Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௬௦

Qur'an Surah Al-Qasas Verse 60

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اُوْتِيْتُمْ مِّنْ شَيْءٍ فَمَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا وَزِيْنَتُهَا ۚوَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ وَّاَبْقٰىۗ اَفَلَا تَعْقِلُوْنَ ࣖ (القصص : ٢٨)

wamā ūtītum
وَمَآ أُوتِيتُم
And whatever you have been given
நீங்கள் எது கொடுக்கப்பட்டீர்களோ
min shayin
مِّن شَىْءٍ
from things
பொருளில்
famatāʿu
فَمَتَٰعُ
(is) an enjoyment
இன்பமும்
l-ḥayati l-dun'yā
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا
(of the) life (of) the world
உலக வாழ்க்கையின்
wazīnatuhā
وَزِينَتُهَاۚ
and its adornment
அதன் அலங்காரமும்
wamā ʿinda l-lahi
وَمَا عِندَ ٱللَّهِ
And what (is) with Allah
அல்லாஹ்விடம் உள்ளதுதான்
khayrun
خَيْرٌ
(is) better
சிறந்ததும்
wa-abqā
وَأَبْقَىٰٓۚ
and more lasting
நிலையானதும்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
So (will) not you use intellect?
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Transliteration:

Wa maaa ooteetum min shai'in famataa'ul hayaatid dunyaa wa zeenatuhaa; wa maa 'indal laahi khairunw wa abqaa; afalaa ta'qiloon (QS. al-Q̈aṣaṣ:60)

English Sahih International:

And whatever thing you [people] have been given – it is [only for] the enjoyment of worldly life and its adornment. And what is with Allah is better and more lasting; so will you not use reason? (QS. Al-Qasas, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

(நபியே! நீங்கள் கூறுங்கள்:) உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பவைகள் எல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள அற்ப சுகமும், அதனுடைய அலங்காரமும்தான். (எனினும்,) அல்லாஹ்விடத்தில் இருப்பவைகளோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும். இதனை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௬௦)

Jan Trust Foundation

மேலும், உங்களுக்கு கொடுக்கப் பட்டிருப்பவையெல்லாம் (அற்பமாகிய) இவ்வுலக வாழ்க்கையின் சுகமும், அதனுடைய அலங்காரமும் தான்; ஆனால் அல்லாஹ்விடத்தில் இருப்பவை மிகவும் மேலானவையாகவும் நிலையானவையாகவும் இருக்கின்றன; (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் (உலக) பொருளில் எது கொடுக்கப்பட்டீர்களோ அது உலக வாழ்க்கையின் இன்பமும் அதன் அலங்காரமும் ஆகும். அல்லாஹ்விடம் உள்ளதுதான் சிறந்ததும் நிலையானதும் ஆகும். நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?