குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௫௪
Qur'an Surah Al-Qasas Verse 54
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௫௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ يُؤْتَوْنَ اَجْرَهُمْ مَّرَّتَيْنِ بِمَا صَبَرُوْا وَيَدْرَءُوْنَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ (القصص : ٢٨)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- அவர்கள்
- yu'tawna
- يُؤْتَوْنَ
- will be given
- வழங்கப்படுவார்கள்
- ajrahum
- أَجْرَهُم
- their reward
- தங்கள் கூலியை
- marratayni
- مَّرَّتَيْنِ
- twice
- இருமுறை
- bimā ṣabarū
- بِمَا صَبَرُوا۟
- because they are patient
- அவர்கள் பொறுமையாக இருந்ததால்
- wayadraūna
- وَيَدْرَءُونَ
- and they repel
- இன்னும் அவர்கள் தடுப்பார்கள்
- bil-ḥasanati
- بِٱلْحَسَنَةِ
- with good -
- நன்மையைக்கொண்டு
- l-sayi-ata
- ٱلسَّيِّئَةَ
- the evil
- தீமையை
- wamimmā razaqnāhum
- وَمِمَّا رَزَقْنَٰهُمْ
- and from what We have provided them
- இன்னும் நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து
- yunfiqūna
- يُنفِقُونَ
- they spend
- தர்மம் செய்வார்கள்
Transliteration:
Ulaaa'ika yu'tawna ajrahum marratayni bimaa sabaroo wa yadra'oona bil hasanatis saiyi'ata wa mimmmaa razaq naahum yunfiqoon(QS. al-Q̈aṣaṣ:54)
English Sahih International:
Those will be given their reward twice for what they patiently endured and [because] they avert evil through good, and from what We have provided them they spend. (QS. Al-Qasas, Ayah ௫௪)
Abdul Hameed Baqavi:
இத்தகையவர் உறுதியாக இருந்ததன் காரணத்தால், இரண்டு தடவைகள் அவர்களுக்கு (நற்) கூலி கொடுக்கப்படும். இத்தகைய வர்கள், தீய காரியங்களை நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவைகளில் இருந்து அவர்கள் தானமும் செய்வார்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௫௪)
Jan Trust Foundation
இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் தங்கள் கூலியை இருமுறை வழங்கப்படுவார்கள் அவர்கள் (முந்திய வேதத்தை பின்பற்றி நடந்ததிலும் இந்தத் தூதரை பின்பற்றியதிலும்) பொறுமையாக (உறுதியாக) இருந்ததால். அவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்.