Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௬௪

Qur'an Surah Al-Qasas Verse 64

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقِيْلَ ادْعُوْا شُرَكَاۤءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيْبُوْا لَهُمْ ۗوَرَاَوُا الْعَذَابَۚ لَوْ اَنَّهُمْ كَانُوْا يَهْتَدُوْنَ (القصص : ٢٨)

waqīla
وَقِيلَ
And it will be said
இன்னும் சொல்லப்படும்
id'ʿū
ٱدْعُوا۟
"Call
அழையுங்கள்
shurakāakum
شُرَكَآءَكُمْ
your partners"
தெய்வங்களை உங்கள்
fadaʿawhum
فَدَعَوْهُمْ
And they will call them
அவற்றை அவர்கள் அழைப்பார்கள்
falam yastajībū
فَلَمْ يَسْتَجِيبُوا۟
but not they will respond
ஆனால், அவை பதில் தரமாட்டா
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
wara-awū
وَرَأَوُا۟
and they will see
இன்னும் காண்பார்கள்
l-ʿadhāba
ٱلْعَذَابَۚ
the punishment
தண்டனையை
law annahum kānū
لَوْ أَنَّهُمْ كَانُوا۟
If only [that] they had been
நிச்சயமாக தாங்கள் இருந்திருக்க வேண்டுமே!
yahtadūna
يَهْتَدُونَ
guided!
நேர்வழி பெற்றவர்களாக

Transliteration:

Wa qeelad 'oo shurakaaa'akum fada'awhum falam yastajeeboo lahum wa ra awul 'azaab; law annahum kaanoo yahtadoon (QS. al-Q̈aṣaṣ:64)

English Sahih International:

And it will be said, "Invoke your 'partners,'" and they will invoke them; but they will not respond to them, and they will see the punishment. If only they had followed guidance! (QS. Al-Qasas, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

பின்னர், தங்கள் பொய்யான தெய்வங்களை (உதவிக்கு) அழைக்கும்படி அவர்களுக்குக் கூறப்பட்டு, அவ்வாறே அவர்கள் அவைகளையும் அழைப்பார்கள். எனினும், அவை இவர்களுக்கு (வாய் திறந்து) பதிலும் கொடுக்கா. அதற்குள்ளாக இவர்கள் தங்கள் வேதனையைக் கண்டு கொள்வார்கள். இவர்கள் நேரான வழியில் சென்றிருந்தால் (இக்கதிக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.) (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௬௪)

Jan Trust Foundation

“உங்கள் இணை (தெய்வங்)களை அழையுங்கள்” என்று (அவர்களுக்குச்) சொல்லப்படும். அவர்களை இவர்கள் அழைப்பார்கள்; ஆனால் அவர்கள் இவர்களுக்கு பதிலளிக்கமாட்டார்கள்; மேலும், அவர்கள் வேதனையைக் காண்பார்கள். அவர்கள் நேர்வழியில் சென்றிருந்தால் (இந்நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (அவர்களுக்கு) சொல்லப்படும்: (நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கிய) “உங்கள் தெய்வங்களை அழையுங்கள்” என்று. அவர்கள் அவற்றை அழைப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அவை பதில் தரமாட்டா. இன்னும், தண்டனையை (கண்கூடாக)க் காண்பார்கள். நிச்சயமாக தாங்கள் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டுமே! (என்று ஆசைப்படுவார்கள்!)