Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௫

Qur'an Surah Al-Qasas Verse 5

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَنُرِيْدُ اَنْ نَّمُنَّ عَلَى الَّذِيْنَ اسْتُضْعِفُوْا فِى الْاَرْضِ وَنَجْعَلَهُمْ اَىِٕمَّةً وَّنَجْعَلَهُمُ الْوٰرِثِيْنَ ۙ (القصص : ٢٨)

wanurīdu
وَنُرِيدُ
And We wanted
இன்னும் நாடினோம்
an namunna
أَن نَّمُنَّ
to bestow a favor
?/நாம் அருள்புரிவதற்கு
ʿalā alladhīna us'tuḍ'ʿifū
عَلَى ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟
upon those who were oppressed
பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the land
பூமியில்
wanajʿalahum
وَنَجْعَلَهُمْ
and make them
இன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்கு
a-immatan
أَئِمَّةً
leaders
அரசர்களாக
wanajʿalahumu
وَنَجْعَلَهُمُ
and make them
இன்னும் அவர்களை நாம் ஆக்குவதற்கு
l-wārithīna
ٱلْوَٰرِثِينَ
the inheritors
வாரிசுகளாக

Transliteration:

Wa nureedu an namunna 'alal lazeenas tud'ifoo fil ardi wa naj'alahum a'immatanw wa naj'alahumul waariseen (QS. al-Q̈aṣaṣ:5)

English Sahih International:

And We wanted to confer favor upon those who were oppressed in the land and make them leaders and make them inheritors (QS. Al-Qasas, Ayah ௫)

Abdul Hameed Baqavi:

எனினும், பூமியில் அவன் பலவீனப்படுத்தியவர்கள் மீது நாம் அருள் புரிந்து அவர்களைத் தலைவர்களாக்கி (அங்கு இருந்தவர்களுடைய பொருள்களுக்கும்,) இவர்களையே வாரிசுகளாக்கி வைக்க விரும்பினோம். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௫)

Jan Trust Foundation

ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள்புரிவதற்கும் அவர்களை அரசர்களாக நாம் ஆக்குவதற்கும் அவர்களை (ஃபிர்அவ்னின்) வாரிசுகளாக (-ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டதன் பின்னர் அவனுடைய பூமிக்கும் சொத்துகளுக்கும் சொந்தக்காரர்களாக) நாம் ஆக்குவதற்கும் நாடினோம்.