Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௫

Qur'an Surah Al-Qasas Verse 45

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلٰكِنَّآ اَنْشَأْنَا قُرُوْنًا فَتَطَاوَلَ عَلَيْهِمُ الْعُمُرُۚ وَمَا كُنْتَ ثَاوِيًا فِيْٓ اَهْلِ مَدْيَنَ تَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِنَاۙ وَلٰكِنَّا كُنَّا مُرْسِلِيْنَ (القصص : ٢٨)

walākinnā
وَلَٰكِنَّآ
But We
என்றாலும்
anshanā
أَنشَأْنَا
[We] produced
நாம்உருவாக்கினோம்
qurūnan
قُرُونًا
generations
பல தலைமுறையினரை
fataṭāwala
فَتَطَاوَلَ
and prolonged
நீண்டு சென்றது
ʿalayhimu
عَلَيْهِمُ
for them
அவர்களுக்கு
l-ʿumuru
ٱلْعُمُرُۚ
the life
காலம்
wamā kunta
وَمَا كُنتَ
And not you were
இன்னும் நீர் இல்லை
thāwiyan
ثَاوِيًا
a dweller
தங்கியவராக
fī ahli madyana
فِىٓ أَهْلِ مَدْيَنَ
among (the) people (of) Madyan
மத்யன் வாசிகளுடன்
tatlū
تَتْلُوا۟
reciting
நீர் ஓதியவராக
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் மீது
āyātinā
ءَايَٰتِنَا
Our Verses
நமது வசனங்களை
walākinnā
وَلَٰكِنَّا
but We
என்றாலும் நாம்தான்
kunnā
كُنَّا
[We] were
இருந்தோம்
mur'silīna
مُرْسِلِينَ
the Senders
தூதர்களை அனுப்பக்கூடியவர்களாக

Transliteration:

Wa laakinnaa anshaanaa quroonan fatataawala 'alaihimul 'umur; wa maa kunta saawiyan feee ahli Madyana tatloo 'alaihim Aayaatinaa wa laakinnaa kunnaa mursileen (QS. al-Q̈aṣaṣ:45)

English Sahih International:

But We produced [many] generations [after Moses], and prolonged was their duration. And you were not a resident among the people of Madyan, reciting to them Our verses, but We were senders [of this message]. (QS. Al-Qasas, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

எனினும், (அவர்களுக்குப் பின்னர்) எத்தனையோ வகுப்பினரை நாம் உற்பத்தி செய்தோம். அவர்கள் சென்றும் நீண்ட காலம் ஆகிவிட்டது. (அவ்வாறிருந்தும் மூஸாவைப் பற்றிய இவ்வளவு உண்மையான சரித்திரத்தை நீங்கள் கூறுவதெல்லாம் இறைவனால் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதால்தான் என்று இவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?) அன்றி, (நபியே!) மத்யன் வாசிகளிடமும் நீங்கள் தங்கியிருக்கவில்லை. (அவ்வாறிருந்தும் அவர்களைப் பற்றிய) நம்முடைய வசனங்களை நீங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கின்றீர்கள். ஆகவே, நிச்சயமாக நாம் உங்களை நம் தூதர்களில் ஒருவராகவே அனுப்பி வைத்திருக்கின்றோம். (நம்முடைய வஹீ மூலம் கிடைத்த விஷயங்களையே நீங்கள் அவர்களுக்கு அறிவிக்கின்றீர்கள்.) (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௪௫)

Jan Trust Foundation

எனினும் (அவர்களுக்குப் பின்) நாம் அநேக தலைமுறையினர்களை உண்டாக்கினோம்; அவர்கள்மீது காலங்கள் பல கடந்து விட்டன; அன்றியும் நீர் மத்யன் வாசிகளிடம் வசிக்கவுமில்லை; அவர்களுக்கு நம் வசனங்களை நீர் ஓதிக் காண்பிக்கவுமில்லை; எனினும் நாம் தூதர்களை அனுப்பி வைப்போராகவே இருந்தோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என்றாலும், பல தலைமுறையினரை (அவருக்குப் பின்) நாம் உருவாக்கினோம். அவர்களுக்கு காலம் நீண்டு சென்றது. (ஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்கை மறந்தனர்.) இன்னும் (நபியே!) நீர் மத்யன் வாசிகளுடன் தங்கி(யவராகவும்) அவர்கள் மீது நமது வசனங்களை நீர் ஓதியவராக(வும்) இல்லை. (இவற்றில் எந்த ஒரு சம்பவத்திலும் நீர் உடன் இருக்கவில்லை.) என்றாலும் (நாம்தான் அவற்றை எல்லாம் செய்தோம். இன்னும்) தூதர்களை அனுப்பக்கூடியவர்களாக நாம்தான் இருந்தோம்.