குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௩௫
Qur'an Surah Al-Qasas Verse 35
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِاَخِيْكَ وَنَجْعَلُ لَكُمَا سُلْطٰنًا فَلَا يَصِلُوْنَ اِلَيْكُمَا ۛبِاٰيٰتِنَا ۛ اَنْتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغٰلِبُوْنَ (القصص : ٢٨)
- qāla
- قَالَ
- He said
- அவன் கூறினான்
- sanashuddu
- سَنَشُدُّ
- "We will strengthen
- பலப்படுத்துவோம்
- ʿaḍudaka
- عَضُدَكَ
- your arm
- உமது புஜத்தை
- bi-akhīka
- بِأَخِيكَ
- through your brother
- உமது சகோதரரைக் கொண்டு
- wanajʿalu
- وَنَجْعَلُ
- and We will make
- இன்னும் ஆக்குவோம்
- lakumā
- لَكُمَا
- for both of you
- உம் இருவருக்கும்
- sul'ṭānan
- سُلْطَٰنًا
- an authority
- ஓர் அத்தாட்சியை
- falā yaṣilūna
- فَلَا يَصِلُونَ
- so not they will reach
- ஆகவே அவர்கள் வரமுடியாது
- ilaykumā
- إِلَيْكُمَاۚ
- to both of you
- உங்கள் இருவர் பக்கம்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَآ
- Through Our Signs
- நமது அத்தாட்சிகளைக் கொண்டு
- antumā
- أَنتُمَا
- you two
- நீங்கள் இருவரும்
- wamani ittabaʿakumā
- وَمَنِ ٱتَّبَعَكُمَا
- and (those) who follow you
- உங்கள் இருவரை பின்பற்றினார்(கள்)/எவர்கள்
- l-ghālibūna
- ٱلْغَٰلِبُونَ
- (will) be the dominant"
- மிகைத்தவர்கள்
Transliteration:
Qaala sanashuddu 'adudaka bi akheeka wa naj'alu lakumaa sultaanan falaa yasiloona ilaikumaa; bi Aayaatinaa antumaa wa manit taba'akumal ghaaliboon(QS. al-Q̈aṣaṣ:35)
English Sahih International:
[Allah] said, "We will strengthen your arm through your brother and grant you both supremacy so they will not reach you. [It will be] through Our signs; you and those who follow you will be the predominant." (QS. Al-Qasas, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
அதற்கு இறைவன் "உங்கள் சகோதரரைக் கொண்டு உங்கள் தோள்களை நாம் வலுப்படுத்துவோம். நாம் உங்களுக்கு வெற்றியையும் தருவோம். அவர்கள் உங்களை நெருங்கவும் முடியாது. நீங்கள் நம்முடைய (இந்த) அத்தாட்சிகளுடன் (தயக்கமின்றிச் செல்லுங்கள்.) நீங்களும் உங்கள் இருவரைப் பின்பற்றியவர்களும்தான் வெற்றி பெருவீர்கள்" என்று கூறினான். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௩௫)
Jan Trust Foundation
(அல்லாஹ்) கூறினான்| “நாம் உம் கையை உம் சகோதரரைக் கொண்டு வலுப்படுத்துவோம்; நாம் உங்கள் இருவருக்குமே வெற்றியளிப்போம்; ஆகவே, அவர்கள் உங்களிருவரையும் நெருங்கவும் முடியாது; நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு, நீங்களிருவரும், உங்களைப் பின்பற்றுவோரும் மிகைத்து விடுவீர்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன் (-அல்லாஹ்) கூறினான்: உமது புஜத்தை உமது சகோதரரைக் கொண்டு பலப்படுத்துவோம். உம் இருவருக்கும் ஓர் அத்தாட்சியை ஆக்குவோம். ஆகவே, அவர்கள் உங்கள் இருவர் பக்கம் (எந்த தீங்கையும் கொண்டு) வரமுடியாது. நீங்கள் இருவரும் உங்களை பின்பற்றியவர்களும் தான் நமது அத்தாட்சிகளைக் கொண்டு (ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும்) மிகைத்தவர்கள்.