குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௩௨
Qur'an Surah Al-Qasas Verse 32
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُسْلُكْ يَدَكَ فِيْ جَيْبِكَ تَخْرُجْ بَيْضَاۤءَ مِنْ غَيْرِ سُوْۤءٍ ۖوَّاضْمُمْ اِلَيْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ فَذٰنِكَ بُرْهَانٰنِ مِنْ رَّبِّكَ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ىِٕهٖۗ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ (القصص : ٢٨)
- us'luk
- ٱسْلُكْ
- Insert
- நுழைப்பீராக!
- yadaka
- يَدَكَ
- your hand
- உமது கையை
- fī jaybika
- فِى جَيْبِكَ
- in your bosom
- உமது சட்டைப் பையில்
- takhruj
- تَخْرُجْ
- it will come forth
- அது வெளிவரும்
- bayḍāa
- بَيْضَآءَ
- white
- வெண்மையாக
- min ghayri
- مِنْ غَيْرِ
- without without
- இன்றி
- sūin
- سُوٓءٍ
- any harm
- குறை
- wa-uḍ'mum
- وَٱضْمُمْ
- And draw
- அணைப்பீராக!
- ilayka
- إِلَيْكَ
- to yourselves
- உம்முடன்
- janāḥaka
- جَنَاحَكَ
- your hand
- உமது கையை
- mina l-rahbi
- مِنَ ٱلرَّهْبِۖ
- against fear
- பயந்துவிட்டதால்
- fadhānika
- فَذَٰنِكَ
- So these
- ஆக,இவைஇரண்டும்
- bur'hānāni
- بُرْهَٰنَانِ
- (are) two evidences
- இரண்டு அத்தாட்சிகளாகும்
- min
- مِن
- from
- புறத்திலிருந்து
- rabbika
- رَّبِّكَ
- your Lord
- உமது இறைவன்
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- Firaun
- ஃபிர்அவ்ன்
- wamala-ihi
- وَمَلَإِي۟هِۦٓۚ
- and his chiefs
- இன்னும் அவனது பிரமுகர்கள்
- innahum
- إِنَّهُمْ
- Indeed, they
- நிச்சயமாக அவர்கள்
- kānū
- كَانُوا۟
- are
- இருக்கின்றனர்
- qawman
- قَوْمًا
- a people
- மக்களாக
- fāsiqīna
- فَٰسِقِينَ
- defiantly disobedient"
- பாவிகளான
Transliteration:
Usluk yadaka fee jaibika takhruj baidaaa'a min ghairi sooo'inw wadmum ilaika janaahaka minar rahbi fazaanika burhaanaani mir Rabbika ilaa Fiw'awna wa mala'ih; innahum kaanoo qawman faasiqeen(QS. al-Q̈aṣaṣ:32)
English Sahih International:
Insert your hand into the opening of your garment; it will come out white, without disease. And draw in your arm close to you [as prevention] from fear, for those are two proofs from your Lord to Pharaoh and his establishment. Indeed, they have been a people defiantly disobedient." (QS. Al-Qasas, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
உங்களுடைய சட்டைப் பையில் உங்களுடைய கையைப் புகுத்துங்கள். அது மாசற்ற பிரகாசமுள்ள வெண்மையாக வெளிப்படும். நீங்கள் பயப்படாதிருக்கும் பொருட்டு உங்களுடைய கைகளை உங்களுடைய விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஃபிர்அவ்னிடமும் அவனுடைய தலைவர்களிடமும் நீங்கள் செல்லும் பொருட்டு இவ்விரண்டும் உங்கள் இறைவனால் உங்களுக்கு அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் மக்களாக இருக்கிறார்கள்" (என்று அவருக்குக் கூறப்பட்டது). (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௩௨)
Jan Trust Foundation
உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்; அது ஒளி மிக்கதாய், மாசற்ற வெண்மையாக வெளிவரும்; இன்னும், நீர் அச்சப்படுங்காலை உம்முடைய கைகளை உம் விலாவில் சேர்த்துக் கொள்ளுங்கள் - இவ்விரண்டும் ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உரிய, உம் இறைவனால் அளிக்கப்பட்ட இரு அத்தாட்சிகளாகும்; நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருக்கின்றார்கள்” (என்றும் அவருக்கு கூறப்பட்டது).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது குறை இன்றி (மின்னும்) வெண்மையாக வெளிவரும். (பாம்பைப் பார்த்து நீர்) பயந்து விட்டதால் உமது கையை உம்முடன் அணைப்பீராக! (அந்த பயம் போய்விடும்.) ஆக, இவை இரண்டும் உமது இறைவன் புறத்திலிருந்து ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்கள் பக்கம் (நீர் நபியாக செல்வதற்குரிய) இரண்டு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருக்கின்றனர்.” (இவ்வாறு அல்லாஹ் மூசாவிடம் கூறினான்.)