குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௨௯
Qur'an Surah Al-Qasas Verse 29
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ فَلَمَّا قَضٰى مُوْسَى الْاَجَلَ وَسَارَ بِاَهْلِهٖٓ اٰنَسَ مِنْ جَانِبِ الطُّوْرِ نَارًاۗ قَالَ لِاَهْلِهِ امْكُثُوْٓا اِنِّيْٓ اٰنَسْتُ نَارًا لَّعَلِّيْٓ اٰتِيْكُمْ مِّنْهَا بِخَبَرٍ اَوْ جَذْوَةٍ مِّنَ النَّارِ لَعَلَّكُمْ تَصْطَلُوْنَ (القصص : ٢٨)
- falammā
- فَلَمَّا
- Then when
- போது
- qaḍā
- قَضَىٰ
- Musa fulfilled
- முடித்தார்
- mūsā
- مُوسَى
- Musa fulfilled
- மூசா
- l-ajala
- ٱلْأَجَلَ
- the term
- தவணையை
- wasāra
- وَسَارَ
- and was traveling
- இன்னும் சென்றார்
- bi-ahlihi
- بِأَهْلِهِۦٓ
- with his family
- தனது குடும்பத்தினரோடு
- ānasa
- ءَانَسَ
- he saw
- பார்த்தார்
- min jānibi
- مِن جَانِبِ
- in (the) direction
- அருகில்
- l-ṭūri
- ٱلطُّورِ
- (of) Mount Tur
- மலையின்
- nāran
- نَارًا
- a fire
- நெருப்பை
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- li-ahlihi
- لِأَهْلِهِ
- to his family
- தனது குடும்பத்தினரிடம்
- um'kuthū
- ٱمْكُثُوٓا۟
- "Stay here
- நீங்கள் தாமதியுங்கள்
- innī
- إِنِّىٓ
- indeed, I
- நிச்சயமாக நான்
- ānastu
- ءَانَسْتُ
- [I] perceive
- நான் பார்த்தேன்
- nāran
- نَارًا
- a fire
- ஒரு நெருப்பை
- laʿallī ātīkum
- لَّعَلِّىٓ ءَاتِيكُم
- Perhaps I will bring you
- உங்களிடம் (கொண்டு) வருகிறேன்
- min'hā
- مِّنْهَا
- from there
- அதிலிருந்து
- bikhabarin
- بِخَبَرٍ
- some information
- ஒரு செய்தியை
- aw
- أَوْ
- or
- அல்லது
- jadhwatin
- جَذْوَةٍ
- a burning wood
- கங்கை
- mina l-nāri
- مِّنَ ٱلنَّارِ
- from the fire
- நெருப்பின்
- laʿallakum taṣṭalūna
- لَعَلَّكُمْ تَصْطَلُونَ
- so that you may warm yourselves"
- நீங்கள் குளிர்காய்வதற்காக
Transliteration:
Falammmaa qadaa Moosal ajala wa saara bi ahliheee aanasa min jaanibit Toori naaran qaala li ahlihim kusooo inneee aanastu naaral la 'alleee aateekum minhaa bikhabarin aw jazwatim minan naari la 'allakum tastaloon(QS. al-Q̈aṣaṣ:29)
English Sahih International:
And when Moses had completed the term and was traveling with his family, he perceived from the direction of the mount a fire. He said to his family, "Stay here; indeed, I have perceived a fire. Perhaps I will bring you from there [some] information or burning wood from the fire that you may warm yourselves." (QS. Al-Qasas, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
மூஸா தன்னுடைய தவணையை முழுமை செய்து (அவருடைய புதல்வியை திருமணம் செய்துகொண்டு) தன்னுடைய குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு சென்றபொழுது (ஓர் இரவு வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) தூர் ("ஸீனாய்" என்னும்) மலையின் பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டு, தன் குடும்பத்தினரை நோக்கி "நீங்கள் (சிறிது) தாமதித்து இருங்கள். நான் ஒரு நெருப்பைக் காண்கிறேன். நான் (அங்குச் சென்று நாம் செல்லவேண்டிய) பாதையைப் பற்றி யாதொரு தகவலை உங்களுக்குக் கொண்டு வரக்கூடும். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்கேனும் ஒரு எரி கொள்ளியைக் கொண்டு வருகிறேன்" என்று கூறினார். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௨௯)
Jan Trust Foundation
ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது; “தூர்” (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் “நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மூசா (அந்த) தவணையை முடித்து, தனது குடும்பத்தினரோடு (புறப்பட்டு) சென்றபோது மலையின் அருகில் நெருப்பைப் பார்த்தார். தனது குடும்பத்தினரிடம் கூறினார்: “நீங்கள் தாமதியுங்கள், நிச்சயமாக நான் ஒரு நெருப்பைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு செய்தியை அல்லது நீங்கள் குளிர்காய்வதற்காக நெருப்பின் கங்கை (-கொள்ளிக் கட்டையை) நான் உங்களிடம் கொண்டு வருகிறேன்.”