Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪௩

Qur'an Surah Al-Qasas Verse 43

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ مِنْۢ بَعْدِ مَآ اَهْلَكْنَا الْقُرُوْنَ الْاُوْلٰى بَصَاۤىِٕرَ لِلنَّاسِ وَهُدًى وَّرَحْمَةً لَّعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ (القصص : ٢٨)

walaqad
وَلَقَدْ
And verily
திட்டவட்டமாக
ātaynā
ءَاتَيْنَا
We gave
நாம் தந்தோம்
mūsā
مُوسَى
Musa
மூஸாவிற்கு
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Scripture
வேதத்தை
min baʿdi
مِنۢ بَعْدِ
after [what] after [what]
பின்னர்
mā ahlaknā
مَآ أَهْلَكْنَا
after [what] We had destroyed
நாம் அழித்த
l-qurūna
ٱلْقُرُونَ
the generations
தலைமுறையினர்களை
l-ūlā
ٱلْأُولَىٰ
former
முந்திய(வர்கள்)
baṣāira
بَصَآئِرَ
(as) an enlightenment
ஒளியாகவும்
lilnnāsi
لِلنَّاسِ
for the mankind
மக்களுக்கு
wahudan
وَهُدًى
and a guidance
நேர்வழியாகவும்
waraḥmatan
وَرَحْمَةً
and mercy
கருணையாகவும்
laʿallahum yatadhakkarūna
لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
that they may remember
அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும்

Transliteration:

Wa laqad aatainaa Moosal Kitaaba mim ba'di maaa ahlaknal quroonal oolaa basaaa'ira linnaasi wa hudanw wa rahmatal la'allahum yata zakkkaroon (QS. al-Q̈aṣaṣ:43)

English Sahih International:

And We gave Moses the Scripture, after We had destroyed the former generations, as enlightenment for the people and guidance and mercy that they might be reminded. (QS. Al-Qasas, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

(அவர்களுக்கு) முன்னிருந்த வகுப்பார்களையும் நாம் அழித்துவிட்ட பின்னர் (அவர்களுடைய வேதங்களும் அழிந்து விட்டதனால்) நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்தோம். அது மனிதர்களுக்கு நல்ல படிப்பினை தரக் கூடியதாகவும், நேரான வழியாகவும், அருளாகவும் இருந்தது. அவர்கள் (அதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே (கொடுத்தோம்). (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௪௩)

Jan Trust Foundation

இன்னும், முந்தைய தலைமுறையார்களை நாம் அழித்தபின் திடனாக மூஸாவுக்கு(த் தவ்ராத்) வேதத்தைக் கொடுத்தோம் - மனிதர் (சிந்தித்து) உபதேசம் பெறும் பொருட்டு அவர்களுக்கு ஞானப்பிரகாசங்களாகவும், நேர்வழி காட்டியாகவும் அருட் கொடையாகவும் (அது இருந்தது).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

முந்திய தலைமுறையினர்களை நாம் அழித்த பின்னர் மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் கருணையாகவும் மூசாவிற்கு நாம் திட்ட வட்டமாக வேதத்தை தந்தோம். அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும்.