Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௭௯

Qur'an Surah Al-Qasas Verse 79

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَخَرَجَ عَلٰى قَوْمِهٖ فِيْ زِيْنَتِهٖ ۗقَالَ الَّذِيْنَ يُرِيْدُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا يٰلَيْتَ لَنَا مِثْلَ مَآ اُوْتِيَ قَارُوْنُۙ اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِيْمٍ (القصص : ٢٨)

fakharaja
فَخَرَجَ
So he went forth
அவன் வெளியில் வந்தான்
ʿalā qawmihi
عَلَىٰ قَوْمِهِۦ
to his people
தனது மக்களுக்கு முன்
fī zīnatihi
فِى زِينَتِهِۦۖ
in his adornment
தனது அலங்காரத்தில்
qāla
قَالَ
Said
கூறினார்கள்
alladhīna yurīdūna
ٱلَّذِينَ يُرِيدُونَ
those who desire
விரும்புகின்றவர்கள்
l-ḥayata
ٱلْحَيَوٰةَ
the life
வாழ்க்கையை
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
உலக
yālayta
يَٰلَيْتَ
"O! Would that
இருக்க வேண்டுமே!
lanā
لَنَا
for us
நமக்கு
mith'la
مِثْلَ
(the) like
போன்று
mā ūtiya
مَآ أُوتِىَ
(of) what has been given
வழங்கப்பட்டது
qārūnu
قَٰرُونُ
(to) Qarun
காரூனுக்கு
innahu
إِنَّهُۥ
Indeed he
நிச்சயமாக அவன்
ladhū ḥaẓẓin
لَذُو حَظٍّ
(is the) owner (of) fortune
பேருடையவன்
ʿaẓīmin
عَظِيمٍ
great"
பெரும்

Transliteration:

Fakharaja 'alaa qawmihee fee zeenatih; qaalal lazeena yureedoonal hayaatad dunyaa yaalaita lanaa misla maaa ootiya Qaaroonu innahoo lazoo hazzin 'azeem (QS. al-Q̈aṣaṣ:79)

English Sahih International:

So he came out before his people in his adornment. Those who desired the worldly life said, "Oh, would that we had like what was given to Qarun. Indeed, he is one of great fortune." (QS. Al-Qasas, Ayah ௭௯)

Abdul Hameed Baqavi:

அவன் (ஒரு நாள் மிக்க ஆடம்பரமான) தன் அலங்காரத்துடன் தன் மக்கள் முன் சென்றான். (அதனைக் கண்ணுற்றவர்களில்) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையை (பெரிதென) விரும்பியவர்களாக இருந்தார்களோ அவர்கள் "காரூனுக்கு கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட வேண்டாமா? ஏனென்றால், நிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான்" என்று கூறினார்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௭௯)

Jan Trust Foundation

அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்| “ஆ! காரூனுக்கு கொடுக்கப்படடதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் தனது அலங்காரத்தில் தனது மக்களுக்கு முன் வெளியில் வந்தான். உலக வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் (அவனைப் பார்த்து) கூறினார்கள்: “காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று நமக்கும் (செல்வங்கள்) இருக்க வேண்டுமே! நிச்சயமாக அவன் பெரும் பேருடையவன்.