadaa; wal 'aaqibatu lilmuttaqeen(QS. al-Q̈aṣaṣ:83)
English Sahih International:
That home of the Hereafter We assign to those who do not desire exaltedness upon the earth or corruption. And the [best] outcome is for the righteous. (QS. Al-Qasas, Ayah ௮௩)
Abdul Hameed Baqavi:
(மிக்க பாக்கியம் பெற்ற) மறுமையின் வீட்டையோ, பூமியில் பெருமையையும் விஷமத்தையும் விரும்பாதவர்களுக்கே நாம் சொந்தமாக்கி விடுவோம். ஏனென்றால், முடிவான நற்பாக்கியம் இறை அச்சம் உடையவர்களுக்குத்தான். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௮௩)
Jan Trust Foundation
அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அந்த மறுமை இல்லமானது - பூமியில் அநியாயத்தையோ குழப்பத்தையோ விரும்பாதவர்களுக்கு அதை நாம் ஆக்குவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு.