Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௫௦

Qur'an Surah Al-Qasas Verse 50

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ لَّمْ يَسْتَجِيْبُوْا لَكَ فَاعْلَمْ اَنَّمَا يَتَّبِعُوْنَ اَهْوَاۤءَهُمْۗ وَمَنْ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوٰىهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ ࣖ (القصص : ٢٨)

fa-in lam yastajībū
فَإِن لَّمْ يَسْتَجِيبُوا۟
But if not they respond
அவர்கள் பதிலளிக்கவில்லை என்றால்
laka
لَكَ
to you
உமக்கு
fa-iʿ'lam
فَٱعْلَمْ
then know
நீர் அறிவீராக!
annamā yattabiʿūna
أَنَّمَا يَتَّبِعُونَ
that only they follow
நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம்
ahwāahum
أَهْوَآءَهُمْۚ
their desires
மன இச்சைகளைத்தான் தங்கள்
waman
وَمَنْ
And who
யார்?
aḍallu
أَضَلُّ
(is) more astray
பெரும் வழிகேடன்
mimmani ittabaʿa
مِمَّنِ ٱتَّبَعَ
than (one) who follows
பின்பற்றியவனை விட
hawāhu
هَوَىٰهُ
his own desire
தனது மன இச்சையை
bighayri hudan
بِغَيْرِ هُدًى
without guidance
நேர்வழி அன்றி
mina l-lahi
مِّنَ ٱللَّهِۚ
from Allah?
அல்லாஹ்வின்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
Indeed Allah
நிச்சயமாக அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
(does) not guide
நேர்வழி செலுத்த மாட்டான்
l-qawma
ٱلْقَوْمَ
the people -
மக்களை
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers
அநியாயக்கார

Transliteration:

Fa il lam yastajeeboo laka fa'lam annamaa yattabi'oona ahwaaa'ahum; w aman adallu mimmanit taba'a hawaahu bighari hudam minal laah; innal laaha laa yahdil qawmaz zaalimeen (QS. al-Q̈aṣaṣ:50)

English Sahih International:

But if they do not respond to you – then know that they only follow their [own] desires. And who is more astray than one who follows his desire without guidance from Allah? Indeed, Allah does not guide the wrongdoing people. (QS. Al-Qasas, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கு அவர்கள் பதில் சொல்லாவிடில், நிச்சயமாக அவர்கள் தங்கள் சரீர இச்சையையே பின்பற்றுகிறார்கள் என்று உறுதியாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வினுடைய நேரான வழியை விட்டுத் தன்னுடைய சரீர இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டோ! நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை. (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௫௦)

Jan Trust Foundation

உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் உமக்கு பதிலளிக்கவில்லை என்றால் நீர் அறிவீராக! “நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம் தங்கள் மன இச்சைகளைத்தான்.” அல்லாஹ்வின் நேர்வழி அன்றி தனது மன இச்சையை பின்பற்றியவனை விட பெரும் வழிகேடன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (நிராகரிப்பில் வரம்பு மீறுகின்ற) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.