Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௫௭

Qur'an Surah Al-Qasas Verse 57

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالُوْٓا اِنْ نَّتَّبِعِ الْهُدٰى مَعَكَ نُتَخَطَّفْ مِنْ اَرْضِنَاۗ اَوَلَمْ نُمَكِّنْ لَّهُمْ حَرَمًا اٰمِنًا يُّجْبٰٓى اِلَيْهِ ثَمَرٰتُ كُلِّ شَيْءٍ رِّزْقًا مِّنْ لَّدُنَّا وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ (القصص : ٢٨)

waqālū
وَقَالُوٓا۟
And they say
அவர்கள் கூறினர்
in nattabiʿi
إِن نَّتَّبِعِ
"If we follow
நாம் பின்பற்றினால்
l-hudā
ٱلْهُدَىٰ
the guidance
நேர்வழியை
maʿaka
مَعَكَ
with you
உம்முடன்
nutakhaṭṭaf
نُتَخَطَّفْ
we would be swept
நாங்கள் வெளியேற்றப்பட்டிருப்போம்
min arḍinā
مِنْ أَرْضِنَآۚ
from our land"
எங்கள் பூமியிலிருந்து
awalam numakkin
أَوَلَمْ نُمَكِّن
Have not We established
நாம் ஸ்திரப்படுத்தித் தரவில்லையா?
lahum
لَّهُمْ
for them
அவர்களுக்கு
ḥaraman
حَرَمًا
a sanctuary
புனித தலத்தை
āminan
ءَامِنًا
secure
பாதுகாப்பான
yuj'bā
يُجْبَىٰٓ
are brought
கொண்டு வரப்படுகின்றன
ilayhi
إِلَيْهِ
to it
அங்கு
thamarātu
ثَمَرَٰتُ
fruits
கனிகளும்
kulli
كُلِّ
(of) all
எல்லா
shayin
شَىْءٍ
things
வகையான
riz'qan
رِّزْقًا
a provision
உணவாக
min ladunnā
مِّن لَّدُنَّا
from Us?
நம் புறத்திலிருந்து
walākinna
وَلَٰكِنَّ
But
என்றாலும்
aktharahum
أَكْثَرَهُمْ
most of them
அதிகமானவர்கள் அவர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டார்கள்

Transliteration:

Wa qaalooo in nattabi'il hudaa ma'aka nutakhattaf min ardinaa; awalam numakkkil lahum haraman aaminany yujbaaa ilaihi samaraatu kulli shai'ir rizqam mil ladunnaa wa laakinna aksarahum laa ya'lamoon (QS. al-Q̈aṣaṣ:57)

English Sahih International:

And they [i.e., the Quraysh] say, "If we were to follow the guidance with you, we would be swept from our land." Have We not established for them a safe sanctuary to which are brought the fruits of all things as provision from Us? But most of them do not know. (QS. Al-Qasas, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

(நபியே! மக்காவாசிகளான) இவர்கள் (உங்களை நோக்கி) "நாங்கள் உங்களுடன் குர்ஆனைப் பின்பற்றினால், எங்கள் ஊரில் இருந்த நாங்கள் (இறாய்ஞ்சித்) தூக்கிச் செல்லப்பட்டு விடுவோம்" என்று கூறுகின்றனர். (இவர்கள் சிந்திக்க வேண்டாமா?) அபயமளிக்கும் மிக்க கண்ணியமான இடத்தில் (இவர்கள் வசித்திருக்க) இவர்களுக்கு நாம் வசதி அளிக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் உணவாக நம்மிடமிருந்து அங்கு வந்து குவிந்துகொண்டே இருக்கின்றது. எனினும், இவர்களில் பெரும்பாலானவர்கள் (இதன் நன்றியை) அறியமாட்டார்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௫௭)

Jan Trust Foundation

இன்னும் அவர்கள்| “நாங்கள் உம்முடன் சேர்ந்து இந்நேர் வழியை (குர்ஆனை) பின்பற்றுவோமானால் எங்கள் நாட்டைவிட்டு நாங்கள் தூக்கி எறியப்படுவோம்” என்று கூறுகிறார்கள்; நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்கவில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: “நாம் உம்முடன் நேர்வழியை பின்பற்றினால் நாங்கள் எங்கள் பூமியிலிருந்து (உடனே) வெளியேற்றப்பட்டிருப்போம்.” (அவர்கள் சொல்வது பொய்.) நாம் அவர்களுக்கு பாதுகாப்பான புனித தலத்தை ஸ்திரப்படுத்தித் தரவில்லையா? எல்லா வகையான கனிகளும் நம் புறத்திலிருந்து உணவாக அங்கு கொண்டு வரப்படுகின்றன. என்றாலும் அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.