Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௩௮

Qur'an Surah Al-Qasas Verse 38

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ فِرْعَوْنُ يٰٓاَيُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرِيْۚ فَاَوْقِدْ لِيْ يٰهَامٰنُ عَلَى الطِّيْنِ فَاجْعَلْ لِّيْ صَرْحًا لَّعَلِّيْٓ اَطَّلِعُ اِلٰٓى اِلٰهِ مُوْسٰىۙ وَاِنِّيْ لَاَظُنُّهٗ مِنَ الْكٰذِبِيْنَ (القصص : ٢٨)

waqāla
وَقَالَ
And Firaun said
கூறினான்
fir'ʿawnu
فِرْعَوْنُ
And Firaun said
ஃபிர்அவ்ன்
yāayyuhā l-mala-u
يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ
"O chiefs! "O chiefs!
பிரமுகர்களே!
mā ʿalim'tu
مَا عَلِمْتُ
Not I know
நான் அறியமாட்டேன்
lakum
لَكُم
for you
உங்களுக்கு (இருப்பதை)
min ilāhin
مِّنْ إِلَٰهٍ
any god
ஒரு கடவுள்
ghayrī
غَيْرِى
other than me
என்னை அன்றி
fa-awqid lī
فَأَوْقِدْ لِى
So kindle for me
ஆகவே, நெருப்பூட்டு/எனக்காக
yāhāmānu
يَٰهَٰمَٰنُ
O Haman!
ஹாமானே!
ʿalā l-ṭīni
عَلَى ٱلطِّينِ
Upon the clay
குழைத்தகளிமண்ணை
fa-ij'ʿal
فَٱجْعَل
and make
உருவாக்கு
لِّى
for me
எனக்காக
ṣarḥan
صَرْحًا
a lofty tower
முகடுள்ள ஓர் உயரமான கோபுரத்தை
laʿallī aṭṭaliʿu
لَّعَلِّىٓ أَطَّلِعُ
so that [I] I may look
நான் தேடிப்பார்க்க வேண்டும்
ilā ilāhi
إِلَىٰٓ إِلَٰهِ
at (the) God
கடவுளை
mūsā
مُوسَىٰ
(of) Musa
மூஸாவின்
wa-innī
وَإِنِّى
And indeed, I
இன்னும் நிச்சயமாக நான்
la-aẓunnuhu
لَأَظُنُّهُۥ
[I] think that he
அவரை கருதுகிறேன்
mina l-kādhibīna
مِنَ ٱلْكَٰذِبِينَ
(is) of the liars"
பொய்யர்களில் (ஒருவராக)

Transliteration:

Wa qaala Fir'awnu yaaa aiyuhal mala-u maa 'alimtu lakum min ilaahin ghairee fa awqid lee yaa Haamaanu 'alatteeni faj'al lee sarhal la'alleee attali'u ilaaa ilaahi Moosaa wa innee la azunnuhoo minal kaazibeen (QS. al-Q̈aṣaṣ:38)

English Sahih International:

And Pharaoh said, "O eminent ones, I have not known you to have a god other than me. Then ignite for me, O Haman, [a fire] upon the clay and make for me a tower that I may look at the God of Moses. And indeed, I do think he is among the liars." (QS. Al-Qasas, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

அதற்கு ஃபிர்அவ்ன் (தன் மக்களில் உள்ள தலைவர்களை நோக்கி) "தலைவர்களே! என்னைத் தவிர வேறொரு இறைவன் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஹாமானே! களிமண்(ணால் செய்த செங்கல்) சூளைக்கு நெருப்பு வை. (அச் செங்கற்களைக் கொண்டு வானளாவ) மாளிகையை நீ கட்டு. (அதில் ஏறி) மூஸாவினுடைய இறைவனை நான் பார்க்க வேண்டும். (அவர் தனக்கு வேறு இறைவன் இருப்பதாகக் கூறுகிறாரே!) இவ் விஷயத்தில் நிச்சயமாக அவர் பொய் சொல்வதாகவே நான் எண்ணுகிறேன்" என்று கூறினான். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௩௮)

Jan Trust Foundation

இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்| “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் - மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஃபிர்அவ்ன் கூறினான்: “பிரமுகர்களே! என்னை அன்றி (வேறு) ஒரு கடவுள் உங்களுக்கு இருப்பதை நான் அறியமாட்டேன். ஆகவே, ஹாமானே! குழைத்த களிமண்ணை நெருப்பூட்டி செங்கல்லாக செய். முகடுள்ள ஒரு உயரமான கோபுரத்தை எனக்காக உருவாக்கு. நான் மூசாவின் கடவுளை (வானத்தில்) தேடிப்பார்க்க வேண்டும். இன்னும், நான் அவரை பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறேன்.” (அவ்வாறு ஒரு கட்டிடம் கட்டப்பட்டு, அதில் ஏறி, வானத்தை நோக்கி அவன் அம்பெறிய, அது இரத்தக் கரையுடன் திரும்பி வந்தவுடன், நான் மூசாவின் இறைவனை கொன்றுவிட்டேன் என்றான்.)