Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௩௬

Qur'an Surah Al-Qasas Verse 36

ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا جَاۤءَهُمْ مُّوْسٰى بِاٰيٰتِنَا بَيِّنٰتٍ قَالُوْا مَا هٰذَآ اِلَّا سِحْرٌ مُّفْتَرًىۙ وَّمَا سَمِعْنَا بِهٰذَا فِيْٓ اٰبَاۤىِٕنَا الْاَوَّلِيْنَ (القصص : ٢٨)

falammā
فَلَمَّا
But when
ஆகவே, வந்தபோது
jāahum
جَآءَهُم
came to them
அவர்களிடம்
mūsā
مُّوسَىٰ
Musa
மூசா
biāyātinā
بِـَٔايَٰتِنَا
with Our Signs
நமது அத்தாட்சிகளுடன்
bayyinātin
بَيِّنَٰتٍ
clear
தெளிவான
qālū
قَالُوا۟
they said
அவர்கள் கூறினர்
مَا
"Not
இல்லை
hādhā
هَٰذَآ
(is) this
இது
illā
إِلَّا
except
தவிர
siḥ'run
سِحْرٌ
a magic
சூனியமே
muf'taran
مُّفْتَرًى
invented
இட்டுக்கட்டப்பட்ட
wamā samiʿ'nā
وَمَا سَمِعْنَا
and not we heard
நாங்கள் கேள்விப்பட்டதில்லை
bihādhā
بِهَٰذَا
of this
இதைப் பற்றி
fī ābāinā
فِىٓ ءَابَآئِنَا
among our forefathers"
எங்கள் மூதாதைகளில்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
our forefathers"
முந்திய(வர்கள்)

Transliteration:

Falammaa jaaa'ahum Moosaa bi Aayaatinaa baiyinaatin qaaloo maa haazaaa illaa sihrum muftaranw wa maa sami'naa bihaazaa feee aabaaa'inal awwaleen (QS. al-Q̈aṣaṣ:36)

English Sahih International:

But when Moses came to them with Our signs as clear evidences, they said, "This is not except invented magic, and we have not heard of this [religion] among our forefathers." (QS. Al-Qasas, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் மூஸா அவர்களிடம் வந்தபொழுது அவர்கள் "இது சூனியத்தைத் தவிர வேறில்லை. முன்னிருந்த எங்கள் மூதாதைகளிடத்திலும் இத்தகைய விஷயத்தை நாம் கேள்விப்படவில்லை" என்று கூறினார்கள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௩௬)

Jan Trust Foundation

ஆகவே, மூஸா அவர்களிடம் நம்முடைய தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள்| “இது இட்டுக் கட்டப்பட்ட சூனியமே அன்றி வேறில்லை; இன்னும் நம்முடைய முன்னோர்களான நம் மூதாதையர்களிடத்திலும் இதைக் கேள்விப்பட்டதில்லை” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆகவே, நமது தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் மூசா வந்தபோது அவர்கள் கூறினர்: “இது (நீர்) இட்டுக்கட்டப்பட்ட சூனியமே தவிர (வேறு) இல்லை. எங்கள் முந்திய மூதாதைகளில் இதைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை.