குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௭
Qur'an Surah Al-Qasas Verse 7
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَوْحَيْنَآ اِلٰٓى اُمِّ مُوْسٰٓى اَنْ اَرْضِعِيْهِۚ فَاِذَا خِفْتِ عَلَيْهِ فَاَلْقِيْهِ فِى الْيَمِّ وَلَا تَخَافِيْ وَلَا تَحْزَنِيْ ۚاِنَّا رَاۤدُّوْهُ اِلَيْكِ وَجَاعِلُوْهُ مِنَ الْمُرْسَلِيْنَ (القصص : ٢٨)
- wa-awḥaynā
- وَأَوْحَيْنَآ
- And We inspired
- நாம் உள்ளத்தில் போட்டோம்
- ilā ummi
- إِلَىٰٓ أُمِّ
- [to] (the) mother
- தாயாருக்கு
- mūsā
- مُوسَىٰٓ
- (of) Musa
- மூஸாவின்
- an arḍiʿīhi
- أَنْ أَرْضِعِيهِۖ
- that "Suckle him
- நீ அவருக்கு பாலூட்டு!
- fa-idhā khif'ti
- فَإِذَا خِفْتِ
- but when you fear
- நீ பயந்தால்
- ʿalayhi
- عَلَيْهِ
- for him
- அவரை
- fa-alqīhi
- فَأَلْقِيهِ
- then cast him
- அவரை எரிந்து விடு
- fī l-yami
- فِى ٱلْيَمِّ
- in(to) the river
- கடலில்
- walā takhāfī
- وَلَا تَخَافِى
- and (do) not fear
- நீ பயப்படாதே!
- walā taḥzanī
- وَلَا تَحْزَنِىٓۖ
- and (do) not grieve
- இன்னும் நீ கவலைப்படாதே!
- innā
- إِنَّا
- Indeed We
- நிச்சயமாக நாம்
- rāddūhu
- رَآدُّوهُ
- (will) restore him
- அவரை திரும்பக் கொண்டு வருவோம்
- ilayki
- إِلَيْكِ
- to you
- உம்மிடம்
- wajāʿilūhu
- وَجَاعِلُوهُ
- and (will) make him
- இன்னும் , அவரை ஆக்குவோம்
- mina l-mur'salīna
- مِنَ ٱلْمُرْسَلِينَ
- of the Messengers"
- தூதர்களில்
Transliteration:
Wa awhainaaa ilaaa ummi Moosaaa an ardi'eehi faizaa khifti 'alaihi fa alqeehi filyammi wa laa takhaafee wa laa tahzaneee innaa raaaddoohu ilaiki wa jaa'iloohu minal mursaleen(QS. al-Q̈aṣaṣ:7)
English Sahih International:
And We inspired to the mother of Moses, "Suckle him; but when you fear for him, cast him into the river and do not fear and do not grieve. Indeed, We will return him to you and will make him [one] of the messengers." (QS. Al-Qasas, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
(ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் வதை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன்னுடைய இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹீ மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக்கொண்டு) "அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை நம்முடைய தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்" (என்று அறிவித்தோம்.) (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௭)
Jan Trust Foundation
நாம் மூஸாவின் தாயாருக்கு| “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மூசாவின் தாயாருக்கு (மூசாவை அவர் பெற்றெடுத்த பின்னர்) நாம் உள்ளத்தில் போட்டோம்: “நீ அவருக்கு (-குழந்தை மூசாவிற்கு) பாலூட்டு! அவர் மீது (எதிரிகளின் பார்வை பட்டுவிடும் என்று) நீ பயந்தால் அவரை கடலில் எரிந்து விடு! பயப்படாதே! கவலைப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உம்மிடம் திரும்பக் கொண்டு வருவோம். இன்னும், அவரை தூதர்களில் (ஒருவராக) ஆக்குவோம்.