Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௬

Qur'an Surah Al-Qasas Verse 46

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّوْرِ اِذْ نَادَيْنَا وَلٰكِنْ رَّحْمَةً مِّنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّآ اَتٰىهُمْ مِّنْ نَّذِيْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ (القصص : ٢٨)

wamā kunta
وَمَا كُنتَ
And not you were
நீர் இருக்கவில்லை
bijānibi
بِجَانِبِ
at (the) side
அருகில்
l-ṭūri
ٱلطُّورِ
(of) the Tur
மலைக்கு
idh nādaynā
إِذْ نَادَيْنَا
when We called
நாம் அழைத்தபோது
walākin
وَلَٰكِن
But
எனினும்
raḥmatan
رَّحْمَةً
(as) a mercy
அருளினால்
min rabbika
مِّن رَّبِّكَ
from your Lord
உமது இறைவனின்
litundhira
لِتُنذِرَ
so that you warn
ஏனெனில், நீர் எச்சரிக்க வேண்டும்
qawman
قَوْمًا
a people
ஒரு மக்களை
mā atāhum
مَّآ أَتَىٰهُم
not (had) come to them
அவர்களிடம் வரவில்லை
min nadhīrin
مِّن نَّذِيرٍ
any warner
எச்சரிப்பாளர் எவரும்
min qablika
مِّن قَبْلِكَ
before you before you
உமக்கு முன்னர்
laʿallahum yatadhakkarūna
لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
so that they may remember
அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக

Transliteration:

Wa maa kunta bijaanibit Toori iz naadainaa wa laakir rahmatam mir Rabbika litunzira qawmam maaa ataahum min nazeerim min qablika la'allahum yatazakkaroon (QS. al-Q̈aṣaṣ:46)

English Sahih International:

And you were not at the side of the mount when We called [Moses] but [were sent] as a mercy from your Lord to warn a people to whom no warner had come before you that they might be reminded. (QS. Al-Qasas, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

அன்றி, (தூர் ஸீனாய் என்னும் மலைக்கு மூஸாவை) நாம் அழைத்த பொழுது (அந்தத்) தூர் (என்னும்) மலையின் சார்பிலும் நீங்கள் இருக்கவில்லை. எனினும், உங்களுக்கு முன்னர் நம்முடைய யாதொரு தூதருமே வராத (இந்த) மக்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் பொருட்டே உங்கள் இறைவனின் அருளால் (இவ்விஷயம் உங்களுக்கு அறிவிக்கப்பட்டது.) அவர்கள் (இதைக்கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவார்களாக! (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௪௬)

Jan Trust Foundation

இன்னும் நாம் (மூஸாவை) அழைத்தபோது, நீர் தூர் மலையின் பக்கத்தில் இருக்கவுமில்லை; எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அந்த) மலைக்கு அருகில் நாம் (மூசாவை) அழைத்த போது நீர் (அங்கு) இருக்கவில்லை. எனினும், (முந்திய நபிமார்களின் வரலாறுகளை உமக்கு நாம் எடுத்துக்கூறியதும் உம்மை இவர்களுக்கு தூதராக அனுப்பியதும்) உமது இறைவனின் அருளினால் ஆகும். ஏனெனில், நீர் ஒரு மக்களை -அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக- எச்சரிக்க வேண்டும். உமக்கு முன்னர் அவர்களிடம் எச்சரிப்பாளர் எவரும் வரவில்லை.