Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௭௨

Qur'an Surah Al-Qasas Verse 72

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَرَءَيْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ اِلٰهٌ غَيْرُ اللّٰهِ يَأْتِيْكُمْ بِلَيْلٍ تَسْكُنُوْنَ فِيْهِ ۗ اَفَلَا تُبْصِرُوْنَ (القصص : ٢٨)

qul
قُلْ
Say
கூறுவீராக!
ara-aytum
أَرَءَيْتُمْ
"Have you seen
நீங்கள் அறிவியுங்கள்
in jaʿala
إِن جَعَلَ
if Allah made
ஆக்கிவிட்டால்
l-lahu
ٱللَّهُ
Allah made
அல்லாஹ்
ʿalaykumu
عَلَيْكُمُ
for you
உங்கள் மீது
l-nahāra
ٱلنَّهَارَ
the day
பகலை
sarmadan
سَرْمَدًا
continuous
நிரந்தரமாக
ilā
إِلَىٰ
till
வரை
yawmi l-qiyāmati
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
(the) Day (of) the Resurrection
மறுமை நாள்
man
مَنْ
who
எந்த
ilāhun
إِلَٰهٌ
(is the) god
(வேறு) ஒரு கடவுள்
ghayru l-lahi
غَيْرُ ٱللَّهِ
besides Allah
அல்லாஹ்வை அன்றி
yatīkum
يَأْتِيكُم
who could bring you
உங்களுக்கு கொண்டு வருவான்
bilaylin
بِلَيْلٍ
night
இரவை
taskunūna fīhi
تَسْكُنُونَ فِيهِۖ
(for) you (to) rest in it?
அதில் நீங்கள் ஓய்வு எடுக்கின்றீர்கள்
afalā tub'ṣirūna
أَفَلَا تُبْصِرُونَ
Then will not you see?"
நீங்கள் பார்க்க மாட்டீர்களா?

Transliteration:

Qul ara'aitum in ja'alal laahu 'alaikumun nahaara sarmadan ilaa Yawmil Qiyaamati man ilaahun ghairul laahi yaateekum bilailin taskunoona feehi afalaa tubsiroon (QS. al-Q̈aṣaṣ:72)

English Sahih International:

Say, "Have you considered: if Allah should make for you the day continuous until the Day of Resurrection, what deity other than Allah could bring you a night in which you may rest? Then will you not see?" (QS. Al-Qasas, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

(பின்னும் நபியே!) நீங்கள் கேளுங்கள்: "பகலை இறுதி நாள் வரையில் உங்களுக்கு நீண்டிருக்கும்படி அல்லாஹ் செய்துவிட்டால், நீங்கள் இளைப்பாறக் கூடிய இரவை உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய இறைவன் அல்லாஹ்வையன்றி வேறொருவன் இருக்கின்றானா?" (இதனை) நீங்கள் (படிப்பினை பெறும் கண் கொண்டு) பார்க்க வேண்டாமா? (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௭௨)

Jan Trust Foundation

“கியாம நாள்வரை உங்கள் மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்து விட்டால், நீங்கள் அதில் ஓய்வு பெறும் பொருட்டு உங்களுக்கு இரவைக் கொண்டு வரக்கூடியவன் அல்லாஹ்வையன்றி நாயன் உண்டா என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்க வேண்டாமா?” என்று கூறுவீராக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! அல்லாஹ் உங்கள் மீது பகலை மறுமை நாள் வரை நிரந்தரமாக ஆக்கிவிட்டால் நீங்கள் ஓய்வு எடுக்கக்கூடிய இரவை உங்களுக்கு அல்லாஹ்வை அன்றி வேறு எந்த கடவுள் கொண்டு வருவார். என்பதை அறிவியுங்கள்! நீங்கள் (உங்கள் மீது இறை அருளாக இரவு, பகல் மாறி மாறி வருவதை) பார்(த்து அவற்றை செய்பவன்தான் வணங்கத் தகுதியானவன் என்பதை சிந்தி)க்க மாட்டீர்களா?