குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௮
Qur'an Surah Al-Qasas Verse 8
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَالْتَقَطَهٗٓ اٰلُ فِرْعَوْنَ لِيَكُوْنَ لَهُمْ عَدُوًّا وَّحَزَنًاۗ اِنَّ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا كَانُوْا خٰطِـِٕيْنَ (القصص : ٢٨)
- fal-taqaṭahu
- فَٱلْتَقَطَهُۥٓ
- Then picked him up
- அவரைக் கண்டெடுத்தனர்
- ālu
- ءَالُ
- (the) family
- குடும்பத்தினர்
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- (of) Firaun
- ஃபிர்அவ்னின்
- liyakūna
- لِيَكُونَ
- so that he might become
- முடிவில் அவர் ஆகுவதற்காக
- lahum
- لَهُمْ
- to them
- அவர்களுக்கு
- ʿaduwwan
- عَدُوًّا
- an enemy
- எதிரியாகவும்
- waḥazanan
- وَحَزَنًاۗ
- and a grief
- கவலையாகவும்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- Firaun
- ஃபிர்அவ்ன்
- wahāmāna
- وَهَٰمَٰنَ
- and Haman
- ஹாமான்
- wajunūdahumā
- وَجُنُودَهُمَا
- and their hosts
- இன்னும் ராணுவங்கள் அவ்விருவரின்
- kānū
- كَانُوا۟
- were
- இருந்தனர்
- khāṭiīna
- خَٰطِـِٔينَ
- sinners
- பாவிகளாகவே
Transliteration:
Faltaqatahooo Aalu Fir'awna li yakoona lahum 'aduwwanw wa hazanaa; inna Fir'awna wa Haamaana wa junooda humaa kaanoo khaati'een(QS. al-Q̈aṣaṣ:8)
English Sahih International:
And the family of Pharaoh picked him up [out of the river] so that he would become to them an enemy and a [cause of] grief. Indeed, Pharaoh and Haman and their soldiers were deliberate sinners. (QS. Al-Qasas, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(ஆகவே, மூஸாவுடைய தாய் அவரை ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள்.) அக்குழந்தையை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினரில் ஒருவர் எடுத்துக்கொண்டார். (அவர்களுக்கு) எதிரியாகி துக்கத்தைத் தரக்கூடிய (அக்குழந்)தை (யை அவர்களே எடுத்துக்கொண்டதினால்) ஃபிர்அவ்னும், ஹாமானும், அவர்களுடைய ராணுவங்களும் நிச்சயமாகத் தவறிழைத்தவர்களாவே ஆயினர். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௮)
Jan Trust Foundation
(நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் அவரைக் கண்டெடுத்தனர் முடிவில் அவர் அவர்களுக்கு எதிரியாகவும் கவலையாகவும் ஆகுவதற்காக. நிச்சயமாக ஃபிர்அவ்ன், ஹாமான், இன்னும் அவ்விருவரின் ராணுவங்கள் பாவிகளாகவே இருந்தனர். (ஆகவே, அவர் அவர்களுக்கு எதிரியாகவும் கவலையாகவும் மாறினார்.)