Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௬௮

Qur'an Surah Al-Qasas Verse 68

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاۤءُ وَيَخْتَارُ ۗمَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ ۗسُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ (القصص : ٢٨)

warabbuka
وَرَبُّكَ
And your Lord
உமது இறைவன்
yakhluqu
يَخْلُقُ
creates
படைக்கிறான்
mā yashāu
مَا يَشَآءُ
what He wills
தான் நாடுவதை
wayakhtāru
وَيَخْتَارُۗ
and chooses
இன்னும் தேர்ந்தெடுக்கிறான்
mā kāna
مَا كَانَ
Not they have
இல்லை
lahumu
لَهُمُ
for them
அவர்களுக்கு
l-khiyaratu
ٱلْخِيَرَةُۚ
the choice
விருப்பம்
sub'ḥāna
سُبْحَٰنَ
Glory be
மகா பரிசுத்தமானவன்
l-lahi
ٱللَّهِ
(to) Allah
அல்லாஹ்
wataʿālā
وَتَعَٰلَىٰ
and High is He
மிக உயர்ந்தவன்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
above what they associate (with Him)
அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு

Transliteration:

Wa Rabbuka yakhuluqu maa yashaaa'u wa yakhtaar; maa kaana lahumul khiyarah; Subhannal laahi wa Ta'aalaa 'ammmaa yushrikoon (QS. al-Q̈aṣaṣ:68)

English Sahih International:

And your Lord creates what He wills and chooses; not for them was the choice. Exalted is Allah and high above what they associate with Him. (QS. Al-Qasas, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களது இறைவன், தான் விரும்பியவர்களை படைத்து(த் தன்னுடைய தூதுக்காக அவர்களில்) தான் விரும்பிய வர்களைத் தேர்ந்தெடுக்கின்றான். (அவ்வாறு தூதரைத்) தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு எத்தகைய உரிமையும் இல்லை. இவர்கள் இணை வைப்பவைகளிலிருந்து அல்லாஹ் மிக்க உயர்ந்தவனும் பரிசுத்தமானவனுமாவான். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௬௮)

Jan Trust Foundation

மேலும், உம்முடைய இறைவன், தான் நாடியதைப் படைக்கிறான்; (தூதராகத் தான் நாடியோரைத்) தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். (எனவே இத்தகு) தேர்ந்தெடுத்தல் இவர்களு(க்கு உரிமையு)டையதல்ல; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; இவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உமது இறைவன் தான் நாடுவதை படைக்கிறான். இன்னும் தேர்ந்தெடுக்கிறான். அவர்களுக்கு (இதில் எந்த) விருப்பமும் இல்லை. அல்லாஹ் மகா பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு மிக உயர்ந்தவன்.