குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௩௧
Qur'an Surah Al-Qasas Verse 31
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاَنْ اَلْقِ عَصَاكَ ۗفَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَاۤنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْۗ يٰمُوْسٰٓى اَقْبِلْ وَلَا تَخَفْۗ اِنَّكَ مِنَ الْاٰمِنِيْنَ (القصص : ٢٨)
- wa-an alqi
- وَأَنْ أَلْقِ
- And [that] throw
- இன்னும் எறிவீராக!
- ʿaṣāka
- عَصَاكَۖ
- your staff"
- உமது கைத்தடியை
- falammā raāhā
- فَلَمَّا رَءَاهَا
- But when he saw it
- ஆக, அவர் பார்த்தபோது/அதை
- tahtazzu
- تَهْتَزُّ
- moving
- நெளிவதாக
- ka-annahā
- كَأَنَّهَا
- as if it
- ஒரு போன்று/அது
- jānnun
- جَآنٌّ
- (were) a snake
- பாம்பை
- wallā
- وَلَّىٰ
- he turned
- திரும்பி ஓடினார்
- mud'biran
- مُدْبِرًا
- (in) flight
- புறமுதுகிட்டவராக
- walam yuʿaqqib
- وَلَمْ يُعَقِّبْۚ
- and (did) not return
- அவர் பார்க்கவில்லை
- yāmūsā
- يَٰمُوسَىٰٓ
- "O Musa!
- மூஸாவே!
- aqbil
- أَقْبِلْ
- Draw near
- முன்னே வருவீராக!
- walā takhaf
- وَلَا تَخَفْۖ
- and (do) not fear
- பயப்படாதீர்!
- innaka
- إِنَّكَ
- Indeed you
- நிச்சயமாக நீர்
- mina l-āminīna
- مِنَ ٱلْءَامِنِينَ
- (are) of the secure
- பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்
Transliteration:
Wa an alqi 'asaaka falam maa ra aahaa tahtazzu ka annnahaa jaaannunw wallaa mudbiranw wa lam yu'aqqib; yaa Moosaa aqbil wa laa takhaf innaka minal aamineen(QS. al-Q̈aṣaṣ:31)
English Sahih International:
And [he was told], "Throw down your staff." But when he saw it writhing as if it was a snake, he turned in flight and did not return. [Allah said], "O Moses, approach and fear not. Indeed, you are of the secure. (QS. Al-Qasas, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
(அன்றி) "நீங்கள் உங்களுடைய தடியை எறியுங்கள்" (என்றும் அவருக்குக் கூறப்பட்டது. அவ்வாறே அதனை அவர் எறியவே) அது பெரியதொரு பாம்பாகி நெளிவதைக் கண்ட அவர் (பயந்து) அதனைப் பின்தொடராது திரும்பி ஓடினார். (அச்சமயத்தில் அவரை நோக்கி) "மூஸாவே! பயப்படாது நீங்கள் முன் வாருங்கள்! நிச்சயமாக நீங்கள் அச்சமற்றவர். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௩௧)
Jan Trust Foundation
“உம் கைத்தடியைக் கீழே எறியும்” என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது)| “மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“இன்னும், உமது கைத்தடியை எறிவீராக!” ஆக, அவர் அது ஒரு பெரிய பாம்பைப்போன்று நெளிவதாக பார்த்தபோது புறமுதுகிட்டவராக திரும்பி ஓடினார். அவர் (பயத்தால் திரும்பி) பார்க்கவில்லை. “மூஸாவே! முன்னே வருவீராக! பயப்படாதீர்! நிச்சயமாக நீர் பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்.”