Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௭௮

Qur'an Surah Al-Qasas Verse 78

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௭௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اِنَّمَآ اُوْتِيْتُهٗ عَلٰى عِلْمٍ عِنْدِيْۗ اَوَلَمْ يَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا ۗوَلَا يُسْـَٔلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ (القصص : ٢٨)

qāla
قَالَ
He said
அவன் கூறினான்
innamā ūtītuhu
إِنَّمَآ أُوتِيتُهُۥ
"Only I have been given it
இதை நான் வழங்கப்பட்டதெல்லாம்
ʿalā ʿil'min
عَلَىٰ عِلْمٍ
on (account) (of) knowledge
அறிவினால்தான்
ʿindī
عِندِىٓۚ
I have"
என்னிடம் உள்ள
awalam yaʿlam
أَوَلَمْ يَعْلَمْ
Did not he know
அவன் அறியவில்லையா?
anna
أَنَّ
that
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
qad ahlaka
قَدْ أَهْلَكَ
indeed destroyed
அழித்திருக்கிறான் என்பதை
min qablihi
مِن قَبْلِهِۦ
before him before him
இவனுக்கு முன்னர்
mina l-qurūni
مِنَ ٱلْقُرُونِ
of the generations
பல தலைமுறையினர்களில்
man huwa
مَنْ هُوَ
who [they]
யார்?/அவர்
ashaddu
أَشَدُّ
(were) stronger
மிக்க கடினமானவர்
min'hu
مِنْهُ
than him
இவனைவிட
quwwatan
قُوَّةً
(in) strength
பலத்தால்
wa-aktharu
وَأَكْثَرُ
and greater
மிக அதிகமானவர்
jamʿan
جَمْعًاۚ
(in) accumulation
சேகரிப்பதில்
walā yus'alu
وَلَا يُسْـَٔلُ
And not will be questioned
விசாரிக்கப்பட மாட்டார்கள்
ʿan dhunūbihimu
عَن ذُنُوبِهِمُ
about their sins
தங்கள் குற்றங்களைப் பற்றி
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
the criminals
குற்றவாளிகள்

Transliteration:

Qaala innamaaa ootee tuhoo 'alaa 'ilmin 'indeee; awalam ya'lam annal laaha qad ahlaka min qablihee minal qurooni man huwa ashaddu minhu quwwatanw wa aksaru jam'aa; wa laa yus'alu 'an zunoobihimul mujrimoon (QS. al-Q̈aṣaṣ:78)

English Sahih International:

He said, "I was only given it because of knowledge I have." Did he not know that Allah had destroyed before him of generations those who were greater than him in power and greater in accumulation [of wealth]? But the criminals, about their sins, will not be asked. (QS. Al-Qasas, Ayah ௭௮)

Abdul Hameed Baqavi:

அதற்கவன் "(என்னிடம் இருக்கும்) பொருள்களை எல்லாம் என்னுடைய சொந்த அறிவி(ன் திறமையி)னால்தான் நான் அடைந்தேன். (இதில் அல்லாஹ்வின் அருள் ஒன்றுமில்லை)" என்று (பதில்) கூறினான். இவனுக்கு முன்னிருந்த கூட்டத்தார்களில் இவனைவிட பலசாலிகளாகவும், இவனைவிட அதிகப் பொருள் உடையவர்களாகவும் இருந்த எத்தனையோ பேர்களை அல்லாஹ் நிச்சயமாக அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறிய வில்லையா? குற்றவாளிகள் தங்கள் பாவங்களைப் பற்றி கூறும் புகல் (அங்குக் கவனித்துக்) கேட்கப்பட மாட்டாது. (அதற்குரிய தண்டனையை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.) (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௭௮)

Jan Trust Foundation

(அதற்கு அவன்) கூறினான்| “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் கூறினான்: “இதை நான் வழங்கப்பட்டதெல்லாம் என்னிடம் உள்ள அறிவினால்தான்.” இவனுக்கு முன்னர் பல தலைமுறையினர்களில் இவனைவிட பலத்தால் மிகக் கடினமான, (செல்வங்களை) சேகரிப்பதில் மிக அதிகமானவர்களை நிச்சயமாக அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? (மறுமை நாளில்) குற்றவாளிகள் தங்கள் குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்படமாட்டார்கள்.