Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௭௦

Qur'an Surah Al-Qasas Verse 70

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ اللّٰهُ لَآ اِلٰهَ اِلَّا هُوَ ۗ لَهُ الْحَمْدُ فِى الْاُوْلٰى وَالْاٰخِرَةِ ۖوَلَهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ (القصص : ٢٨)

wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
(is) Allah;
அல்லாஹ்
لَآ
(there is) no
அறவே இல்லை
ilāha
إِلَٰهَ
god
வணக்கத்திற்குரியவன்
illā
إِلَّا
but
தவிர
huwa
هُوَۖ
He
அவனை
lahu
لَهُ
To Him
அவனுக்கே
l-ḥamdu
ٱلْحَمْدُ
(are due) all praises
புகழ்
fī l-ūlā wal-ākhirati
فِى ٱلْأُولَىٰ وَٱلْءَاخِرَةِۖ
in the first and the last
இவ்வுலகிலும் மறுமையிலும்
walahu
وَلَهُ
And for Him
அவனுக்கே
l-ḥuk'mu
ٱلْحُكْمُ
(is) the Decision
தீர்ப்பளிப்பது
wa-ilayhi
وَإِلَيْهِ
and to Him
இன்னும் அவனிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be returned
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Transliteration:

Wa Huwal laahu laaa ilaaha illaa Huwa lahul hamdu fil oolaa wal Aakhirati wa lahul hukmu wa ilaihi turja'oon (QS. al-Q̈aṣaṣ:70)

English Sahih International:

And He is Allah; there is no deity except Him. To Him is [due all] praise in the first [life] and the Hereafter. And His is the [final] decision, and to Him you will be returned. (QS. Al-Qasas, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

அவன்தான் அல்லாஹ்; அவனைத்தவிர வணக்கத்திற்குரிய இறைவன் (இல்லவே) இல்லை. இம்மையிலும், மறுமையிலும் புகழ் அனைத்தும் அவனுக்கு உரியனவே! (மறுமையில் தீர்ப்பு கூறும்) அதிகாரமும் அவனுக்குரியதே! ஆதலால், (மறுமையில்) நீங்கள் (அனைவரும்) அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௭௦)

Jan Trust Foundation

மேலும்| அவனே அல்லாஹ்! அவனை அன்றி (வேறு) நாயன் இல்லை. இம்மையிலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது; தீர்ப்புக் கூறும் அதிகாரமும் அவனுக்கே உரியது; ஆதலின் அவனிடத்திலேயே நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் அறவே இல்லை. இவ்வுலகிலும் மறுமையிலும் அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. தீர்ப்பளிப்பது அவனுக்கே (உரிமையானது)! அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.