குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கஸஸ் வசனம் ௨௬
Qur'an Surah Al-Qasas Verse 26
ஸூரத்துல் கஸஸ் [௨௮]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَتْ اِحْدٰىهُمَا يٰٓاَبَتِ اسْتَأْجِرْهُ ۖاِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْاَمِيْنُ (القصص : ٢٨)
- qālat
- قَالَتْ
- Said
- கூறினாள்
- iḥ'dāhumā
- إِحْدَىٰهُمَا
- one of them
- அவ்விருவரில் ஒருத்தி
- yāabati
- يَٰٓأَبَتِ
- "O my father!
- என் தந்தையே
- is'tajir'hu
- ٱسْتَـْٔجِرْهُۖ
- Hire him
- அவரை பணியில் அமர்த்துவீராக!
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- khayra
- خَيْرَ
- (the) best
- சிறந்தவர்
- mani is'tajarta
- مَنِ ٱسْتَـْٔجَرْتَ
- whom you (can) hire
- எவர்கள்/பணியில் அமர்த்தினீர்
- l-qawiyu
- ٱلْقَوِىُّ
- (is) the strong
- பலசாலி
- l-amīnu
- ٱلْأَمِينُ
- the trustworthy"
- நம்பிக்கையளரான
Transliteration:
Qaalat ihdaahumaa yaaa abatis taajirhu inna khaira manistaajartal qawiyyul ameen(QS. al-Q̈aṣaṣ:26)
English Sahih International:
One of the women said, "O my father, hire him. Indeed, the best one you can hire is the strong and the trustworthy." (QS. Al-Qasas, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
(அத்தருணத்தில், அவ்விரு பெண்களில் ஒருத்தி தன் தந்தையை நோக்கி) "என் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். நீங்கள் கூலிக்கு அமர்த்தியவர் களிலேயே மிகச் சிறந்தவர் நம்பிக்கைக்குரிய (இந்த) பலசாலியே ஆவார்" என்று கூறினாள். (ஸூரத்துல் கஸஸ், வசனம் ௨௬)
Jan Trust Foundation
அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்; “என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக் கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்; நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக இவர் மிகவும் மேலானவர்; பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவ்விருவரில் ஒருத்தி கூறினாள்: என் தந்தையே! அவரை பணியில் அமர்த்துவீராக! நீர் பணியில் அமர்த்தியவர்களில் சிறந்தவர் (இந்த) நம்பிக்கையாளரான பலசாலி ஆவர்.