குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௪
Qur'an Surah Al-Qasas Verse 44
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِيِّ اِذْ قَضَيْنَآ اِلٰى مُوْسَى الْاَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشّٰهِدِيْنَ ۙ (القصص : ٢٨)
- wamā kunta
- وَمَا كُنتَ
- And not you were
- நீர் இருக்கவில்லை
- bijānibi
- بِجَانِبِ
- on (the) side
- பக்கத்தில்
- l-gharbiyi
- ٱلْغَرْبِىِّ
- western
- மேற்கு
- idh qaḍaynā
- إِذْ قَضَيْنَآ
- when We decreed
- நாம் ஒப்படைத்த போது
- ilā mūsā
- إِلَىٰ مُوسَى
- to Musa
- மூஸாவிடம்
- l-amra
- ٱلْأَمْرَ
- the Commandment
- சட்டங்களை
- wamā kunta
- وَمَا كُنتَ
- and not you were
- நீர் இருக்கவில்லை
- mina l-shāhidīna
- مِنَ ٱلشَّٰهِدِينَ
- among the witnesses
- இருந்தவர்களில்
Transliteration:
Wa maa kunta bijaanibil gharbiyyi iz qadainaaa ilaa Moosal amra wa maa kunta minash shaahideen(QS. al-Q̈aṣaṣ:44)
English Sahih International:
And you, [O Muhammad], were not on the western side [of the mount] when We revealed to Moses the command, and you were not among the witnesses [to that]. (QS. Al-Qasas, Ayah ௪௪)
Abdul Hameed Baqavi:
(நபியே! தூர் ஸீனாய் என்னும் மலையில்) நாம் மூஸாவுக்குக் (கற்பலகையில் எழுதப்பட்ட) கட்டளைகளை விதித்தபோது நீங்கள் அதன் மேற்குத் திசையில் இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் நீங்கள் ஒருவருமல்ல. (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௪௪)
Jan Trust Foundation
மேலும், நாம் மூஸாவுக்குக் கட்டளைகளைக் கடமையாக்கிய சமயம் நீர் (தூர் மலைக்கு) மேற்குத் திசையில் இருக்கவில்லை; (அந்நிகழ்வைப்) பார்ப்பவர்களில் ஒருவராகவும் நீர் இருக்கவில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மூசாவிடம் நாம் (தூதுத்துவத்தையும் பல) சட்டங்களை(யும்) ஒப்படைத்த போது. (மலையின்) மேற்கு பக்கத்தில் (நபியே!) நீர் இருக்கவில்லை. (இன்னும் அவருடன்) இருந்தவர்களில் நீர் இருக்கவில்லை. (அப்படி இருந்தும் மூசாவைப் பற்றிய வரலாற்றை நீங்கள் உண்மையாகக் கூறுகிறீர்கள். ஆகவே, உமது தூதுத்துவத்தை இந்த மக்கள் எப்படி மறுக்கமுடியும்?)