குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௯
Qur'an Surah Al-Qasas Verse 49
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ فَأْتُوْا بِكِتٰبٍ مِّنْ عِنْدِ اللّٰهِ هُوَ اَهْدٰى مِنْهُمَآ اَتَّبِعْهُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (القصص : ٢٨)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- fatū bikitābin
- فَأْتُوا۟ بِكِتَٰبٍ
- "Then bring a Book
- ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள்
- min ʿindi l-lahi
- مِّنْ عِندِ ٱللَّهِ
- from Allah from Allah from Allah
- அல்லாஹ்விடமிருந்து
- huwa
- هُوَ
- which
- அது
- ahdā
- أَهْدَىٰ
- (is) a better guide
- மிக்க நேர்வழி
- min'humā
- مِنْهُمَآ
- than both of them
- அவ்விரண்டை விட
- attabiʿ'hu
- أَتَّبِعْهُ
- that I may follow it
- நான் அதை பின்பற்றுகிறேன்
- in kuntum
- إِن كُنتُمْ
- if you are
- நீங்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- truthful"
- உண்மையாளர்களாக
Transliteration:
Qul faatoo bi Kitaabim min 'indil laahi huwa ahdaa minhu maaa attabi'hu in kuntum saadiqeen(QS. al-Q̈aṣaṣ:49)
English Sahih International:
Say, "Then bring a scripture from Allah which is more guiding than either of them that I may follow it, if you should be truthful." (QS. Al-Qasas, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) "மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், அல்லாஹ் விடமிருந்து வந்த வேதங்களில் (மூஸாவுடைய வேதமும், திருக்குர்ஆனுமாகிய) இவ்விரண்டையும்விட நேரான வழியை அறிவிக்கக் கூடியதொரு வேதத்தை நீங்கள் கொண்டு வாருங்கள். நானும் அதனைப் பின்பற்றுகிறேன்" என்று நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௪௯)
Jan Trust Foundation
ஆகவே, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இவ்விரண்டையும் விட நேர்வழிக்காட்டக் கூடிய வேதத்தை அல்லாஹ்விடமிருந்து நீங்கள் கொண்டு வாருங்கள்; நானும் அதைப் பின்பற்றுகிறேன்” என்று (நபியே!) நீர் கூறும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக: “அவ்விரண்டை விட (தவ்ராத், இன்ஜீலை விட) மிக்க நேர்வழி காட்டக்கூடிய ஒரு வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள், (தவ்ராத்தும் இன்ஜீலும் சூனியம் என்று நீங்கள் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், நான் அதை பின்பற்றுகிறேன்.”