குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௪
Qur'an Surah Al-Qasas Verse 4
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ فِرْعَوْنَ عَلَا فِى الْاَرْضِ وَجَعَلَ اَهْلَهَا شِيَعًا يَّسْتَضْعِفُ طَاۤىِٕفَةً مِّنْهُمْ يُذَبِّحُ اَبْنَاۤءَهُمْ وَيَسْتَحْيٖ نِسَاۤءَهُمْ ۗاِنَّهٗ كَانَ مِنَ الْمُفْسِدِيْنَ (القصص : ٢٨)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- Firaun
- ஃபிர்அவ்ன்
- ʿalā
- عَلَا
- exalted himself
- பலவந்தப்படுத்தினான்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the land
- பூமியில்
- wajaʿala
- وَجَعَلَ
- and made
- இன்னும் ஆக்கினான்
- ahlahā
- أَهْلَهَا
- its people
- அங்குள்ளவர்களை
- shiyaʿan
- شِيَعًا
- (into) sects
- பல பிரிவுகளாக
- yastaḍʿifu
- يَسْتَضْعِفُ
- oppressing
- பலவீனப்படுத்தினான்
- ṭāifatan
- طَآئِفَةً
- a group
- ஒரு வகுப்பாரை
- min'hum
- مِّنْهُمْ
- among them
- அவர்களில்
- yudhabbiḥu
- يُذَبِّحُ
- slaughtering
- கொன்றான்
- abnāahum
- أَبْنَآءَهُمْ
- their sons
- ஆண் பிள்ளைகளை அவர்களின்
- wayastaḥyī
- وَيَسْتَحْىِۦ
- and letting live
- வாழவிட்டான்
- nisāahum
- نِسَآءَهُمْۚ
- their women
- அவர்களின் பெண்களை
- innahu
- إِنَّهُۥ
- Indeed he
- நிச்சயமாக அவன்
- kāna
- كَانَ
- was
- இருந்தான்
- mina l-muf'sidīna
- مِنَ ٱلْمُفْسِدِينَ
- of the corrupters
- கெட்டவர்களில் ஒருவனாக
Transliteration:
Inna Fir'awna 'alaa fil ardi wa ja'ala ahlahaa shiya'ai yastad'ifu taaa'ifatam minhum yuzabbihu abnaaa'ahum wa yastahyee nisaaa'ahum; innahoo kaana minal mufsideen(QS. al-Q̈aṣaṣ:4)
English Sahih International:
Indeed, Pharaoh exalted himself in the land and made its people into factions, oppressing a sector among them, slaughtering their [newborn] sons and keeping their females alive. Indeed, he was of the corrupters. (QS. Al-Qasas, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் பெருமை கொண்டு, அதில் உள்ளவர்களைப் பல வகுப்புக்களாகப் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு அவர்களுடைய ஆண் மக்களைக் கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழ வைத்து வந்தான். மெய்யாகவே (இவ்வாறு) அவன் விஷமம் செய்பவனாக இருந்தான். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௪)
Jan Trust Foundation
நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக ஃபிர்அவ்ன் (எகிப்து) பூமியில் (மக்களை) பலவந்தப்படுத்தினான். அங்குள்ளவர்களை பல பிரிவுகளாக ஆக்கினான். அவர்களில் ஒரு வகுப்பாரை பலவீனப்படுத்தி (அவர்களை துன்புறுத்தி)னான். அவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்றான். அவர்களின் பெண் (பிள்ளை)களை வாழவிட்டான். நிச்சயமாக அவன் கெட்டவர்களில் ஒருவனாக இருந்தான்.