குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௭
Qur'an Surah Al-Qasas Verse 47
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَوْلَآ اَنْ تُصِيْبَهُمْ مُّصِيْبَةٌ ۢبِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ فَيَقُوْلُوْا رَبَّنَا لَوْلَآ اَرْسَلْتَ اِلَيْنَا رَسُوْلًا فَنَتَّبِعَ اٰيٰتِكَ وَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ (القصص : ٢٨)
- walawlā an tuṣībahum
- وَلَوْلَآ أَن تُصِيبَهُم
- And if not [that] struck them
- அவர்களுக்கு ஏற்பட்டு
- muṣībatun
- مُّصِيبَةٌۢ
- a disaster
- ஒரு சோதனை
- bimā qaddamat
- بِمَا قَدَّمَتْ
- for what had sent forth
- முற்படுத்தியதால்
- aydīhim
- أَيْدِيهِمْ
- their hands
- அவர்களின் கரங்கள்
- fayaqūlū
- فَيَقُولُوا۟
- and they would say
- அவர்கள் கூறாதிருப்பதற்காக
- rabbanā
- رَبَّنَا
- "Our Lord!
- எங்கள் இறைவா!
- lawlā arsalta
- لَوْلَآ أَرْسَلْتَ
- Why not You sent
- நீ அனுப்பி இருக்கக்கூடாதா?
- ilaynā
- إِلَيْنَا
- to us
- எங்களிடம்
- rasūlan
- رَسُولًا
- a Messenger
- ஒரு தூதரை
- fanattabiʿa
- فَنَتَّبِعَ
- so we (could have) followed
- நாங்கள் பின்பற்றி இருப்போமே!
- āyātika
- ءَايَٰتِكَ
- Your Verses
- உனது வசனங்களை
- wanakūna
- وَنَكُونَ
- and we (would) have been
- நாங்கள்ஆகியிருப்போமே
- mina l-mu'minīna
- مِنَ ٱلْمُؤْمِنِينَ
- of the believers?"
- நம்பிக்கையாளர்களில்
Transliteration:
Wa law laaa an tuseebahum museebatum bimaa qaddamat aideehim fa yaqooloo Rabbanaa law laaa arsalta ilainaa Rasoolan fanattabi'a Aayaatika wa nakoona minal mu'mineen(QS. al-Q̈aṣaṣ:47)
English Sahih International:
And if not that a disaster should strike them for what their hands put forth [of sins] and they would say, "Our Lord, why did You not send us a messenger so we could have followed Your verses and been among the believers?"... (QS. Al-Qasas, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
(நபியே! உங்களுடைய மக்களாகிய) இவர்களின் கைகள் செய்த (தீய) செயலின் காரணமாக இவர்களை யாதொரு வேதனை வந்தடையும் சமயத்தில் "எங்கள் இறைவனே! எங்களிடம் உன்னுடைய ஒரு தூதரை அனுப்பி வைக்க வேண்டாமா? (அவ்வாறு நீ அனுப்பியிருந்தால்) உன்னுடைய வசனங்களை நாங்கள் பின்பற்றி உன்னை நம்பிக்கை கொண்டிருப்போமே" என்று கூறாதிருக்கும் பொருட்டே (உங்களை நம்முடைய தூதராக இவர்களிடம் அனுப்பி வைத்தோம்.) (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௪௭)
Jan Trust Foundation
அவர்களுடைய கைகள் செய்து முற்படுத்திய (தீ)வினை காரணமாக, அவர்களுக்கு ஏதேனும் சோதனை வரும்போது அவர்கள்| “எங்கள் இறைவா! நீ எங்களுக்குத் தூதர் ஒருவரை அனுப்பிவைத்திருக்க வேண்டாமா? அப்போது நாங்கள் உன் வசனங்களை பின்பற்றி நாங்களும் முஃமின்களில் உள்ளவர்களாகியிருப்போமே!” என்று கூறாதிருக்கும் பொருட்டும் (உம்மை அவர்களிடையே தூதராக அனுப்பினோம்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களின் கரங்கள் முற்படுத்தியதால் அவர்களுக்கு ஒரு சோதனை (தண்டனை ஒன்று) ஏற்பட்டு, (பிறகு) எங்கள் இறைவா! நீ எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி இருக்கக்கூடாதா? நாங்கள் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே! நம்பிக்கையாளர்களில் நாங்கள் ஆகியிருப்போமே! என்று அவர்கள் கூறாதிருப்பதற்காக (உம்மை அவர்களுக்கு தூதராக அனுப்பினோம். இல்லை என்றால் உம்மை தூதராக அனுப்புவதற்கு முன்னரே நாம் அவர்களை தண்டித்திருப்போம்.)